Courtesy: http://thiruppugazhamirutham.blogspo...012/09/80.html
14. அவனிபெறுந்
அவனிபெ றுந்தோட் டம்பொற்
குழையட ரம்பாற் புண்பட்
டரிவையர் தம்பாற் கொங்கைக் கிடையேசென்
றணைதரு பண்டாட் டங்கற்
றுருகிய கொண்டாட் டம்பொற்
றழிதரு திண்டாட் டஞ்சற் றொழியாதே
பவமற நெஞ்சாற் சிந்தித்
திலகுக டம்பார்த் தண்டைப்
பதயுக ளம்போற் றுங்கொற் றமுநாளும்
பதறிய அங்காப் பும்பத்
தியுமறி வும்போய்ச் சங்கைப்
படுதுயர் கண்பார்த் தன்புற் றருளாயோ
தவநெறி குன்றாப் பண்பிற்
றுறவின ருந்தோற் றஞ்சத்
தனிமல ரஞ்சார்ப் புங்கத் தமராடி
தமிழினி தென்காற் கன்றிற்
றிரிதரு கஞ்சாக் கன்றைத்
தழலெழ வென்றார்க் கன்றற் புதமாகச்
சிவவடி வங்காட் டுஞ்சற்
குருபர தென்பாற் சங்கத்
திரள்மணி சிந்தாச் சிந்துக் கரைமோதும்
தினகர திண்டோர்ச் சண்டப்
பரியிட றுங்கோட் டிஞ்சித்
திருவளர் செந்தூர்க் கந்தப் பெருமாளே.
- திருச்செந்துர்
14. அவனிபெறுந்
அவனிபெ றுந்தோட் டம்பொற்
குழையட ரம்பாற் புண்பட்
டரிவையர் தம்பாற் கொங்கைக் கிடையேசென்
றணைதரு பண்டாட் டங்கற்
றுருகிய கொண்டாட் டம்பொற்
றழிதரு திண்டாட் டஞ்சற் றொழியாதே
பவமற நெஞ்சாற் சிந்தித்
திலகுக டம்பார்த் தண்டைப்
பதயுக ளம்போற் றுங்கொற் றமுநாளும்
பதறிய அங்காப் பும்பத்
தியுமறி வும்போய்ச் சங்கைப்
படுதுயர் கண்பார்த் தன்புற் றருளாயோ
தவநெறி குன்றாப் பண்பிற்
றுறவின ருந்தோற் றஞ்சத்
தனிமல ரஞ்சார்ப் புங்கத் தமராடி
தமிழினி தென்காற் கன்றிற்
றிரிதரு கஞ்சாக் கன்றைத்
தழலெழ வென்றார்க் கன்றற் புதமாகச்
சிவவடி வங்காட் டுஞ்சற்
குருபர தென்பாற் சங்கத்
திரள்மணி சிந்தாச் சிந்துக் கரைமோதும்
தினகர திண்டோர்ச் சண்டப்
பரியிட றுங்கோட் டிஞ்சித்
திருவளர் செந்தூர்க் கந்தப் பெருமாளே.
- திருச்செந்துர்
பதம் பிரித்தல்
******************
பவம் அற நெஞ்சால் சிந்தித்து
இலகு கடம்பு ஆர் தண்டை
பத உகளம் போற்றும் கொற்றமும் நாளும்
******(சிற்றின்பத்தில் ஈடுபடாமல் இருக்க)
பவம் அற = பிறப்பு ஒழிய. செஞ்சால் சிந்தித்து =மனதால் தியானம் செய்து. இலகு = விளங்கும். கடம்பு ஆர் = கடப்ப மலர் நிறைந்த. தண்டை = தண்டை சூழ்ந்துள்ள. பத உகளம் = இரு திருவடிகள். போற்றும் கொற்றமும் = வணங்கும் உறுதியும். நாளும் =நாள்தோறும்.
பதறிய அங்காப்பும் பத்தியும்
அறிவும் போய் சங்கை
படு துயர் கண் பார்த்து அன்புற்று அருளாயோ
பதறிய அங்காய்ப்பும் = பதறுகின்ற விருப்பமும்.பத்தியும் = பக்தியும். அறிவும் = அறிவும். போய் =இல்லாது போய். சங்கைப் படு துயர் = அச்சமுறும் துயரில் (நான்) படுவதை. கண் பார்த்து = (நீ) பார்த்து.அன்பு உற்று அருளாயோ = அன்புற்று அருள மாட்டாயோ.
