மாசத்துக்கு நாலு தடவைதான் சந்திக்கணும்னு
என் லவ்வர் கன்டிஷன் போடுறார்…!
–
அவர் என்ன வேலை பார்க்கிறார்?
–
பேங்க் மானேஜர்..!
–
வி.சகிதா முருகன்
–
————————————
பேச்சாளர்:
–
சதா கூகுள் மேப்பும் கையுமா இருக்கும் எங்கள்
தலைவர்
எப்படித் தவறான பாதையில் செல்வார்…?
–
அ.ரியாஸ்
–
——————————————-
ஒரு ஊர்ல ஒரு அரசியல்வாதி…!
–
ஒரு கதை சொல்லச் சொன்னா, ஒரு ஊர் அழிஞ்ச
கதையைச் சொல்றீங்களே, பாட்டி!
–
அம்பை தேவா
–
——————————————-
–
என்னய்யா, போட்டோவுல என் மூஞ்சி பேய் அறைஞ்ச
மாதிரி இருக்கு?
–
நீங்க தொகுதிக்குப் போனப்ப எடுத்த போட்டோ,
தலைவரே!
–
கிணத்துக்கடவு ரவி
–
—————————————
நன்றி – விகடன்