11 அந்தகன்
Courtesy: http://thiruppugazhamirutham.blogspo...012/09/80.html
அந்தகன்வ ருத்தினம் பிறகிடச்
சந்ததமும் வந்துகண் டரிவையர்க்
கன்புருகு சங்கதந் தவிரமுக் குணமாள
அந்திபக லென்றிரண் டையுமொழித்
திந்திரிய சஞ்சலங் களையறுத்
தம்புய பதங்களின் பெருமையைக் கவிபாடிச்
செந்திலை யுணர்ந்துணர்ந் துணர்வுறக்
கந்தனை யறிந்தறிந் தறிவினிற்
சென்றுசெரு குந்தடந் தெளிதரத் தணியாத
சிந்தையு மவிழ்ந்தவிழ்ந் துரையொழித்
தென்செய லழிந்தழிந் தழியமெய்ச்
சிந்தைவர என்றுநின் தெரிசனைப் படுவேனோ
கொந்தவிழ் சரண்சரண் சரணெனக்
கும்பிடு புரந்தரன் பதிபெறக்
குஞ்சரி குயம்புயம் பெறஅரக் கருமாளக்
குன்றிடிய அம்பொனின் திருவரைக்
கிண்கிணி கிணின்கிணின் கிணினெனக்
குண்டல மசைந்திளங் குழைகளிற் ப்ரபைவீசத்
தந்தன தனந்தனந் தனவெனச்
செஞ்சிறு சதங்கைகொஞ் சிடமணித்
தண்டைகள் கலின்கலின் கலினெனத் திருவான
சங்கரி மனங்குழைந் துருகமுத்
தந்தர வருஞ்செழுந் தளர்நடைச்
சந்ததி சகந்தொழுஞ் சரவணப் பெருமாளே.
- திருச்செந்துர்

பதம் பிரித்து பதவுரை
அந்தகன் வரும் தினம் பிறகு இட
சந்ததமும் வந்து கண்டு அரிவையர்க்கு
அன்பு உருகும் சங்கதம் தவிர முக்குணம் மாள
அந்தகன் = நமன். வரும் தினம் = கொண்டு போவதற்கு வருகின்ற தினத்தை. பிறகு இட = பின்னிட்டு ஓட (விலக). சந்ததமும் = எப்போதும். வந்து கண்டு =போவதும் காண்பதுமாக. அரிவையர்க்கு = பெண்கள் மீது. அன்பு உருகும் = மோகம் கொள்ளும். சங்கதம் =நட்பு. தவிர = விலக. முக்குணம் மாள = சத்துவம்,ராஜசம், தாமசம் ஆகிய மூன்று குணங்கள் அழிந்து போக.
அந்தி பகல் என்ற இரண்டையும் ஒழித்து
இந்திரிய சஞ்சலம் களை அறுத்து
அம்புய பதங்களின் பெரு மாயை கவி பாடி
அந்தி பகல் இன்றி இரண்டையும் = இரவு பகல் எனப்படும் (ஆத்மா செயலற்றுக் கிடக்கும்) இரண்டு நிலைகளையும். [ மறப்பு, நினைப்பு (கேவல சகல)எங்கின்ற இரண்டையும் - வாரியார் ஸ்வாமிகள்]ஒழித்து = ஒழித்து. இந்திரிய சஞ்சலங்களை அறுத்து = ஐம்புலன்களால் வரும் துன்பங்களையும் அறுத்து. அம்புய பதங்களின் பெருமையை = அழகிய தாமரை போன்ற உன் திருவடியின் பெருமையை. கவி பாடி = கவியில் பாடி.
செந்திலை உணர்ந்து உணர்ந்து உணர்வு உற
கந்தனை அறிந்து அறிந்து அறிவினில்
சென்று செருகும் தடம் தெளிதர தணியாத
செந்திலை = திருச்செந்தூரை. உணர்ந்து உணர்ந்து =கருதி உணர்ந்து. உணர்வு உற = ஞானம் பிறக்க.கந்தனை = கந்த வேளாகிய உன்னை. [உன் சொரூப லக்ஷ்ணத்தையும், தடஸ்த லக்ஷ்ணத்தையும்] அறிந்து அறிந்து = நன்றாக அறிந்து. அறிவினில் சென்று =அந்த அறிவின் வழியே போய். செருகும் = நுழைந்து முடிகின்ற. தடம் தெளிதர = இடம் தெளிவு பெற.தணியாத = அடங்காத.
சிந்தையும் அவிழ்ந்து அவிழ்ந்து உரை ஒழித்து
என் செயல் அழிந்து அழிந்து அழிய மெய்
சிந்தை வர என்று நின் தெரிசனை படுவேனோ
சிந்தையும் = மனமும். அவிழ்ந்து அவிழ்ந்து = (கல் போன்றமனமானது) நெகிழ்ந்து நெகிழ்ந்து. உரை ஒழித்து = பேச்சும் ஒழிந்து. என் செயல் அழிந்து அழிந்து = என் செயலும் அழிந்து அழிந்து. அழிய =அற்றுப் போக. மெய்ச் சிந்தை வர = உண்மையான அறிவு வர. என்று = எப்பொழுது. நின் தெரிசனைப் படுவேனோ = உன்னைக் காணப் பெறுவேனோ?
கொந்து அவிழ் சரண் சரண் சரண் என
கும்பிடு(ம்) புரந்தரன் பதி பெற
குஞ்சரி குயம் புயம் பெற அரக்கர் உரு மாள
கொந்து அவிழ் = பூங் கொத்துகள் மலர்ந்து கிடக்கும்.சரண் = திருவடிகளே. சரண் சரண் என = சரணம் சரணம் என்று. கும்பிடும் புரந்தரன் = கும்பிட்ட இந்திரன். பதி = அமராவதியைத் திரும்பப் பெற.குஞ்சரி = தேவசேனையின். குயம் = கொங்கை. புயம் பெற = (உனது) திருப்புயங்களைப் பெற. அரக்கர் =அசுரர்கள். உரு மாள = மாண்டு அழிய.
குன்று இடிய அம் பொனின் திருவரை
கிண்கிணி கிணின்கிணின் கிணி என
குண்டலம் அசைந்து இளம் குழைகள் ப்ரபை வீச
குன்று = கிரௌஞ்சம். இடிய = அழிபட. அம் பொ(ன்)னின் = அழகிய பொன்னாலாகிய. திருவரைக் கிண்கிணி = திருவரைக் கிண்கிணி. கிணின் கிணின் என = கிணின் கிணின் என்று ஒலிக்க. இளம் குழைகளில் = சிறிய செவிகளில். குண்டலம் அசைந்து =(காதில் அணிந்துள்ள) குண்டலங்கள். அசைந்து =அசைவதால். ப்ரபை வீச = ஒளி வீச.
தந்தன தனந்தனந் தனஎன
செம் சிறு சதங்கை கொஞ்சிட மணி
தண்டைகள் கலின் கலின் கலி என திருவான
தந்தன தனந்தனந்....என = தந்தன ....என்று. செம் சிறுசதங்கை = செவ்விய சிறு சதங்கைகள். கொஞ்சிட =சிற்றொலி செய்ய. மணித் தண்டைகள் = மணித் தண்டைகள். கலின் கலின் என = கலின் என்று ஒலிக்க.திருவான = அழகிய.
சங்கரி மனம் குழைந்து உருக முத்தம்
தர வரும் செழும் தளர் நடை
சந்ததி சகம் தொழும் சரவண பெருமாளே.
சங்கரி = சுகத்தைக் கொடுப்பவளாகிய பார்வதி. மனம் குழைந்து உருக = மனம் குழைந்து உருக. முத்தம் தர வரும் = முத்தம் தர எழுந்தருளும். செழும் தளர் நடை =செழுவிய தளர்ந்த நடையுடைய சந்ததி = பிள்ளையே.சகம் தொழும் = உலகம் தொழும். சரவணப் பெருமாளே = சரவணப் பெருமாளே.

