Courtesy: http://thiruppugazhamirutham.blogspo...012/09/80.html
19.உததியறல்
உததியறல் மொண்டு சூல்கொள்கரு
முகிலெனஇ ருண்ட நீலமிக
வொளிதிகழு மன்றல் ஓதிநரை பஞ்சுபோலாய்
உதிரமெழு துங்க வேலவிழி
மிடைகடையொ துங்கு பீளைகளு
முடைதயிர்பி திர்ந்த தோஇதென வெம்புலாலாய்
மதகரட தந்தி வாயினிடை
சொருகுபிறை தந்த சூதுகளின்
வடிவுதரு கும்ப மோதிவளர் கொங்கைதோலாய்
வனமழியு மங்கை மாதர்களின்
நிலைதனையு ணர்ந்து தாளிலுறு
வழியடிமை யன்பு கூருமது சிந்தியேனோ
இதழ்பொதிய விழ்ந்த தாமரையின்
மணவறைபு குந்த நான்முகனும்
எறிதிரைய லம்பு பாலுததி நஞ்சராமேல்
இருவிழிது யின்ற நாரணனும்
உமைமருவு சந்த்ர சேகரனும்
இமையவர்வ ணங்கு வாசவனும் நின்றுதாழும்
முதல்வசுக மைந்த பீடிகையில்
அகிலசக அண்ட நாயகிதன்
முகிழ்முலைசு ரந்த பாலமுத முண்டவேளே
முளைமுருகு சங்கு வீசியலை
முடுகிமைத வழ்ந்த வாய்பெருகி
முதலிவரு செந்தில் வாழ்வுதரு தம்பிரானே.
-திருச்செந்தூர்
19.உததியறல்
உததியறல் மொண்டு சூல்கொள்கரு
முகிலெனஇ ருண்ட நீலமிக
வொளிதிகழு மன்றல் ஓதிநரை பஞ்சுபோலாய்
உதிரமெழு துங்க வேலவிழி
மிடைகடையொ துங்கு பீளைகளு
முடைதயிர்பி திர்ந்த தோஇதென வெம்புலாலாய்
மதகரட தந்தி வாயினிடை
சொருகுபிறை தந்த சூதுகளின்
வடிவுதரு கும்ப மோதிவளர் கொங்கைதோலாய்
வனமழியு மங்கை மாதர்களின்
நிலைதனையு ணர்ந்து தாளிலுறு
வழியடிமை யன்பு கூருமது சிந்தியேனோ
இதழ்பொதிய விழ்ந்த தாமரையின்
மணவறைபு குந்த நான்முகனும்
எறிதிரைய லம்பு பாலுததி நஞ்சராமேல்
இருவிழிது யின்ற நாரணனும்
உமைமருவு சந்த்ர சேகரனும்
இமையவர்வ ணங்கு வாசவனும் நின்றுதாழும்
முதல்வசுக மைந்த பீடிகையில்
அகிலசக அண்ட நாயகிதன்
முகிழ்முலைசு ரந்த பாலமுத முண்டவேளே
முளைமுருகு சங்கு வீசியலை
முடுகிமைத வழ்ந்த வாய்பெருகி
முதலிவரு செந்தில் வாழ்வுதரு தம்பிரானே.
-திருச்செந்தூர்
பதம் பிரித்து உரை
உததி அறல் மொண்டு சூல் கொள் கரு
முகில் என இருண்ட நீல மிக
ஒளி திகழ மன்றல் ஓதி நரை பஞ்சு போல் ஆய்
உததி = கடலின். அறல் = கருமணல் (போல).மொண்டு = கருநிறங் கொண்டு. சூல் கொள் = கருக் கொண்ட. முகில் என = கரிய மேகம் போல. இருண்ட = இருண்ட. நீல மிகு = கருமை மிக்க. ஒளி திகழ் =மிக்க ஒளி விளக்கத்துடன். மன்றல் = வாசனைவீசுகின்ற. ஓதி = கூந்தல். நரை = நரைத்து. பஞ்சு போலாய் = பஞ்சு போல் வெளுத்ததாய்.
உதிரம் எழு துங்க வேல விழி
மிடை கடை ஒதுங்கு(ம்) பீளைகளும்
முடை தயிர் பிதிர்ந்ததோ இது என வெம் புலால் ஆய்
உதிரம் = இரத்தம். எழு துங்க = கொழுத்து உயர்ந்த.வேல = வேல் பேன்ற. விழி மிடை கடை =விழிக்கடையில் நெருங்கி. ஒதுங்கும் பீளைகளும் =ஒதுங்கும் பீளைகள். முடை = துர் நாற்றம் கொண்ட.தயிர் = தயிர்த்துளிகள். பிதிர்ந்ததோ இது என =சிதறியதோ என்று சொல்லும்படி. வெம் புலால் ஆய் =கொடிய புலால் நாற்றத்ததாய்.
