Announcement

Collapse
No announcement yet.

நாடே போற்றுகிறது சந்திரபாபு நாயுடுவை..!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நாடே போற்றுகிறது சந்திரபாபு நாயுடுவை..!

    நாடே போற்றுகிறது சந்திரபாபு நாயுடுவை..!

    இன்று கின்னஸுக்கு நிகரான லிம்கா சாதனை புத்தகத்தில் அவரது மாபெரும் சாதனை இடம்பெற்றுள்ளது. வாழ்த்துகள் குவிகிறது. அப்படி என்ன செய்தார் ஆந்திர முதல்வர்?
    மக்களின் கனவு திட்டமாக, ஏட்டில் மட்டுமே இருக்கும் ஒரு தியரிட்டிக்கல் திட்டமான நதிநீர் இணைப்பு திட்டத்தை செய்து காட்டியுள்ளார். அதற்கு எடுத்துக்கொண்ட காலஅளவு ஒரே ஒரு ஆண்டு தான் என்பது நம் விழிகளை ஆச்சரியத்தில் விரியச்செய்கிறது!

    அட இதற்காக பட்ஜெட்டில் கூட எந்தவித மாற்றமும் செய்யவில்லை, பொதுப்பணித்துறையின் வழக்கமான பட்ஜெட் நிதியில் இருந்தே இந்த மாபெரும் சாதனையை செய்துள்ளார் என்பதை கேட்க்கும்போது ஆச்சரியங்கள் கூடிக்கொண்டே செல்கிறது.

    ஆம்! மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பாயும் கோதாவரி நதியையும், கிருஷ்ணா நதியையும் இணைத்து கடலில் வீணாக கலந்துகொண்டிருந்த 3000 டிஎம்சி நீரை 6 மாவட்டங்களுக்கு திருப்பி விட்டு புதிய டெல்டா பகுதிகளையே உருவாக்கியுள்ளார். குடிநீர் பற்றாக்குறை இருந்த ராயலஷீமா மாவட்டத்தின் பிரச்சனை இன்றோடு தீர்ந்துவிட்டது என்று அந்த மக்கள் பூரிப்படைகின்றனர். தங்கள் தலைவனை தலையில் வைத்து கொண்டாடுகின்றனர் ஆந்திர மக்கள்.

    அதிவேகமாக வளரும் மாநிலங்கள் பட்டியலில் ஆந்திரா தொடர்ந்து 3 ஆண்டுகளாக முதலிடத்தில் இருக்கிறது. கல்வியில் சொல்லவே தேவையில்லை.. வழக்கம்போல அனைத்து போட்டி தேர்வுகளிலும் ஆந்திர மாணவர்களே இந்திய அளவில் அதிக விழுக்காடு தேர்ச்சி பெறுகின்றனர்.

    தெலுங்கான பிரிந்தபோது விஜயவாடாவை ஆந்திர தலைநகராக ஆக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் "ஏற்கனவே நன்கு வளர்ச்சியடைந்த நகரம் அது, புதிதாக வேறொரு மாவட்டத்தை தலைநகராக்கினால் இன்னொரு நகரமும் வளரும் அல்லவா" என்று தொலைநோக்காக சிந்தித்து திட்டமிட்டார். அமராவதி நகரை புதிய தலைநகராக்கி சென்ற மாதம் தான் அதற்கான திறப்புவிழா கூட நடந்தது. ஆந்திர மக்கள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கொண்டாடுவதற்கு இந்த காரணங்கள் போதாதா!..

    4 டிஎம்சி நீருக்காக கர்நாடகாவுடன் குடுமிப்பிடி சண்டை நடத்தும் நம்மால், அந்த 4 டிஎம்சி தண்ணீரை கூட வாங்கி தர வக்கில்லாத நம் தமிழக அரசியல்வாதிகளிடம் இது போன்ற திட்டங்களை கனவிலும் எதிர்பார்க்க முடியுமா?

    நன்றி வாட்ஸுப் !


    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart
Working...
X