Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    26.குடர்நிண


    குடர்நிண மென்பு சலமல மண்டு
    குருதிந ரம்பு சீயூன்பொதிதோல்
    குலவுகு ரம்பை முருடுசு மந்து
    குனகிம கிழ்ந்து நாயேன்தளரா
    அடர்மத னம்பை யனையசு ருங்க
    ணரிவையர் தங்கள் தோடோய்ந்தயரா
    அறிவழி கின்ற குணமற வுன்றன்
    அடியிணை யாண்டருள்வாய்
    தடவியல் செந்தில் இறையவ நண்பு
    தருகுற மங்கை வாழ்வாம்புயனே
    சரவண கந்த முருகக டம்ப
    தனிமயில் கொண்டு பார்சூழ்ந்தவனே
    சுடர்படர் குன்று தொளைபட அண்டர்
    தொழவொரு செங்கை வேல்வாங்கியவா
    துரிதப தங்க இரதப்ர சண்ட
    சொரிகடல் நின்ற சூராந்தகனே.



    - திருச்செந்தூர்





    சுருக்க உரை


    குடல், கொழுப்பு, மலம் இவை நிரம்பி, இரத்தம், நரம்பு, மாமிசம், தோல் ஆகியவற்றால் மூடப்பட்ட இவ்வுடலைச் சுமந்தும், கொஞ்சிப் பேசியும், மகிழ்ந்தும் நாயேன் அம்பு போன்ற கண்களை உடைய விலைமாதர்களின் தோளில் தோய்ந்து அயர்ந்து, அறிவு அழிந்து போகும் கெட்ட குணம் தொலைய, உன் திருவடிகளை எனக்குத் தந்து அருள வேண்டும்.


    திருச்செந்தூர் இறைவனே. குறப் பெண் வள்ளிக்கு வாழ்வாய் விளங்கியவனே, சரவணனே, கந்தனே, மயிலேறி உலகை வலம் வந்தவனே, கிரவுஞ்ச மலை தொளை படவும் தேவர்கள் தொழவும் வேலை ஏந்தியவனே, வேகமாகச் செல்லும் மயிலை இரதமாகக் கொண்ட வீரனே, சூரனுக்குக் காலனாக இருந்தவனே, அடியேனை நீ ஆண்டு அருள்வாயாக.



    விளக்கக் குறிப்புகள்


    அ. இப்பாடல் மயிலின் பெருமையைக் கூறுவது.
    ஆ. துரித பதங்க இரத ப்ரசண்ட.... வேகத்தோடு செல்லும் மயிலாகிய இரதத்தை உடைய பிரசண்டனே.
Working...
X