Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    Courtesy: http://thiruppugazhamirutham.blogspo...012/09/80.html
    12.அமுதுததி


    அமுதுதி விடமுமிழு செங்கட் டிங்கட்
    பகவினொளிர் வெளிறெயிறு துஞ்சற் குஞ்சித்
    தலையுமுடை யவனரவ தண்டச் சண்டச் சமனோலை
    அதுவருகு மளவிலுயி ரங்கிட் டிங்குப்
    பறைதிமிலை திமிர்தமிகு தம்பட் டம்பற்
    கரையவுற வினரலற உந்திச் சந்தித் தெருவூடே
    எமதுபொரு ளெனுமருளை யின்றிக் குன்றிப்
    பிளவளவு தினையளவு பங்கிட் டுண்கைக்
    கிளையமுது வசைதவிர இன்றைக் கன்றைக் கெனநாடா
    திடுககடி தெனுமுணர்வு பொன்றிக் கொண்டிட்
    டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுட் டுண்டுட்
    டெனவகலு நெறிகருதி நெஞ்சத் தஞ்சிப் பகிராதோ
    குமுதபதி வகிரமுது சகிரமுது சிந்தச் சிந்தச்
    சரணபரி புரசுருதி கொஞ்சக் கொஞ்சக்
    குடிலசடை பவுரிகொடு தொங்கப் பங்கிற் கொடியாடக்
    குலதடினி அசையஇசை பொங்கப் பொங்கக்
    கழலதிர டெகுடெகுட டெங்கட் டெங்கத்
    தொகுகுகுகு தொகுகுகுகு தொங்கத் தொங்கத் தொகுதீதோ
    திமிதமென முழவொலிமு ழங்கச் செங்கைத்
    தமருகம ததிர்சதியொ டன்பர்க் கின்பத்
    திறமுதவு பரதகுரு வந்திக் குஞ்சற் குருநாதா
    திரளுமணி தரளமுயர் தெங்கிற் றங்கிப்
    புரளஎறி திரைமகர சங்கத் துங்கத்
    திமிரசல நிதிதழுவு செந்திற் கந்தப் பெருமாளே.



    - திருச்செந்துர்





    சுருக்க உரை
    விடத்தைக் கக்கும் சிவந்த கண்களையும், கொடுங் கோபமும் உடைய நமனது ஓலை வரும்போது உயிர் ஊசலாட, பல வகையான வாத்தியங்கள் முழங்க, உறவினர் கதறி அழ, தெரு வழியே உடலைக் கொண்டு போகும் போது, நம்முடைய பொருள் என்ற பற்று இல்லாமல், ஒரு குண்டு மணி அளவு கூட உணவைப் பிறருக்குப் பங்கிட்டுக் கொடுக்காமல் இருக்கும் பழி நீங்க, இப்போதே மனமாற ஈதல் புரிய மாட்டேனோ?


    காலில் உள்ள சிலம்புகள் வேத மொழிகளை ஒலிக்க, வளைந்த சடைகள் சுழல, பக்கத்தில் உள்ள பார்வதி ஆட, கங்கை அசைய, கழல்கள் அதிர, அன்பர்களுக்கு இன்ப நிலையை உதவும் நடன குருவான சிவபெருமான் வணங்கும் சற்குரு நாதனே. மணியும் முத்தும் உயர்ந்துள்ள தென்னை மரங்களில் தங்கிப் புரளும்படி அலைகளை வீசுகின்ற திருச்செந்தூரில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே. மனம் அஞ்சிப் பகிர்ந்து வாழ மாட்டேனோ?



    விளக்கக் குறிப்புகள்
    அ. அரவ தண்டச் சண்டச் சமனோலை.....
    (அரவ தண்டத்தில் உய்யலு மாமா..) - நாலாயிர திவ்ய ப்ரபந்தம் (பெரியாழ்வார) 4-5-3.
    ஆ அமுத உததி – திருபாற்கடல்
Working...
X