Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    Courtesy: http://thiruppugazhamirutham.blogspo...012/09/80.html
    18.அருக்கன்


    அருக்கன் போலொளி வீசிய மாமுடி
    யணைத்துந் தானழ காய்நல மேதர
    அருட்கண் பார்வையி னாலடி யார்தமை மகிழ்வோடே
    அழைத்துஞ் சேதிகள் பேசிய காரண
    வடிப்பந் தானென வேயெனை நாடொறும்
    அதிக்கஞ் சேர்தர வேயரு ளாலுட னினிதாள்வாய்
    இருக்குங் காரண மீறிய வேதமும்
    இசைக்குஞ் சாரமு மீதொழு தேவர்கள்
    இடக்கண் தீர்கன னேயடி யார்தவ முடன்மேவி
    இலக்கந் தானென வேதொழு வேமகிழ்
    விருப்பங் கூர்தரு மாதியு மாயுல
    கிறுக்குந் தாதகி சூடிய வேணிய னருள்பாலா
    திருக்குந் தாபதர் வேதிய ராதியர்
    துதிக்குந் தாளுடை நாயக னாகிய
    செகச்செஞ் சோதியு மாகிய மாதவன் மருகோனே
    செழிக்குஞ் சாலியு மேகம ளாவிய
    கருப்பஞ் சோலையும் வாழையும் மேதிகழ்
    திருச்செந் தூர்தனில் மேவிய தேவர்கள் பெருமாளே.

    -திருச்செந்தூர்


    [linkl]பதம் பிரித்து உரை
    ******
    அருக்கன் போல் ஒளி வீசிய மா முடி
    அணைத்தும் தான் அழகாய் நலமே தர
    அருள் கண் பார்வையினால் அடியார் தமை மகிழ்வோடே


    அருக்கன் போலே = சூரியனைப் போல். ஒளி வீசிய =ஒளி வீசும். மாமுடி அனைத்தும் தான் = பெருமை மிக்க இரத்தின கிரீடங்கள் யாவும். அழகாய் நலமே தர =காண்பவர்களுக்கு அழகாக விளங்கும் நன்மையே வழங்க. அருட் கண் பார்வையினால் = அருள் கண் பார்வை கொண்டு. அடியார் தமை = அடியார்களை.மகிழ்வோடே = மகிழ்ச்சியுடன்.


    அழைத்தும் சேதிகள் பேசிய காரண
    வடிப்பம் தான் எனவே எனை நாள் தொறும்
    அதிக்கம் சேர் தரவே அருளால் உடன் இனிது ஆள்வாய்


    அழைத்தும் = வலிய அழைத்தும் சேதிகள் பேசிய காரண = அவர்களுடன் விஷயங்களைப் பேசும் மூலப் பொருளே வடிப்பம் தான் என எனை = திருந்திய குணம் உள்ளவன் தான் இவன் என்று என்னை நாடொறும் = தினமும். அதிக்கம் சேர் தரவே = மேன்மேலும்மேன்மை அடையும் வண்ணம் அருளால் = உனது திருவருளால் உடன் = இப்பொழுதே இனிது அருள்வாயே = இனிமையுடன் ஆண்டருள்வாயாக.


    இருக்கும் காரணம் மீறிய வேதமும்
    இசைக்கும் சாரமுமே தொழு தேவர்கள்
    இடுக்கண் தீர் கனனே அடியார் தவமுடன் மேவி


    இருக்கும் = இருக்கு வேதமும். காரணம் மீறிய வேதமும் = காரணங்களைக் கடந்து நிற்கும் தனிச் சிறப்புடைய (தமிழ்) வேதமும். இசைக்கும் சாரமுமே = அவற்றுள் மறைந்து கிடக்கும் உட்கருத்துக்களைத் தெளிவாக விளக்கிக் கூறும் வேதசாரமாகிய ஆகமங்களும். தொழு = தொழுது ஒழுகும். தேவர்கள் இடுக்கண் =தேவர்களின் துன்பம். தீர் = தீர்க்கின்ற. கனனே =பெருமை வாய்ந்தவனே. அடியார் தவமுடன் மேவி =அடியார்கள் தவ நெறியில் நின்று.