மத கரட தந்தி வாயின் இடை
சொருகு பிறை தந்த சூதுகளின்
வடிவு தரு கும்ப மோதி வளர் கொங்கை தோலாய்
மத கரட = மதம் பாயும் சுவடு கொண்ட. தந்தி =யானையின். வாயினிடை சொருகு = வாயில் சொருகப்பட்டு. பிறை தந்த = பிறை போன்ற தந்தங்கள் எனும் படி வெளிப்பட்டு. சூதுகளின் கும்பம் = சூதாடு கருவிகளின் வடிவு கொண்டனவாய்.கும்பம் மோதி வளர் = குடங்களை மோதி வளர்கின்ற.கொங்கை = தனங்கள். தோலாய் = வெறும் தோலாய். (இங்ஙனம்)
வனம் அழியும் மங்கை மாதர்களின்
நிலை தனை உணர்ந்து தாளில் உறு
வழி அடிமை அன்பு கூரும் அது சிந்தியேனோ
வனம் = அழகு. அழியும் மங்கை மாதர்களின் =குலைந்து போன மங்கை மாதர்களுடைய. நிலை தனை உணர்ந்து = (உண்மை) நிலையை உணர்ந்து. தாளில் உறு = (உனது) திருவடியையே (சிந்தனை செய்யும்).வழி அடிமை = வழி அடிமையாகிய நான். அன்பு கூரும் அது = அன்பு மிக்கு வளரும் அந்த வழியையே.சிந்தியேனோ = நினைக்க மாட்டேனோ?
இதழ் பொதி அவிழ்ந்த தாமரையின்
மண அறை புகுந்த நான் முகனும்
எறி திரை அலம்பும் பால் உததி நஞ்சு அரா மேல்
இதழ் பொதி = இதழ்களின் கட்டுகள். அவிழ்ந்த =விரிந்த. தாமரையின் = தாமரை மலரின். மண அறை புகுந்த = நறு மணம் உள்ள வீட்டில் புகுந்து வீற்றிருக்கும். நான் முகனும் = பிரமனும். எறி திரை அலம்பும் = வீசுகின்ற அலை மோதும். பால் உததி =பாற்கடலில். நஞ்சு அரா மேல் = விடம் மிகுந்த பாம்பின் மேல்.
இரு விழி துயின்ற நாரணனும்
உமை மருவு சந்த்ர சேகரனும்
இமையவர் வணங்கு(ம்) வாசவனும் நின்று தாழும்
இரு விழி துயின்ற = இரு கண்களும் துயில் கொள்ளும்.நாரணனும் = திருமாலும். உமை = உமையம்மை. மருவு = சேர்ந்துள்ள. சந்த்ர சேகரனும் = சந்திர சேகர மூர்த்தியும். இமையவர் வணங்கும் = தேவர்கள் வணங்குகின்ற. வாசவனும் = இந்திரனும். நின்று தாழும் = நின்று வணங்கும்.
முதல்வ சுக மைந்த பீடிகையில்
அகில சக அண்ட நாயகி தன்
முகிழ் முலை சுரந்த பால் அமுதம் உண்ட வேளே
முதல்வ = முதல்வனே. சுக மைந்த = சுகமும் அழகும் கொண்ட. பீடிகையில் = இருக்கையில். அகில சக அண்ட = எல்லா உலகங்களுக்கும். நாயகி தன் =தலைவியாகிய நாயகியின். முகிழ் முலை = அரும்பு போன்ற முலையில் சுரந்த. பால் அமுதம் உண்ட வேளே= பால் அமுதத்தைப் பருகிய வேளே.
முளை முருகு சங்கு வீசி அலை
முடுகி மை தவழ்ந்த வாய் பெருகி
முதல் இவரு செந்தில் வாழ்வு தரு தம்பிரானே.
முளை = வெளித் தோன்றி. முருகு = முதிர்ந்துள்ள. சங்கு வீசி = சங்குகளை வீசி. அலை முடுகி =அலைகள் விரைந்து நெருங்கி. மை தவழ்ந்த வாய் பெருகி = மேகம் தவழ்ந்தது போலப் பெருகி. முதல் இவரு = முற்பட்டு உயர்ந்து. செந்தில் வாழ்வு தரு தம்பிரானே = திருச் செந்தூரில் வாழ்வைத் தருகின்ற தம்பிரானே.

சுருக்க உரை
கடலின் கருமணல் போன்று கரு நிறங் கொண்ட கூந்தல் நரைத்து,ஒளி வீசும் கண்களில் துர் நாற்றம் கொண்ட பீளை மிகுந்து, பெரிய கொங்கைகள் வெறும் தோலாய் அழகு குலைந்து போகும் விலைமாதர்களின் நிலையாமையை உணர்ந்து, உன் திருவடியையே சிந்தை செய்யும் வழியை விரும்பி அதையே நினைக்க மாட்டேனோ.
தாமரையில் வாழும் பிரமனும், பாற்கடலில் துயிலும் நாரணனும்,உமா தேவியைப் பாகமாகக் கொண்ட சிவபெருமானும், இந்திரனும் வணங்கும் முதல்வனே, உமா தேவியின் முலையில் சுரந்த பாலை உண்டவனே, சங்குகள் வீசி அலைகள் விரைந்து நெருங்கும் திருச்செந்தூரில் வாழ்பவனே, வழி அடிமையாகிய நான், அன்பு மிக்கு வளரும் உமது திருவடியைச் சிந்தியேனோ?