Courtesy: http://thiruppugazhamirutham.blogspo...012/09/80.html
15.அறிவழிய
அறிவழிய மயல்பெருக வுரையுமற விழிசுழல
அனலவிய மலமொழுக அகலாதே
அனையுமனை யருகிலுற வெருவியழ வுறவுமழ
அழலினிகர் மறலியெனை யழையாதே
செறியுமிரு வினைகரண மருவுபுல னொழியவுயர்
திருவடியி லணுகவர மருள்வாயே
சிவனைநிகர் பொதியவரை முநிவனக மகிழஇரு
செவிகுளிர இனியதமிழ் பகர்வோனே
நெறிதவறி யலரிமதி நடுவன்மக பதிமுளரி
நிருதிநிதி பதிகரிய வனமாலி
நிலவுமறை யவனிவர்க ளலையஅர சுரிமைபுரி
நிருதனுர மறஅயிலை விடுவோனே
மறிபரசு கரமிலகு பரமனுமை யிருவிழியு
மகிழமடி மிசைவளரு மிளையோனே
மதலைதவ ழுததியிடை வருதரள மணிபுளின
மறையவுயர் கரையிலுறை பெருமாளே.
- திருச்செந்துர்
15.அறிவழிய
அறிவழிய மயல்பெருக வுரையுமற விழிசுழல
அனலவிய மலமொழுக அகலாதே
அனையுமனை யருகிலுற வெருவியழ வுறவுமழ
அழலினிகர் மறலியெனை யழையாதே
செறியுமிரு வினைகரண மருவுபுல னொழியவுயர்
திருவடியி லணுகவர மருள்வாயே
சிவனைநிகர் பொதியவரை முநிவனக மகிழஇரு
செவிகுளிர இனியதமிழ் பகர்வோனே
நெறிதவறி யலரிமதி நடுவன்மக பதிமுளரி
நிருதிநிதி பதிகரிய வனமாலி
நிலவுமறை யவனிவர்க ளலையஅர சுரிமைபுரி
நிருதனுர மறஅயிலை விடுவோனே
மறிபரசு கரமிலகு பரமனுமை யிருவிழியு
மகிழமடி மிசைவளரு மிளையோனே
மதலைதவ ழுததியிடை வருதரள மணிபுளின
மறையவுயர் கரையிலுறை பெருமாளே.
- திருச்செந்துர்
பதம் பிரித்தல்
அறிவு அழிய மயல் பெருக உரையும் அற விழி சுழல
அனல் அவிய மலம் ஒழுக அகலாதே
அறிவு அழிய = அறிவு அழியவும். மயல் பெருக =மயக்கம் பெருகவும். உரையும் அற = பேச்சு அடங்கவும்.விழி சுழல = கண்கள் சுழலவும். அனல் அவிய =(உடலின்) சூடு தணியவும். மலம் ஒழுக = மலம் ஒழுகவும். அகலாதே = நீங்காமல்.
அனையு மனை அருகில் உற வெருவி அழ உறவும் அழ
அழலின் நிகர் மறலி எனை அழையாதே
அ(ன்)னையும் = தாயும். மனை = மனைவியும். அருகில் உற = அருகாமையில் இருந்து. வெருவி = அச்சமுற்று.அழ = அழவும். உறவும் அழ = சுற்றத்தார் அழவும்.அழலின் நிகர் = நெருப்புக்கு ஒப்பான. மறலி = நமன்.எனை அழையாதே = என்னை அழையாதபடி.
செறியும் இரு வினை கரணம் மருவு புலன் ஒழிய உயர்
திருவடியில் அணுக வரம் அருள்வாயே
செறியும் = நெருங்கியுள்ள. இரு வினை = இரு வினைகளும். கரணம் = மனமும். மருவு = பொருந்திய.புலன் ஒழிய = ஐம்புலன்களும் ஒழிந்து நீங்க. உயர் திருவடியில் அணுக = உயர்ந்த உனது திருவடியில் அணுக. வரம் அருள்வாயே = வரம் தந்தருள்க.
சிவனை நிகர் பொதிய வரை முநிவன் அகம் மகிழ இரு
செவி குளிர இனிய தமிழ் பகர்வோனே
சிவனை நிகர் = சிவனுக்கு ஒப்பான. பொதிய வரை முநிவன் = பொதிய மலை முனிவனாகிய அகத்தியர்.அகம் மகிழ = உள்ளம் மகிழ. இரு செவி குளிர = இரு செவிகளும் குளிர. இனிய தமிழ் பகர்வோனே = இனிய தமிழை ஓதியவனே.