    இலக்கம் தான் எனவே தொழவே மகிழ்
    விருப்பம் கூர் தரும் ஆதியுமாய் உலகு
    இறுக்கும் தாதகி சூடிய வேணியன் அருள் பாலா


    இலக்கம் தான் எனவே = இவரே நமது குறிப் பொருள் என்று. தொழவே = தொழ. மகிழ் விருப்பம் கூர் தரு =மகிழ்ந்து விருப்பம் மிகக் கொள்ளும். ஆதியுமாய் =முன்னைப் பழம் பொருளாய். உலகு இறுக்கும் =உலகங்களை எல்லாம் சங்கரிக்கும். தாதகி சூடிய =ஆத்தி மலரைச் சூடிய. வேணியன் = சடையை உடைய சிவபெருமான். அருள் பாலா = அருளிய குழந்தையே.


    திருக்கும் தாபதர் வேதியர் ஆதியர்
    துதிக்கும் தாள் உடை நாயகன் ஆகிய
    செக செம் சோதியும் ஆகிய மாதவன் மருகோனே
    திருக்கும் = மூன்று காலங்களையும் காண வல்ல.தாபதர் = தவ சிரேட்டர்கள். வேதியர் ஆதியர் =வேதியர் முதலானோர். துதிக்கும் தாளுடை நாயகன் ஆகிய = வணங்கும் திருவடிகளை உடையபெருமானாகிய. செகம் செஞ்சோதியுமாகிய =உலகுக்குப் பேரொளியாய் விளங்குகின்ற. மாதவர் =திருமாலின். மருகோனே = மருகனே.


    செழிக்கும் சாலியும் மேகம் அளாவிய
    கருப்பம் சோலையும் வாழையுமே திகழ்
    திரு செந்தூர் மேவிய தேவர்கள் பெருமாளே.


    செழிக்கும் = செழிப்புள்ள. சாலியும் = நெற் பயிரும்.மேகம் அளாவிய = மேகத்தை எட்டி வளர்ந்துள்ள. கருப்பஞ் சோலையும் = கரும்புச் சோலையும். வாழையுமே = வாழை மரங்களும். திகழ் =பொலிகின்ற. திருச்செந்தூர் தனில் மேவிய =திருச்செந்தூரில் வீற்றிருக்கும். தேவர்கள் பெருமாளே =தேவர்கள் பெருமாளே./link]




    சுருக்க உரை


    *** அடியார்களை வலிய அழைத்து மூலப் பொருளைப் பற்றிப் பேசும் தனிப் பரம் பொருளே, நான் திருந்தியவன் என்று என்னையும் அழைத்து உன் திருவருள் பாலித்து இப்போதே ஆண்டருள்வாயாக. வேதங்கள் உரைக்கும் ஆழ்ந்த பொருளை உணர்ந்து உன்னைத் துதிக்கும் தேவர்களுடைய துன்பத்தைத் தீர்க்கின்ற பெருமை வாய்ந்தவரே, ஆதிப்பிரானாகிய சிவனுடைய மகனே, முக்காலங்களையும் உணர வல்ல தவ சிரேட்டர்களும் வேதியர்களும் துதிக்கும் திருமாலின் மருகனே, என்னை அருளுடன் இப்பொழுதே இனிது ஆள்வாய்.






    விளக்கக் குறிப்புகள்


    அ. அடியார்தமை மகிழ்வோடே......
    ( அடியவ ரிச்சையில எவைஎவை யுற்றன
    அவைதரு வித்தருள் பெருமாளே) ----திருப்புகழ் (கலகலெனச்சில).
    ஆ. இருக்குந்...தொழு.......
    ( ஆலமுண்ட கோன் அகண்ட லோகமுண்ட மால்விரிஞ்சன்
    ஆரணங்கள் ஆகமங்கள் புகழ்தாளும்)--- திருப்புகழ் ( தோலெலும்பு)


    https://soundcloud.com/user717453868/018a
Working...
X