29.தண்டே
தண்டே னுண்டே வண்டார் வஞ்சேர்
தண்டார் மஞ்சுக் குழல்மானார்
தம்பா லன்பார் நெஞ்சே கொண்டே
சம்பா வஞ்சொற் றடிநாயேன்
மண்டா யந்தீ மென்கால் விண்டோய்
வண்கா யம்பொய்க் குடில்வேறாய்
வன்கா னம்போ யண்டா முன்பே
வந்தே நின்பொற் கழல்தாராய்
கொண்டா டும்பேர் கொண்டா டுஞ்சூர்
கொன்றாய் வென்றிக் குமரேசா
கொங்கார் வண்டார் பண்பா டுஞ்சீர்
குன்றா மன்றற் கிரியோனே
கண்டா கும்பா லுண்டா யண்டார்
கண்டா கந்தப் புயவேளே
கந்தா மைந்தா ரந்தோள் மைந்தா
கந்தா செந்திற் பெருமாளே.
- திருச்செந்தூர்
தண்டே னுண்டே வண்டார் வஞ்சேர்
தண்டார் மஞ்சுக் குழல்மானார்
தம்பா லன்பார் நெஞ்சே கொண்டே
சம்பா வஞ்சொற் றடிநாயேன்
மண்டா யந்தீ மென்கால் விண்டோய்
வண்கா யம்பொய்க் குடில்வேறாய்
வன்கா னம்போ யண்டா முன்பே
வந்தே நின்பொற் கழல்தாராய்
கொண்டா டும்பேர் கொண்டா டுஞ்சூர்
கொன்றாய் வென்றிக் குமரேசா
கொங்கார் வண்டார் பண்பா டுஞ்சீர்
குன்றா மன்றற் கிரியோனே
கண்டா கும்பா லுண்டா யண்டார்
கண்டா கந்தப் புயவேளே
கந்தா மைந்தா ரந்தோள் மைந்தா
கந்தா செந்திற் பெருமாளே.
- திருச்செந்தூர்
பதம் பிரித்து பதவுரை
தண் தேன் உண்டே வண்டு ஆர்வம் சேர்
தண் தார் மஞ்சு குழல் மானார்
தண் தேன் உண்டே = குளர்ந்த தேனைப் பருகி வண்டு ஆர்வம் சேர் = வண்டுகள் ஆசையுடன் மொய்க்கும் தண் தார்= குளிர்ந்த மலையை அணிந்த. மஞ்சு ஆர் = மேகம் போன்றகுழல் மானார் = கூந்தலை உடைய மாதர்கள்
தம் பால் அன்பால் நெஞ்சே கொண்டே
சம்பாவம் சொல் அடி நாயேன்
தம் பால் = இடத்தில் அன்பார் = அன்பு மிக்க நெஞ்சே கொண்டே = மனம் கொண்டு சம்பாவம் சொல் =நிகழ்ச்சிகளை எல்லாம் பேசுகின்ற அடி நாயேன் =நாய் போன்று அடிமையாகிய நான்.
மண் தோயம் தீ மென் கால் விண் தோய்
வண் காயம் பொய் குடில் வேறு ஆய்
மண் தோயம் தீ = மண், நீர், நெருப்பு மென் கால் = மெல்லிய காற்று விண் = ஆகாயம் (ஆகிய ஐந்து பூதங்களால்) தோய் =தோய்ந்துள்ள வண் = வளம் கொண்ட காயம் = (இந்த) உடல் பொய்க் குடில் = பொய்யான குடிசை வேறு ஆய் =நீங்கி (இறந்த உடன்).
வன் கானம் போய் அண்டா முன்பே
வந்தே நின் பொன் கழல் தாராய்
வன் கானம் போய் = கொடிய சுடு காட்டுக்குப் போய் அண்டா முன்பே = நெருங்குவதற்கு முன்பே வந்தே = (நீ) வந்து நின் பொன் கழல் தாராய் = உனது அழகிய திருவடியைத் தந்து அருளுக.
கொண்டாடும் பேர் கொண்டாடும் சூர்
கொன்றாய் வென்றி குமரேசா
கொண்டாடும் பேர் = தன்னைக் கொண்டாடிப் புகழ்கின்றவர்களை கொண்டுடும் சூர் = மகிழ்ந்துகொண்டாடுகின்ற சூரனை கொன்றாய் = அழித்தவனேவென்றிக் குமரேசா = வெற்றிக் குமரேசனே.
கொங்கு ஆர் வண்டார் பண்பாடும் சீர்
குன்றா மன்றல் கிரியோனே
கொங்கு ஆர் = பூந்தாதுக்களில நிறைந்த வண்டார் =வண்டுகள். பண் பாடும் = பண்களைப் பாடும் சீர் குன்றா =அழகு அல்லது சிறப்பு குலையாத மன்றல் கிரியோனே = நறு மணம் கொண்ட மலைகளுக்கு உரியவனே. அல்லது திருமணஞ்செய்து கொண்ட மலையாகிய வள்ளிமலையில் வாழ்பவரே
கண்டு ஆகும் பால் உண்டாய் அண்டர்
கண்டா கந்த புய வேளே
கண்டு ஆகும் = கற்கண்டைப் போல் இனிக்கும் பால் உண்டாய் = (உமா தேவியின்) திருமுலைப் பாலைப்பருகியவனே. அண்டார் = பகைவர்களை கண்டா = காயும் வீரனே கந்த = மணம் தங்கிய புய வேளே = புயங்களை உடையவனே.
கந்து ஆம் மைந்து ஆர் அம் தோள் மைந்தா
கந்தா செந்தில் பெருமாளே.
கந்து ஆம் = கம்பத்துக்கு இணையான மைந்து ஆர் அம் =வலிமை பொருந்திய அழகிய தோள் மைந்தா = தோள்களைஉடையவனே
கந்தா = கந்த சுவாமியே செந்தில் பெருமாளே =திருச்செந்தூரில் வீற்றிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை
தேனைப் பருகும் வண்டுகள் மொய்க்கும் மாலையை அணிந்த, கரு மேகம் போன்ற கூந்தலை உடைய விலை மாதர்கள் மீது மிக்க அன்பு கொண்டு, அவர்களுடன் பழகும் சம்பவங்களையே பேசும் அடி நாயேனாகிய நான், ஐம் பொறிகாளால் ஆகிய உடல் பொய்யானது என்பதை உணராமல், அவ்வுடல் உயிரினின்றும் பிரிந்து, சுடுகாட்டுக்குப் போகும் முன்னர், என் முன் வந்து உனது திருவடியைத் தந்தருள வேண்டும்.
வலிமையான சூரனைக் கொன்ற வெற்றிக் குமரனே, வண்டுகள் பண்பாடும் வள்ளி மலைக்கு உரியவனே, மணம் வீசும் திருப் புயங்களை உடையவனே, கந்தனே, திருச்செந்தூரில் வீற்றிருக்கும் பெருமாளே, நான் இறப்பதற்கு முன் எனக்கு உன் பொற் கழல் தாராய்.

விளக்கக் குறிப்புகள்
அ. சம்பாவம் = சமபவம். கந்து ஆம் மைந்து ஆர் அம் தோள் மைந்தா = கம்பத்துக்குச் சமமான வலிமை பொருந்திய அழகிய தோள்களை உடைய வீரன்.
ஆ. மன்றற் கிரியோனே...
(வரை மன்றற் பைம்புனத் தாள் பதாம் புயம்
வந்திக் குந்தனிக் காம வாஞ்சையன்)...பூதவேதாள வகுப்பு.