Announcement

Collapse
No announcement yet.

ஆன்மிக சிந்தனைகள் - காஞ்சி பெரியவர்!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஆன்மிக சிந்தனைகள் - காஞ்சி பெரியவர்!

    நம் கஷ்டங்களைச் சொல்வதாக இருந்தால் கடவுளிடம்
    மட்டும் உங்கள் கஷ்டங்களைச் சொல்லுங்கள்.
    கண்டஇடங்களிலும் கண்ணில் பட்ட மனிதர்களிடம்
    எல்லாம் நம் துன்பங்களைச் சொல்வதால் எப்பயனும்
    இல்லை.


    * பாவங்களை எப்படி தீர்த்துக் கொள்வது என்றால்
    புண்ணியத்தால் தான் தீர்த்துக் கொள்ள முடியும்.
    போன பிறவியில்செய்த பாவங்களை இந்த
    பிறவியிலாவது தீர்க்கட்டும் என்ற கருணையினால் தான்
    இறைவன் நமக்கு பிறப்பினைத்தருகிறார்.


    * மனம் இருக்கும்வரை ஆசைகள் இருக்கத்தான்
    செய்யும். அதனால் மனதை அடக்கி விட வேண்டும்.
    மனம் அடங்கக்கற்றுக் கொண்டால் மரணநிலையில்
    இருப்பதுபோல், ஒரு சக்தியுமின்றி ஜடம் போல்
    ஆகிவிடுவோம் என்றுஎண்ணக்கூடாது.


    மாறாக, மனம் அடங்கும் போது, சகல சக்திகளுக்கும்
    ஆதாரமான நிலை உருவாகும்.


    * சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றாக
    இணைந்திருப்பது. மனதில் உள்ளதை மறைக்காமல்
    அப்படியேஉண்மையாக இருப்பது சத்தியம். மனதில் ஒன்றும்,
    வாக்கில் வேறொன்றுமாக இருந்தால் அது அசத்தியமாகும்.


    * பேசும்போது வளவள என்று மிகையாகப் பேசாமல்
    நிதானமாக அளந்து பேச வேண்டும். திருவள்ளுவரும்
    எதைக்காக்காவிட்டாலும் நாக்கைக் கட்டுப்படுத்திப்
    பழகவேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்ள
    வேண்டும்.
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

  • #2
    Re: ஆன்மிக சிந்தனைகள் - காஞ்சி பெரியவர்!

    அளவுடன் பேசுவது நல்லது !
    -
    * திருமணம் மற்றும் சுபநிகழ்வுகளில் சடங்குகளுக்கு
    முக்கியத்துவம் அளிக்க வேண்டுமே தவிர
    ஆடம்பரத்துக்கு அல்ல.

    * இந்த விதையைப் போட்டால் இந்தப் பயிர் வரும்
    என்பது இயற்கை வகுத்த நியதி. அச்சட்டத்தை நம்மால்
    மீற முடியாது. பூர்வ ஜென்மங்களில் வினையை
    விதைத்தோம். அவ்வினை தரும் பலன் இன்பமோ
    துன்பமோ இப்போது அறுவடை செய்கிறோம்.

    * சத்தியம் என்பது வாக்கும் மனமும் ஒன்றுபடுவது
    மட்டுமல்ல. நல்ல மனதில் தோன்றும் நல்ல
    எண்ணங்களை மட்டும் சொல்வதே சத்தியமாகும்.

    * தெய்வப்பணியை விட்டுவிட்டு தேசப் பணி, மக்கள்
    பணி என்று புறப்படுவது தவறு. சமூக சேவையும்,
    தெய்வப்பணியும் கைகோர்த்து நடக்க வேண்டும்.
    தெய்வ சம்பந்தத்துடன் தான் தேசப்பணி செய்ய
    வேண்டும்.

    * பணம் மட்டுமல்ல, வார்த்தைகளை உபயோகிக்கும்
    போதும், ஒரு சொல்கூட அதிகமாகக் கூடாது. அளவாக,
    கணக்காகப் பேச வேண்டும். அதனால், நமக்கும் சரி,
    நம் பேச்சைக் கேட்கிறவர்களுக்கும் சரி பொழுது
    பயனுள்ளதாகிறது.
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment


    • #3
      Re: ஆன்மிக சிந்தனைகள் - காஞ்சி பெரியவர்!

      முதியவர்கள் என்ன செய்ய வேண்டும்?

      * தாயன்பைப் போல கலப்படமே இல்லாத பூரண
      அன்பை இந்த லோகத்தில் வேறு எங்குமே காணமுடியாது.

      * பால பிராயத்திலேயே காயத்ரியை ஜபிக்க
      ஆரம்பித்துவிட்டால் அது பசுமரத்தாணியாக பதியும்.
      காயத்ரியானது முக்கியமான மனோசக்தி, தேஜஸ்,
      ஆரோக்கியம் எல்லாவற்றையும் அபரிமிதமாக
      தரவல்லது.

