27.கொம்பனையார்
கொம்பனை யார்காது மோதிரு
கண்களி லாமோத சீதள
குங்கும பாடீரபூ ஷண நகமேவு
கொங்கையி னீராவி மேல்வளர்
செங்கழு நீர்மாலை சூடிய
கொண்டையி லாதார ருளாதே
உம்பர்கள் ஸ்வாமீந மோநம
எம்பெரு மானேந மோநம
ஒண்டொடி மோகாந மோநம எனநாளும்
உன்புக ழேபாடி நானினி
அன்புட னாசார பூசைசெய்
துய்ந்திட வீணாள்ப டாதருள் புரிவாயே
பம்பர மேபோல ஆடிய
சங்கர வேதாள நாயகி
பங்கய சீபாத நூபுரி கரசூலி
பங்கமி லாநீலி மோடிப
யங்கரி மாகாளி யோகினி
பண்டுசு ராபான சூரனொ டெதிர்போர்கண்
டெம்புதல் வாவாழி வாழியெ
னும்படி வீறான வேல்தர
என்று முளானேம நோகர வயலூரா
இன்சொல்வி சாகாக்ரு பாகர
செந்திலில் வாழ்வாகி யேயடி
யென்றனை யீடேற வாழ்வருள் பெருமாளே.
- திருச்செந்தூர்
கொம்பனை யார்காது மோதிரு
கண்களி லாமோத சீதள
குங்கும பாடீரபூ ஷண நகமேவு
கொங்கையி னீராவி மேல்வளர்
செங்கழு நீர்மாலை சூடிய
கொண்டையி லாதார ருளாதே
உம்பர்கள் ஸ்வாமீந மோநம
எம்பெரு மானேந மோநம
ஒண்டொடி மோகாந மோநம எனநாளும்
உன்புக ழேபாடி நானினி
அன்புட னாசார பூசைசெய்
துய்ந்திட வீணாள்ப டாதருள் புரிவாயே
பம்பர மேபோல ஆடிய
சங்கர வேதாள நாயகி
பங்கய சீபாத நூபுரி கரசூலி
பங்கமி லாநீலி மோடிப
யங்கரி மாகாளி யோகினி
பண்டுசு ராபான சூரனொ டெதிர்போர்கண்
டெம்புதல் வாவாழி வாழியெ
னும்படி வீறான வேல்தர
என்று முளானேம நோகர வயலூரா
இன்சொல்வி சாகாக்ரு பாகர
செந்திலில் வாழ்வாகி யேயடி
யென்றனை யீடேற வாழ்வருள் பெருமாளே.
- திருச்செந்தூர்
பதம் பிரித்து பதவுரை
கொம்பு அனையார் காது மோது இரு
கண்களில் ஆமோத சீதள
குங்கும பாடீர பூஷண நகம் மேவு
கொம்பு அனையார் = கொம்பு போன்ற விலை மாதர்களின்காது = காதளவும் நீண்டு மோது = அதை மோதும் இரு கண்களில் = இரண்டு கண்களிலும் ஆமோத = மகிழ்ச்சி தரக் கூடியதும் சீதள = குளிர்ந்ததும் குங்கும பாடீர = செஞ்சாந்து சந்தனம பூஷண = அணிகலங்கள் (இவைகளைக்) கொண்டதும் நகம் மேவும் = நகக் குறிகள் உற்றதுமான.
கொங்கையில் நீராவி மேல் வளர்
செம் கழு நீர் மாலை சூடிய
கொண்டையில் ஆதாரம் சோபையில் மருளாதே
கொங்கையில் = தனங்களிலும் நீராவி மேல் வளர் = நீர்த் தடாகத்தின் மேல் வளர்ந்துள்ள செங்கழு நீர் = செங்கழு நீர்ப்மாலை சூடிய = பூ
மாலையைச் சூடிய கொண்டையில் = கூந்தலிலும் ஆதார(ம்) =உடலின் சோபையில் = அழகிலும் மருளாதே = மருட்சி கொள்ளாமல்.
உம்பர்கள் ஸ்வாமி நமோநம
எம்பெருமானே நமோநம
ஒண் தொடி மோகா நமோநம என நாளும்
உம்பர்கள் ஸ்வாமி = தேவர்களுடைய சுவாமியே நமோநம =உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன் எம் பெருமானே நமோ நம = எம்பெருமானே, உன்னை..... ஒண் தொடி = ஒளி பொருந்திய வளையல் அணிந்த (வள்ளியின் மேல்)
மோகா நமோ நம = காதல் கொண்டவனே, உன்னை..... என நாளும்= என்று தினமும்.
உன் புகழே பாடி நான் இனி
அன்புடன் ஆசார பூசை செய்து
உய்ந்திட வீழ் நாள் படாது அருள் புரிவாயே
உன் புகழே பாடி நான் இனி = உன்னுடைய புகழையே பாடி
நான் இனி மேல் அன்புடன் ஆசார பூசை செய்து = அன்புடன் ஆசாரமான நெறியில் பூசை செய்து உய்ந்திட=பிழைத்திடவும்
வீண் நாள் படாது = என் வாழ் நாள் வீணாகப் போகாத படியும் அருள் புரிவாயே = அருள் புரிவாயாக.
