பங்குனி மாதத்தில் க்ரஹ பிரவேசம், பால் காய்ச்சுதல், வீடு மாறுதல் போன்ற பூமி சம்பந்தமான சுப காரியங்கள் செய்யப்படுவதில்லை. ஏன் தெரியுமா?
வீடு கட்ட நாம் வாஸ்து பகவானை வணங்குவது வழக்கம். அவர் பூமிக்குள் தூங்கிக்கொண்டு இருப்பவர். முழித்திருக்கும் நேரம் மிகவும் குறைவு. 36 நிமிடங்களே முழித்திருப்பார் என்கிறார்கள். அந்த நேரத்தை வாஸ்து நேரம் என்கிறோம். அந்த நேரத்தில் வாஸ்து பூஜை செய்து பூமி சம்பந்தமான காரியங்களை தொடங்குவது வழக்கம்.
பங்குனி மாதத்தில் வாஸ்து பகவான் முழிப்பதே இல்லை. பூமிக்கடியில் உறங்கிக்கொண்டே இருப்பார். இதனால் வாஸ்து பூஜை செய்ய இயலாது. மீறி வீடு கட்ட தொடங்கினால் வாஸ்து பகவானின் கோபத்திற்கு உள்ளாக நேரும். செய்யும் செயலில் தடங்கல்கள் ஏற்படும். எனவே தான் பங்குனியில் புதுமனை புகுதல்,பால் காய்ச்சுதல், வாஸ்து பூஜை, பூமி பூஜை ஆகியவை தவிர்க்கப்படுகின்றன
Source: பங்குனி மாதத்தில் பூமி பூஜை செய்வது கிடையாது. ஏன்?
Comment