      * நீ பலனை எதிர்பார்க்காமல் தர்மங்களை செய்.
      பலனை கொடுக்க வேண்டியது ஈஸ்வரனின் வேலை
      என்கிறது உபநிஷதம்.

      * குடும்ப பொறுப்புக்களை கூடிய விரைவில்
      முதியவர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு
      பதில் பொது ஜனங்களுக்காக பொறுப்பெடுத்துக்
      கொண்டு புண்ணியம் சம்பாதிக்க வேண்டும்.
      தாங்கள் தங்கள் ஆத்மாவை கவனித்துக் கொள்ள
      வேண்டும்.

      * தனக்கென்று எவ்வளவுகுறைவாக செலவழிக்க
      முடியுமோ, அப்படி எளிமையாக வாழ்ந்து, மிச்சம் பிடித்து,
      அதை தர்மத்திற்கு செலவழிக்க வேண்டும்.

      * அந்தரங்க சுத்தம் இல்லாமல் செய்கின்ற காரியங்கள்
      படாடோபமாகவே முடிந்துவிடும்.

      * நாம் பக்தி செய்வதால் ஈஸ்வரனுக்கோ, குருவுக்கோ
      எந்த லாபமும் இல்லை. நமக்குதான் பெரிய லாபம்.

      * நம் சரீரத்திற்கு எந்த வியாதி வந்தாலும், எந்த கஷ்டம்
      வந்தாலும், நிரம்ப வறுமையினாலே சிரமப்பட்டாலும்,
      இவையெல்லாம் நமக்கு வைராக்கியத்தை கொடுப்பதற்காக
      சுவாமியினால் கொடுக்கப்பட்டவை என கருதவேண்டும்.
      இவையெல்லாம் 'தபஸ்' என்று நினைத்துக்கொள்ள
      வேண்டும்.
      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

      http://eegarai.org/apps/Kitchen4All.apk

      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

      Dont work hard, work smart

      Comment


      • #4
        Re: ஆன்மிக சிந்தனைகள் - காஞ்சி பெரியவர்!

        கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா?

        தேகம், மனம், சாஸ்திரம், รทக்ஷத்திரம், தீர்த்தம்
        முதலிய பல சவுகரியங்கள் இந்த உலகத்தில்
        தான் நமக்குக் கிடைக்கும்.

        நாம் வாக்கினாலும், மனத்தினாலும், கை, கால்
        முதலியவற்றாலும் பாவம் செய்துகொண்டே
        இருக்கிறோம். அந்தப் பாவங்களையெல்லாம்,
        வாக்கு, மனசு, அவயவங்களைக் கொண்டே
        புண்ணியம் செய்து கரைத்திட வேண்டும்.

        எல்லோரும் அவரவர் தர்மத்தைக் காப்பாற்றிக்
        கொள்ளப் பயன்படுபவைதாம் ஆசாரங்கள்.
        நமக்கு அர்த்தம் தெரியவில்லை என்பதற்காக
        அவற்றை விட்டுவிடக் கூடாது.

        நம் துக்கங்களை எல்லாம் ஞானமாகிய தண்ணீரில்
        அமுக்கிவிட வேண்டும். அப்போது ஜலத்துக்குள்
        மூழ்கிய குடம் மாதிரி துக்கம் பரம லேசாகிவிடும்.

        'ஏழு அஞ்சில்' என்று ஒரு மரம் உண்டாம்.
        அதன் காய் முற்றியவுடன் பூமியில் விழுந்து உடையும்.
        உடனே உள்ளே இருக்கிற விதைகள் ஏதோ ஒரு
        ஆகர்ஷண சக்தியால் நகர்ந்து நகர்ந்து வந்து,
        மறுபடியும் தாய் மரத்தோடேயே ஒட்டிக் கொள்ளும்.

        ஒட்டிக்கொண்டபின் மூலமான மரத்துக்குள்ளேயே
        மறைந்து விடும் என்கிறார்கள். பகவானிடம் இருந்து
        பிரிந்து வந்திருக்கிற நாமும், இப்படியே அவன் ப
        க்கமாக நகர்ந்துபோய் முடிவில் அவனிடம் ஒட்டிக்
        கொண்டு ஒன்றாகிவிட வேண்டும்.
        --

        நாம் பக்தி பண்ணுகிறோம். ஆனால் எப்படி?
        கஷ்டம் வந்தால் மட்டும் அது நிவர்த்தியாகப் பெரிய
        பூஜை, சாந்தி எல்லாம் செய்கிறோம்.

        நிவிர்த்தியானால் அநேகமாகப் பூஜையையும் அதோடு
        விட்டுவிடுவோம். ஆகாவிட்டாலோ சுவாமியை திட்டுவோம்.
        எனவே, நமக்கு உண்மையான ஞானமும் பக்தியும் வர
        வேண்டும்.
        என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

        http://eegarai.org/apps/Kitchen4All.apk

        http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

        Dont work hard, work smart

        Comment

        Working...
        X