Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    22. கட்டழகு


    கட்டழகு விட்டுத் தளர்ந்தங் கிருந்துமுனம்
    இட்டபொறி தப்பிப் பிணங்கொண்ட தின்சிலர்கள்
    கட்டணமெ டுத்துச் சுமந்தும் பெரும்பறைகள் முறையோடே
    வெட்டவிட விட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென
    மக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும்வழி
    விட்டுவரு மித்தைத் தவிர்ந்துன் பதங்களுற வுணர்வேனோ
    பட்டுருவி நெட்டைக் க்ரவுஞ்சம் பிளந்துகடல்
    முற்றுமலை வற்றிக் குழம்புங் குழம்பமுனை
    பட்டஅயில் தொட்டுத் திடங்கொண் டெதிர்ந்தவுணர் முடிசாயத்
    தட்டழிய வெட்டிக் கவந்தம் பெருங்கழுகு
    நிர்த்தமிட ரத்தக் குளங்கண் டுமிழ்ந்துமணி
    சற்சமய வித்தைப் பலன்கண்டு செந்திலுறை பெருமாளே.



    - திருச்செந்தூர்







    சுருக்க உரை
    கட்டுக் கோப்பான உடல் தளர்ந்து, இதுவரை உதவியாக இருந்த ஐம் பொறிகளும் சிதறிப் போய்ப் பிணம் என்னும் நிலையை அடைந்தவுடன், பேரிகைகள் முழங்க, மக்கள் ஓருமுகமாகப் பின் செல்லும் இந்தப் பொய்யான வாழ்வை விட்டு நீங்கி உன் திருவடியை அடையும் வழியை உணரமாட்டேனோ?
    கிரவுஞ்ச மலையைப் பிளந்து, கடல் வற்றும்படி வேலைச் செலுத்திப் பலமாக வந்த அவுணர்கள் முடி சாயும்படி வெட்டி, கழுகுகள் தலை இல்லாத உடலைத் தின்று நடம் இட, இரத்தம் பெருக, முனிவர்களுக்கு நல்ல காலம் வருவதைக் காட்டித் திருச்செந்தூரில் வாழும் பெருமாளே. உன் பதங்களை உணர்வேனோ?


    ஒப்புக


    அ. வருமித்தை...
    வரும் இத்தை = வரும் இதை. அல்லது வரும் மித்தை = வருகின்ற பொய்யை.
    ஆ. கவந்தம்பெருங்கழுகு...
    கவந்தம் = சிறிது தொழிலுடன் கூடிய தலையற்ற உடல்


    இப்பாடல் 8 பிரிவுகள் இல்லாமல் 4 பிரிவுகளை (சரணங்கள்) மட்டுமே கொண்டு அமைந்துள்ளது.
Working...
X