Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    Courtesy: http://thiruppugazhamirutham.blogspo...012/09/80.html
    16.அனைவரும்


    அனைவரும ருண்ட ருண்டு கடிதெனவெ குண்டி யம்ப
    அமரஅடி பின்தொ டர்ந்து பிணநாறும்
    அழுகுபிணி கொண்டு விண்டு புழவுடனெ லும்ப லம்பு
    மவலவுட லஞ்சு மந்து தடுமாறி
    மனைதொறுமி தம்ப கர்ந்து வரவரவி ருந்த ருந்தி
    மனவழிதி ரிந்து மங்கு வசைதீர
    மறைசதுர்வி தந்தெ ரிந்து வகைசிறுச தங்கை கொஞ்சு
    மலரடிவ ணங்க என்று பெறுவேனோ
    தினைமிசைசு கங்க டிந்த புனமயிலி ளங்கு ரும்பை
    திகழிருத னம்பு ணர்ந்த திருமார்பா
    ஜெகமுழுது முன்பு தும்பி முகவனொடு தந்தை முன்பு
    திகிரிவலம் வந்த செம்பொன் மயில்வீரா
    இனியகனி மந்தி சிந்து மலைகிழவ செந்தில் வந்த
    இறைவகுக கந்த என்று மிளையோனே
    எழுகடலு மெண்சி லம்பும் நிசிசரரும் அஞ்ச அஞ்சு
    மிமையவரை யஞ்ச லென்ற பெருமாளே.






    [div5]சுருக்க உரை
    தமக்கு உற்ற பெரு நோயைக் கண்டு, யாவரும் அச்சம் கொண்டு, அருகில் வர வேண்டாம் என்று கோபித்துக் கூறி விரட்டவும், விடாது அவர்களைத் தொடர்ந்து, துர் நாற்றம் வீசும் உடலைச் சுமந்து, நான் தடுமாற்றம் அடைந்து பல வீடுகளுக்குப் போய் உணவு அருந்தி, மனம் போகும் வழியில் சென்று திரிகின்ற பழிப்பு நீங்க, நான்கு வேதங்களை அறிந்து,உன் மலரடிகளை வணங்கும் பேற்றை நான் பெறுவேனோ.


    தினைப்புனத்தில் கிளிகளை ஓட்டும் வள்ளியின் இரண்டு தனங்களை அணைந்த அழகிய மார்பனே. உலகத்தைத் தம்பியாகிய யானை முகனுடன் போட்டி இட்டு சிவபெருமான் முன் சுற்றி வந்த மயில் வீரா.ஏழு கடலும், எட்டு மலைகளும்,அசுரர்களும் பயப்படும்படி தேவர்களை அஞ்ச வேண்டாம் என்று அபயம் அளித்த குகனே, கந்தனே. தேவர்கள் பெருமாளே. உன் மலர் அடி என்று பெறுவேனோ.]/link]



    விளக்கக் குறிப்புகள்
    அ. அவைரும் மருண்டு அருண்டு கடிதென.....
    (அக்கைபோல் அங்கை ஒழிய விரலழுகித்
    துக்கத் தொழுநோய் எழுபவே அக்கால்
    அலவனைக் காதலித்துக் கான்முரித்துத் தின்ற
    பழவினை வந்தடைத்தக் கால்) - நாலடியார் 123. (அலவன்= நண்டு).
    ஆ. மனைதொறு மிதம் பகர்ந்து வரவர விருந்தருந்தி....
    (அசனமிடுவார்கள் தங்கள் மனைகள் தலைவாசல் நின்று
    அநுதினமும் நாணமின்றி அழிவேனோ).... திருப்புகழ்
    (கருவினுருவாகி)
    இ. மலரடி வணங்க என்று பெறுவேனோ....
    (பெறுதற் கரிய பிறவியைப் பெற்றுநின் சிற்றடியைக்
    குறுகிப் பணிந்து பெறக் கற்றிலேன்)---- கந்தர் அலங்காரம் 67.
Working...
X