Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    28. சேமக் கோமள


    சேமக் கோமள பாதத் தாமரை
    சேர்தற் கோதும நந்தவேதா
    தீதத் தேயவி ரோதத் தேகுண
    சீலத் தேமிக அன்புறாதே
    காமக் ரோதவு லோபப் பூதவி
    காரத் தேயழி கின்றமாயா
    காயத் தேபசு பாசத் தேசிலர்
    காமுற் றேயும தென்கொலோதான்
    நேமிச் சூரொடு மேருத் தூளெழ
    நீளக் காளபு யங்ககால
    நீலக் ரீபக லாபத் தேர்விடு
    நீபச் சேவக செந்தில்வாழ்வே
    ஓமத் தீவழு வார்கட் கூர்சிவ
    லோகத் தேதரு மங்கைபாலா
    யோகத் தாறுப தேசத் தேசிக
    வூமைத் தேவர்கள் தம்பிரானே.



    - திருச்செந்தூர்





    [div 5]சுருக்க உரை


    உனது அழகிய தாமரை போன்ற திருவடியைச் சேர்வதற்கு உரிய வழிகளைச் சொல்லும் வேதங்களைக் கடந்த நிலையின் மீதும், பகை என்பதே இல்லாத உயரிய நிலையின் மீதும், நற்குண சீல நன்னெறியின் மீதும், அன்பு கொள்ளாமல், காம, குரோத துர்க்குணங்களாலும், ஈகை இல்லாமையாலும், ஐம்புலன்களின் சேட்டைகளாலும், அழிகின்ற மாயமான உடல் மீது உலகில் வாழும் சிலர் ஆசை கொண்டு இருக்கின்றனர். இது ஏனோ ? தெரியவில்லை.


    கடலும், சூரனும், மேருவும் தூள் ஆகும்படி, பாம்பைக் காலில் கொண்ட மயிலைச் செலுத்தும் கடம்பு அணிந்த வீரனே, வேள்வித் தீயை வளப்போர்க்கு சிவலோகத்தில் இடம் தரும் பார்வதியின் குமரனே, யோக வழிகளை உபதேசிக்கும் குருமூர்த்தியே, உன் முன்னே ஊமைகளாக நிற்கும் தேவர்கள் தலைவனே, பசு பாசத்தே சிலர் காமுறுதல் என்கொலோ ?[/div5]


    [div6]விளக்கக் குறிப்புகள்


    அ. உலகத்தோர் பொருட்டு இரங்கும் மற்றொரு திருப்புகழ், களவு கொண்டு எனத்
    துவங்கும் பாடல்.


    ஆ. நேமி = கடல்.
    (வேல் பட்டழிந்தது வேலையும் சூரனும் வெற்பும்).கந்தர் அலங்காரம்
    (வேலுக் கணிகலம் வேலையும் சூரனும் மேருவுமே).கந்தர் அலங்காரம்[div6]
    தேசிக... தேசிகன் என்ற பதம் குரு, ஆசார்யனை குறிக்கும் என்றாலு ம் சக்ஷு தீட்சை ( நயன தீட்சை) கொடுப்பவரே தேசிகன் என்று சொல்லப்படுபவர்.


    அம்பாள்தான் குரு ரூபத்தில் வருபவள் என்று பெரியவர்கள் அநுபவத்தில் சொல்லியிருக்கிறார்கள். காளிதாஸன் [‘நவரத்ந மாலிகா’வில்] “தேசிக ரூபேண தர்சிதாப்யுதயாம்” என்கிறார். அம்பாள் தன்னுடைய காருண்ய விலாஸத்தை குரு ஸ்வரூபமாக வந்தே காட்டுகிறவள் என்று அர்த்தம். ‘தேசிக’ என்பதும் குரு, ஆசார்ய என்பவை போல நம்மை நல்ல வழிக்கு நடத்திக் கொண்டு போகிறவரைக் குறிக்கும் இன்னொரு வார்த்தை. [வைஷ்ணவர்களில்] வடகடலை ஸம்ப்ரதாயத்துக்கு மூலபுருஷரை வேதாந்த தேசிகர்என்றே சொல்கிறோம். அந்த ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவர்கள் தேசிகர் என்று ‘ர்’ போடாமல், தேசிகன் என்று ‘ன்’ போட்டே சொல்வார்கள். ரொம்பவும் மரியாதை முற்றி அன்பு மேலிடுகிறபோது ஏகவசனம்தான் வந்துவிடும். பகவானையே ‘நீ’ என்றுதான் சொல்கிறோம்; ‘நீங்கள்’ என்பதில்லை. அப்படி தேசிகரை தேசிகன் என்றே அவரை அநுஸரிப்பவர்கள் பிரேமையினால் சொல்வார்கள். நம் பகவத்பாதாளை அவர் காலத்திலேயே அவருடைய நேர் சிஷ்யரான தோடாகாசார்யார் ஸ்தோத்திரித்தபோது, ”சங்கர தேசிக மே சரணம்” என்றே ஒவ்வொரு அடியிலும் முடித்திருக்கிறார்*.


    அம்பாள் தேசிக ரூபத்தில் வந்து ஞானம் தருவதாகச் சொல்லியிருக்கிறது. குறிப்பாக ஸ்பர்ச தீக்ஷை, நயன தீக்ஷை, மானஸ தீக்ஷை ஆகியற்றில் ஒவ்வொன்றையும் அவள் ஒவ்வொரு ரூபத்தில் செய்வதாகச் சொல்வார்கள். – தெய்வத்தின் குரல்
Working...
X