Courtesy: http://thiruppugazhamirutham.blogspo...012/09/80.html
10.தடக்கை
தடக்கைப் பங்கயங் கொடைக்குக் கொண்டல்தண்
டமிழ்க்குத் தஞ்சமென் றுலகோரைத்
தவித்துச் சென்றிரந் துளத்திற் புண்படுந்
தளர்ச்சிப் பம்பரந் தனையூசற்
கடத்தைத் துன்பமண் சடத்தைத் துஞ்சிடுங்
கலத்தைப் பஞ்சஇந் த்ரியவாழ்வைக்
கணத்திற் சென்றிடந் திருத்தித் தண்டையங்
கழற்குத் தொண்டுகொண் டருள்வாயே
படைக்கப் பங்கயன் துடைக்கச் சங்கரன்
புரக்கக் கஞ்சைமன் பணியாகப்
பணித்துத் தம்பயந் தணித்துச் சந்ததம்
பரத்தைக் கொண்டிடுந் தனிவேலா
குடத்தைத் தென்பரங் பொருப்பிற் றங்குமங்
குலத்திற் கங்கைதன் சிறியோனே
குறிப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங்
குவித்துக் கும்பிடும் பெருமாளே.
- திருப்பரங்குன்றம்

பதம் பிரித்து பதவுரை
தடக்கை பங்கயம் கொடைக்கு கொண்டல் தண்
தமிழ்க்கு தஞ்சம் என்று உலகோரை
தடக்கை = (உனது) பெரிய கை. பங்கயம் = தாமரை போன்ற பதுமநிதியாகும். கொடைக்கு = கொடைச் சிறப்பில். கொண்டல்= மேகம் போல்வாய். தண் = இனிய. தமிழ்க்கு = தமிழ் மொழிக்கும் புலவர்களுக்கும். தஞ்சம் = (நீ) புகலிடமாவாய்.என்று = என்று. உலகோரை = உலகத்தவரிடம்.
தவித்து சென்று இரந்து உளத்தில் புண் படும்
தளர்ச்சி பம்பரம் தனை ஊசல்
தவித்துச் சென்று = தவிப்புடன் சென்று. இரந்து = யாசித்து.உளத்தில் புண்படும் = மனது புண்பட்டு. தளர்ச்சி =தளர்ச்சியுறும். பம்பரம் தனை = (இந்தப்) பம்பரத்தை. ஊசல் =பதனிழிந்த (மன தடுமாற்றமடந்த).
கடத்தை துன்ப மண் சடத்தை துஞ்சிடும்
கலத்தை பஞ்ச இந்த்ரிய வாழ்வை
கடத்தை = பாண்டத்தை. துன்ப = துன்பத்துக்கு ஈடான. மண் சடத்தை = மண் உடலை. துஞ்சிடும் = அழிந்து போகும்.கலத்தை = பாண்டத்தை. பஞ்ச இந்த்ரிய வாழ்வை = ஐந்து பொறிகளின் வாயிலாக அனுபவிக்கும் வாழ்வை.
கணத்தில் சென்று இடம் திருத்தி தண்டை அம்
கழற்கு தொண்டு கொண்டு அருள்வாயே
கணத்தில் = நொடிப் பொழுதில். சென்று = வந்து. இடம் திருத்தி= (என் உள்ளமாகிய) இடத்தைத் திருத்தி. தண்டை அம் கழற்கு= தண்டைகள் அணிந்த (உன்) அழகிய திருவடிக்கு. தொண்டு கொண்டு அருள்வாய் = தொண்டு செய்யும்படி அருள் புரிவாயாக.
படைக்க பங்கயன் துடைக்க சங்கரன்
புரக்க கஞ்சை மன் பணியாக
படைக்கப் பங்கயன் = படைப்பதற்கு தாமரை மலரில் உறையும் பிரமன். துடைக்கச் சங்கரன் = அழிப்பதற்குச் சிவபெருமான்.புரக்க = காப்பதற்கு. கஞ்சை மன் = இலக்குமி நாயகன்.பணியாக = (என) அவரவர் பணி கொள்ளுமாறு.
பணித்து தம் பயம் தணித்து சந்ததம்
பரத்தை கொண்டிடும் தனி வேலா
பணித்து = நியமித்து. தம் பயம் தணித்து = அவர்களுடைய பயங்களை நீக்கி. சந்ததம் = எப்போதும். பரத்தைக் கொண்டிடும் = மேலாம் நிலையைக் கொண்டிருக்கும். தனி வேல் = ஒப்பற்ற வேலனே.
குடக்கு தென் பரம் பொருப்பில் தங்கும் அம்
குலத்தில் கங்கை தன் சிறியோனே
குடக்கு = (மதுரைக்கு) மேற்கே உள்ள. தென் பரம் பொருப்பில்= அழகிய திருப்பரங்குன்றத்தில் . தங்கும் = வீ ற்றிருக்கும். அம்= அழகிய. குலத்தில் = உயர் குலத்தைச் சேர்ந்த. கங்கை தன் சிறியோனே = கங்கையின் குழந்தையே
குற பொன் கொம்பை முன் புனத்தில் செம் கரம்
குவித்து கும்பிடும் பெருமாளே.
குறப் பெண் கொம்பை = வேடுவர் பெண்ணாகிய பூங்கொம்பு போன்ற வள்ளியை. புனத்தில் = தினைப் புனத்தில். செம் கரம் குவித்து = செவ்விய கைகளைக் கூப்பி. கும்பிடும் பெருமாளே =வணங்கும் தனிப்பெரும் தலைவரே.

சுருக்க உரை
உமது கைகள் தாமரை போன்றவை. கொடையில் நீ மேகம் போன்றவன். தமிழ்ப் புலவர்களுக்கு நீ ஒரு புகலிடமாவாய், என்று உலகத்தாரிடம் சென்று, யாசித்து, உள்ளம் புண் பட்டு தளர்ச்சி உறும்,இந்த ஊசிப் போகும் பாண்டத்தை, ஐந்து பொறிகளால் இன்பம் துய்த்து வாழும் இந்த மண் பாண்டத்தை, நொடிப் பொழுதில் வந்து, என் உள்ளத்தைத் திருத்தி, உனக்குத் தொண்டு செய்யும்படி அருள் புரிவாயாக.
படைக்கப் பிரமன், காக்க இலக்குமி நாயகன். அழிக்கச் சங்கரன் என்று பணிகளை நியமித்து, மேலாம் நிலையைப் பூண்டிருக்கும் வேலனே, திருப்பரங்குன்றத்தில் உறையும் கங்கையின் குழந்தையே, குறப்பெண்ணாகிய வள்ளியைக் கரம் கூப்பி வணங்கும் பெருமாளே, என் உள்ளத்தைத் திருத்தி அமைத்து நான் தொண்டு செய்ய அருள் புரிவாயாக.

விளக்கக் குறிப்புகள்
குடக்கு = மேற்கு.
(மாடமலி மறுகிற் கூடற் குடவயின்
இருஞ்சேற் றகல்வயல் விரிந்து வா
யவிழ்ந்த)...திருமுருகாற்றுப்படை 71.
குடக்கு = மேற்கு.
(மாடமலி மறுகிற் கூடற் குடவயின்
இருஞ்சேற் றகல்வயல் விரிந்து வா
யவிழ்ந்த)...திருமுருகாற்றுப்படை 71.