நெறி தவறி அலரி மதி நடுவன் மக பதி முளரி
நிருதி நிதி பதி கரிய வன மாலி
நெறி தவறி = தாம் தாம் போகும் ஒழுக்கமான வழி தவறி. அலரி = சூரியன். மதி = நிலா. நடுவன் =இயமன். மக பதி = நட்சத்திரங்களுக்குத் தலைவனான இந்திரன். முளரி = அக்கினி. நிருதி = தென் மேற்கு திசைக்குத் தலைவனான நிருதிதேவன். நிதி பதி =செல்வத்துக்குத் தலைவனான குபேரன். கரிய வனமாலி= கரு நிறங் கொண்ட துளவமாலை அணிந்த நாராயணன்.
நிலவு மறையவன் இவர்கள் அலைய அரசு உரிமை புரி
நிருதன் உரம் அற அயிலை விடுவோனே
நிலவு மறையவன் = நிலை பெற்றவனாகிய பிரமன்.இவர்கள் அலைய = இவர்கள் யாவரும் வருந்தி ஏவல் புரியுமாறு. அரசு உரிமை புரி = அரசாட்சி செய்து கொண்டிருந்த. நிருதன் உரம் அற = அசுரனாகிய சூரபன்மனின் மார்பு பிளவுபடும்படி. அயிலைவிடுவோனே = வேலாயுதத்தைச் செலுத்தியவனே.
மறி பரசு கரம் இலகு பரமன் உமை இரு விழியும்
மகிழ மடி மிசை வளரும் இளையோனே
மறி பரசு கரம் இலகு = மான் குட்டியையும் மழுவையும் கரத்தில் தாங்கிக் கொண்டு அருள் புரியும். பரமன் =சிவன். உமை இரு விழியும் = உமை இவர் தம் இரு விழிகளும். மகிழ = மகிழ்ச்சி கொள்ள. மடி மிசை =உமையின் திருமடியின் மீது வளர்கின்ற. இளையோனே= இளையவனே.
மதலை தவழ் உததி இடை வரு தரள மணி புளினம்
மறைய உயர் கரையில் உறை பெருமாளே.
மதலை தவழ் = மரக்கலங்கள் தவழுகின்ற. உததி இடைவரு = கடலினிடையே வருகின்ற. தரளம் மணி =முத்து மணிகள். புளினம் மறைய உயர் = மணல் மேட்டில் மறையும் படி உயர்ந்த. கரையில் உறை பெருமாளே = கடற் கரையில் வீற்றிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை
அறிவு அழிய, மயக்கம் பெருக, பேச்சு அடங்க, உடல் சூடு தணிய, மலம்
ஒழுக, தாயும், மனைவியும் உறவினரும் பக்கத்தில் இருந்து அழ,
கொடிய இயமன் என்னை அழையாதபடி, இரு வினைகளும்,மனமும்,
ஐம்புலன்களும் ஒழிந்து நீங்க, உனது திருவடியில் நான் அணுக வரம்
தருவாய்.
சிவனுக்கு ஒப்பான அகத்திய முனிவர் உள்ளம் மகிழ இரு
செவிகளிலும்‘ இனிய தமிழை ஓதியவனே. சூரியன், சந்திரன்,
இயமன், இந்திரன், அக்கினி, குபேரன், திருமால், பிரமன் இவர்கள்
யாவரும் தம் கடமைகளைச் செய்ய முடியாதவாறு அலையும்படி
அரசாண்ட சூரனது மார்பு பிளக்கும்படி வேலைச் செலுத்தியவனே.
சிவபெருமானும் உமாதேவியும் மகிழ அவர்கள் மடியில் வளரும்
இளையோனே. மரக்கலங்கள் தவழும் கடலினிடை வரும் முத்துக்கள்
மணல் மேட்டில் மறையும்படி உயர்ந்த திருச்செந்தூர்க் கடற்கரையில்
வீற்றிருக்கும் பெருமாளே. உன் திருவடியில் அணுக வரம் தருவாய்.

விளக்கக் குறிப்புகள்
அ. அறிவழிய மயல் பெருக உரையும் உற......
(புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட் டைம்மேலுந்தி
அலமந்த போதாக அஞசே லென் றருள் செய்வா னமருங் கோயில்
வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென் றஞ்சிச்
சிலமந்தி யலமந்து மரமேறி முகில்பார்க்குந் திருவையாறே)----- சம்பந்தர்
தேவாரத் திருமுறை 1-130-1.