தவ நெறி குன்றா பண்பில்
துறவினரும் தோற்று அஞ்ச
தனி மலர் அஞ்சு ஆர் புங்கத்து அமர் ஆடி
தவ நெறி பண்பில் குன்றா = தவ நெறி குன்றாதகுணத்தினரான. துறவினரும் = தவசிகளும். தோற்று =தோற்று. அஞ்ச = பயப்படும்படி. தனி மலர் அஞ்சு ஆர்புங்கத்து அமர் ஆடி= ஒப்பற்ற ஐந்து மலர்கள் நிறைந்த குவியலைக் கொண்டு போர் புரிந்து.
தமிழ் இனி தென் கால் கன்றில்
திரிதரு கஞ்சா கன்றை
தழல் எழ வென்றார்க்கு அன்று அற்புதமாக
தமிழ் இனி = தமிழ் மொழி போல இனிய. தென் கால்கன்றில் திரி = இளந்தென்றல் காற்றில் உலவுகின்ற.கஞ்சா கன்றை = திரு மகள் மகனான மன்மதனை.தழல் எழ = நெருப்பை எழுப்பி. வென்றார்க்கு =.வென்ற சிவபெருமானுக்கு அன்று அற்புதமாக = அன்று அற்புதமான வழியில்.
சிவ வடிவும் காட்டும் சற்
குருபர தென் பால் சங்க
திரள் மணி சிந்தா சிந்து கரை மோதும்
சிவ வடிவம் காட்டும் = சிவ வடிவத்தைக் காட்டிய. சற்குருபர = சற்குருபரனே. தென் பால் = தென் திசையில்.சங்கத் திரள் மணி சிந்தா = சங்குகளின் கூட்டங்கள்முத்துக்களைச் சிந்துகின்ற. சிந்து கரை மோதும் =கடல் கரையில் மோதுகின்ற.
தினகர திண் தேர் சண்ட
பரி இடறும் கோட்டு இஞ்சி
திரு வளர் செந்தூர் கந்த பெருமாளே.
தினகர திண் தேர் = சூரியனுடைய வலிமை வாய்ந்ததேரில் (பூட்டியுள்ள). சண்ட பரி = வேகமான குதிரைகள். இடரும் கோட்டு இஞ்சி = இடறுகின்ற சிகரங்களை உடைய மதில் சூழ்ந்த. திரு வளர் =செல்வம் வளர்கின்ற. செந்தூர்க் கந்தப் பெருமாளே =திருச்செந்தூர்க் கந்தப் பெருமாளே.
சுருக்க உரை
*** சிந்தனை செய்து உன் திருவடிகளைப் போற்றுகின்ற திட வீரமும், உன்னைப் பற்ற ஆசையும், பக்தியும், அறிவும் இல்லாமல் போய், அச்சமுறும் என்னைக் கண் பார்த்து அருள்வாயாக.
தவநெறி குறையாத துறவிகள் கூட தோற்று அஞ்சும்படி ஐந்து வகையான மலர்ப் பாணங்களைக் கொண்டு போர் செய்து,தென்றல் காற்றில் உலவும் மன்மதனை நெருப்பிலிட்ட சிவபெருமானுக்குச் சற்குருபரனே. சங்குகளின் கூட்டங்கள் மணிகளைக் கடலில் சிந்த, மிக உயர்ந்த மதில் சூழ்ந்த திருச் செந்தூரில் வாழும் பெருமாளே. என்னைக் கண் பார்த்து அன்புற்று அருள்வாய்.

விளக்கக் குறிப்புகள்
அ. பத்தியும் அறிவும் போய்......
பக்தி என்பது அன்பு. அறிவு = ஞானம்.
(முருகன் குமரன் குகனென்று மொழிந்
துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்)----கந்தர் அனுபூதி
அ. பத்தியும் அறிவும் போய்......
பக்தி என்பது அன்பு. அறிவு = ஞானம்.
(முருகன் குமரன் குகனென்று மொழிந்
துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்)----கந்தர் அனுபூதி