Announcement

Collapse
No announcement yet.

எக்ஸ்பிரஸ் கதைகள் !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • எக்ஸ்பிரஸ் கதைகள் !

    பாதுகாப்பு
    -
    எதிர்வீட்டுல நாய்கள் ஜாக்கிரதைன்னு போர்டு
    போட்டிருக்கு
    சிசிடிவி கேமா பொருத்திய இருக்கு.
    எக்ஸ்சர்வீஸமேன் ஒருத்தர் வீட்டுக்குப் பாதுகாப்பாப்
    போட்டிருக்கு..
    நமக்குத்தான் எந்த பாதுகாப்பும் இல்லை என்று
    பொருமினாள் மனைவி
    -
    ”டோன்ட் ஒர்ரி கண்ணு! இப்ப திருட்டுப் பசங்க
    கண்ணெல்லாம்
    அந்த வீட்டு மேலதான் இருக்கும். நம்ம வீட்டை
    ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டாங்க” என்றான்
    கணவன்.
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

  • #2
    Re: எக்ஸ்பிரஸ் கதைகள் !

    அதிர்ச்சி
    -
    டாடி மம்மி ரெண்டு பேருக்குமே சொல்றேன்.
    தாத்தா, பாட்டிகிட்ட நீங்க அன்பாகவும்
    மரியாதையாகவும் நடந்துக்கலேன்னா, என்னை
    ஹாஸ்டல்ல சேர்த்துடுங்க” என்ற ஏழாவது
    படிக்கும் தன் மகன் பவனை அதிர்ச்சியுடன்
    பார்த்தார்கள்
    நாகராஜனும், ஜமுனாவும்
    -
    முத்து ஆனந்த், வேலூர்
    -நன்றி- பொதிகைச் சாரல்
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment


    • #3
      Re: எக்ஸ்பிரஸ் கதைகள் !

      வளர்ப்பு
      -
      கூட்டுக்குடும்பத்துல வளர்ந்தவள்...
      குடும்பப் பெருமைகளை காப்பாத்துவாள்’னு
      நம்பித்தானே உங்க வீட்ல சம்பந்தம் செஞ்சோம்.

      இப்ப உங்க மகள் தனிக்குடுத்தனம் போகணும்னு
      அடம்பிடிக்கிறாளே!
      -
      என்னம்மா இதெல்லாம்?
      -
      கூட்டுக்குடும்பத்துல எனக்குச் சுதந்திரமும் பெண்
      உரிமையும்
      கிடைக்கலையே’பா...” என்றாள் மகள்.
      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

      http://eegarai.org/apps/Kitchen4All.apk

      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

      Dont work hard, work smart

      Comment


      • #4
        Re: எக்ஸ்பிரஸ் கதைகள் !

        செல்போன்..!
        -
        ’என் பையன் எனக்கு ஒரு செல்போன் வாங்கித்
        தந்திருக்கிறான்’ முதியவர் பொன்னம்பலம் தனது
        நண்பர் பரசிவத்திடம் சோகமாகச் சொல்லிக்
        கொண்டிருந்தார்.
        -
        “இதை ஒரு துக்கச் செய்தி மாதிரி சொல்றீரே,
        இது நல்ல விஷயம்தானே” என்றார் பமரசிவம்.
        -
        “இந்த செல்போனை வாங்கித் தந்துட்டு தொடர்பு
        எல்லைக்கு அப்பால் முதியோர் இல்லத்துக்கு அனுப்ப
        இது முதல்கட்ட நடவிடிக்கையாக இருக்குமோ!
        என்று என் மனசுல படுது” என்று
        உணர்வுகளை வெளிப்படுத்தினார் பொன்னம்பலம்
        -
        -டி.செல்வன்
        என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

        http://eegarai.org/apps/Kitchen4All.apk

        http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

        Dont work hard, work smart

        Comment

        Working...
        X