Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    Courtesy: http://thiruppugazhamirutham.blogspo...012/09/80.html
    13.அருணமணி


    அருணமணி மேவு பூஷித
    ம்ருகமதப டீர லேபன
    அபிநவவி சால பூரண அம்பொற் கும்பத் தனமோதி
    அளிகுலவு மாதர் லீலையின் முழுகியபி ஷேக மீதென
    அறவுமுற வாடி நீடிய
    அங்கைக் கொங்கைக் கிதமாகி
    இருணிறைய மோதி மாலிகை சருவியுற வான வேளையி
    லிழைகலைய மாத ரார்வழி
    யின்புற் றன்புற் றழியாநீள்
    இரவுபகல் மோக னாகியெ படியில்மடி யாமல் யானுமுன்
    இணையடிகள் பாடி வாழஎ
    னெஞ்சிற் செஞ்சொற் றருவாயே
    தருணமணி யாட ராவணி குடிலசடி லாதி யோதிய
    சதுர்மறையி னாதி யாகிய
    சங்கத் துங்கக் குழையாளர்
    தருமுருக மேக சாயலர்தமரமக ராழி சூழ்புவி
    தனைமுழுதும் வாரி யோயமு
    துண்டிட் டண்டர்க கருள்கூரும்
    செருமுதலி மேவு மாவலி யதிமதக போல மாமலை
    தெளினுடன் மூல மேயென
    முந்தச் சிந்தித் தருள்மாயன்
    திருமருக சூரன் மார்பொடு சிலையுருவ வேலை யேவிய
    ஜெயசரவ ணாம னோகர
    செந்திற் கந்தப் பெருமாளே.

    - திருச்செந்துர்




    சுருக்க உரை


    ******* விலை மாதர்களின் காம லீலைகளில் முழுகி,அவர்களுடன் உறவாடி, இன்பம் பூண்டவனாய் நான் அழிந்து இப் பூமியில இறந்து போகாமல், உனது திருவடிகளைப் பாடி வாழ என்னுடைய மனதில் செஞ்சொற்களைத் தந்து அருளுக.


    பாம்பை அணிந்த சடையை உடைய ஆதிப் பெருமானும்,நான்கு வேதங்களுக்கும் முதல்வனுமாகிய சிவபெருமான் தந்து அருளிய முருகனே. கஜேந்திரன் ஆதி மூலமே என்று கதறியவுடன், முன்னதாக வந்து அருளிய திருமாலின் மருகனே. சூரனுடைய மார்பும் அவனுடைய ஏழு மலைகளும் ஊடுருவும்படி வேலைச் செலுத்தியவனே. செந்தூர்க் கந்தப் பெருமாளே. உன்னைப் பாடி வாழ செஞ்சொற்களை எனக்குத் தருவாயாக.



    விளக்கக் குறிப்புகள்


    அ. இருள் நிறை அம் ஓதி.... கருமை வாய்ந்த கரிய கூந்தல்.
Working...
X