Announcement

Collapse
No announcement yet.

பெத்தமனம் பித்து?!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பெத்தமனம் பித்து?!

    வசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது! 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில்
    சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். மூதாட்டியான அவரது மனைவி அவருக்கருகில் அமர்ந்து
    தனது இடுங்கியக் கண்களால் பாகவதம் படித்துக் கொண்டிருக்கிறார். நன்கு படித்து, பெரிய பதவியில் இருக்கும்
    45 வயதுடைய அவர்களின் மகனும் தனது லேப்-டாப்பில் ஏதோ வேலை செய்துக்கொண்டிருக்கிறார்.

    திடீரென ஒரு காகம் முதியவரின் அருகிலிருந்த சன்னலில் வந்து அமர்ந்தது.
    'என்ன இது?' என்று கேட்டார் முதியவர்.

    லேப்-டாப்பிலிருந்து கண்களை விளக்கிய மகன் சொன்னார், 'அது ஒரு காகம்'
    சில நிமிடங்கள் கழிந்தன. அந்த முதியவர் மீண்டும் கேட்டார், 'என்ன இது?'

    'இப்பத்தானே சொன்னேன், அது ஒரு காகம்' என்றார் மகன்.
    சிறிது நேரம் கழித்து மூன்றாம் முறையாக அந்த முதியவர் தன் மகனிடம் கேட்டார், 'என்ன இது?'

    சற்று எரிச்சலான குரலில் மகன் பதிலளித்தார், 'அது ஒரு காகம், காகம்!'
    இன்னும் சிறிது நேரம் கழித்து அந்தத் தந்தை நான்காவது முறையாக அதே கேள்வியைக் கேட்டார், 'என்ன இது?'

    மகனோ
    பொறுமையை இழந்து விட்டார். தனது தந்தையைப் பார்த்து அவர் கத்தினார், 'அதே கேள்வியை
    ஏன் திரும்பத் திரும்ப கேட்டுட்டே இருக்கீங்க? எத்தனை முறைதான் பதில் சொல்வது, 'அது ஒரு காகம்' என்று? இதைக்கூட உங்களால புரிஞ்சுக்க முடியலையா?'
    முதுமை அடைந்து விட்டதால் மீண்டும் சிறு குழந்தை போல ஆனதாலோ என்னவோ, தந்தையின் முகத்தில்
    எந்தவித உணர்ச்சிகளும் தென்படவில்லை. அவருக்கருகில் அமர்ந்து அமைதியாகக் படித்துக் கொண்டிருந்த அவரது மனைவி எழுந்து தமது அறைக்குச் சென்று திரும்பினார். அவரது கையில்
    மிகப் பழைய நாட்குறிப்பு ஒன்று இருந்தது.

    அது அந்தத் தந்தையின் நாட்குறிப்பு. தன் மகன் பிறந்ததிலிருந்து அவர் அதில் எழுதி வந்தார். அதில் ஒரு பக்கத்தைத் திறந்தத் தாய் அதைத் தன் மகனிடம் கொடுத்து படிக்கச் சொன்னார்.

    அந்தப்
    பக்கத்தில் இவ்வாறு எழுதப் பட்டிருந்தது;
    'எனது சின்னஞ்சிறு மகன் என்னுடன் உட்கார்ந்திருக்கும்போது சன்னலில் ஒரு காகம் வந்தமர்ந்தது.
    என் மகன் 'அது என்ன' என்று 23 தடவைகள் கேட்டான். 'அது ஒரு காகம்' என்று நான் 23 தடவைகளும் பதில் சொன்னேன். அவன் ஒவ்வொரு முறை அந்தக் கேள்வியை கேட்டபோதும்
    நான் அவனை பாசத்துடன் அணைத்துக் கொண்டேன்.
    Last edited by ahobilam; 12-09-12, 21:14.

  • #2
    Re: பெத்தமனம் பித்து?!

    எனக்கு இந்த கதை மெயில் இல் வந்தது நல்ல கதை , இந்த காலத்து பசங்க படிக்கவேண்டிய கதை .
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment


    • #3
      Re: பெத்தமனம் பித்து?!

      பரவாயில்லை இந்த மகன் 4 முறையாவது பதில் சொன்னார் தற்கால மகன்களயிருப்பின் லேப்டாப்y எடுத்துக்கொண்டு ஒரு முறைமுரைத்துவிட்டு வேறு அறைக்கு சென்றிருப்பான்
      Last edited by soundararajan50; 23-11-12, 22:13. Reason: spelling mistake

      Comment

      Working...
      X