பம்பரமே போல ஆடிய
சங்கரி வேதாள நாயகி
பங்கய சீ பாத நூபுரி கர சூலி
பம்பரமே போல ஆடிய = பம்பரம் சுழல்வது போல் ஆடியசங்கரி = சங்கரி சுகத்தைச் செய்பவள்வேதாள நாயகி=வேதாளங்களுக்குத் தலைவி பங்கய = தாமரை போன்ற சீ பாத= திரு நிறைந்த பாதங்களில் நூபுரி = சிலம்பு அணிந்தவள் கர சூலி = சூலத்தைக் கையில் ஏந்தியவள்.
பங்கம் இலா நீலி மோடி
பயங்கரி மா காளி யோகினி
பண்டு சுரா பான சூரனொடு எதிர் போர் கண்டு
பங்கம் இலா நீலி = குற்றம் இல்லாத நீல நிறத்தவள் மோடி =காடுகாள் (துர்க்கை) பயங்கரி = பயத்தைத் தருபவள் மா காளி= மகா காளி யோகினி = யோகினி பண்டு = முன்பு சுரா பான சூரனொடு = மது பானஞ் செய்திருந்த சூரனுடன் எதிர் போர் கண்டு = எதிர்த்து (நீ) போர் செய்ய வேண்டியதைக் குறித்து.
எம் புதல்வா வாழி வாழியே
எனும்படி வீறு ஆன வேல் தர
என்றும் உளானே மநோகர வயலூரா
எம் புதல்வா வாழி = எம் மகனே வாழ்க வாழியே = வாழ்கஎனும்படி = என்று ஆசி கூறி வீறு ஆன = வெற்றியைத் தரும்வேல் தர =
வேலாயுதத்தைத் தரப்பெற்ற என்றும் உளானே = எப்போதும் அழியாதவனே மநோகர = மனதுக்கு இன்பம் தருபவனேவயலூரா = வயலூரில் வாழ்பவனே
இன் சொல் விசாகா க்ருபாகர
செந்திலில் வாழ்வாகியே அடியேன்
தனை ஈடேற வாழ்வு அருள் பெருமாளே.
இன் சொல் விசாகா = இனிய சொற்களை உடைய முருகனேக்ருபாகர = அருள் புரிபவனே செந்திலில் = திருச் செந்தூரில். வாழ்வாகியே =
வீற்றிருந்து அருள் புரிபவனாகி அடியேன் தனை =அடியேனாகிய என்னை ஈடேற வாழ்வு = ஈடேறும் வண்ணம் நல் வாழ்வை அருளும் பெருமாளே = எனக்கு அருள் பெருமாளே.

சுருக்க உரை
விலை மாதர்களுடைய காதுவரை நீண்ட கண்களிலும், செஞ்சாந்து அணிந்த மலை போன்ற கொங்கைகளிலும், மலர் மாலையைச் சூடிய கூந்தலிலும், உடல் அழகிலும், நான் மருட்சி கொள்ளாமல், தேவர்கள் தலைவனே, எம் பெருமானே, வள்ளியின் மேல் மோகம் கொண்டவனே, உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன். இனி நாள்தோறும்,உன் புகழையே பாடி, ஆசாரத்துடன் பூசை செய்து நான் பிழைத்திட, என் வாழ் நாள் வீணாகாதபடி அருள் புரிவாயாக.
பம்பரம் போல் சுழன்று ஆடிய சங்கரி, வேதாளங்களுக்குத் தலைவி,பாதங்களில்
சிலம்பு அணிந்தவள், கரிய நிறத்தவள், அடியார்கள்பயத்தைப் போக்குபவளாகிய பார்வதி, நீ சூரனுடன் போர் செய்ய வேண்டியதைக் குறித்து, உனக்கு ஆசி கூறி, உனக்கு வேலாயுதத்தைத் தர, அதை நீ பெற்ற என்றும் இளமை வாய்ந்தவனே, விசாகனே,கருணை மிக்கவனே, வயலூர்ப் பெருமாளே, திருச் செந்தூரில் வீற்றிருந்து நல் வாழ்வை அருளும் பெருமாளே. நான் உன் புகழைப் பாடி வீணாள் படாதுஅருள் புரிவாயாக.

ஒப்புக
அ. எம் புதல்வா வாழி வாழியே....
சூரனை வதைக்கத் தேவி வேல் கொடுத்ததைப் பின் வரும் கல்லாடத்தில் காணலாம்
(அழியாப் பேரளி உமைக்க ணின்று
தற்பெயர் புணர்த்திக் கற்பினொடு கொடுத்த
அமையா வென்றி அரத்த நெடுவேலோய்)...கல்லாடம் 13.