சுருக்க உரை
நமன் என்னைக் கொண்டு போகும் அந்த நாள் பின்னிட்டு விலக,பெண்ணாசை விலக, முக்குணங்கள் அழிய, இரவு பகல் என்னும் இரண்டு நிலைகள் அழிய, ஐம்புலன்களால் வரும் துன்பங்களை அறுத்து, உன் தாமரைத் திருவடிகளின் பெருமையைக் கவிகளால் பாடி, திருச்செந்தூரைக் கருதி, உணர்ந்து ஞானம் பிறக்க, அறிவின் வழியே சென்று , தெளிவு பெற்று, மனம் உருகி, என் செயலும் அழிந்து, உண்மை அறிவு வர, எப்போது உன்னைக் காணப் பெறுவேனோ?
உன் திருவடிகளே சரணம் என்று கும்பிடும் இந்திரன் தனது பொன்னுலகைப் பெறவும், தேவசேனையின் கொங்கைகள் உனது திருப் புயங்களில் பொருந்தவும், அசுரர்கள் மாளவும், கிரௌவஞ்சம் பொடிபடவும், திருவரைக் கிண்கிணிகள் ஒலிக்கவும், சங்கரி மனம் குழைந்து உருக, முத்தம் தர எழுந்தருளும் பிள்ளையே. சரவணப் பெருமாளே. என்று நான் உன் தரிசனம் பெறுவேன்?

சொல் வளம் அடுக்குச் சொற்கள்
- உணர்ந்து உணர்ந்து உணர்வுற
- அறிந்து அறிந்து அறிவினில்
- சரண் சரண் சரண் என
- கிண்கிணி கிணின்கிணின் கிணின் என்றிட
- உணர்ந்து உணர்ந்து உணர்வுற
- அறிந்து அறிந்து அறிவினில்
- சரண் சரண் சரண் என
- கிண்கிணி கிணின்கிணின் கிணின் என்றிட