Announcement

Collapse
No announcement yet.

திருமணம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருமணம்

    திருமணம்


    கம்பராமாயணத்தில் திருமணம், முடிசூட்டல் போன்ற நிகழ்ச்சிகளுக்கு நன்னாள் நியமித்த செய்தி பேசப்பட்டிருக்கிறது. அந்தக் காலத்தில் ரிஷப ராசியில் ரோகிணி நட்சத்திர சாரத்தில் சந்திரன் வந்து நின்று உச்சம் பெறுகின்ற நாளில் திருமணம் நடந்தால், பிற்காலத்தில் மிகவும் சிறப்புற்று விளங்கும் என்று நம்பினார்கள்.
    அரண்மனை அமைக்க:
    சங்க இலக்கியத்தில் அரண்மனை அமைக்க மனையடி சாஸ்திர விதியை நாடினர். ஜோதிட அறிஞர்கள் நாழிகை கணக்குப் பார்த்து திருமுறைபார்த்து செய்திருக்கிறார்கள்.
    சித்திரை மாதம் 10-ம் தேதி முதல் 20-ம் தேதிக்குள் ஏதேனும் ஒரு நாளில் பகல் பொழுதில் 15 நாழிகை அளவில் சூரியன் நடு உச்சியில் இருக்கும்போது நிலத்தில் இரண்டு கம்புகளை நாட்டி,, நிழல் எந்தத் திசையிலும் சற்றும் விழாத நிலையை அறிந்து மனைக்கு அடிக்கல் இட்டு திருமுறை சார்த்திய செய்தியை
    விரிகதிர் பரப்பிய வியன்வாய் மண்டிலம்
    இருக்கோற் குறிநிலை வழுக்காது குடக்கோல்
    பொறுதிறந் சாரா அரை நாள் அமையத்து
    நூலறி புலவர் நுண்ணுதிற் கயிறிட்டுத்
    தே எங் கொண்டு தெய்வம் நோக்கி
    பெரும் பெயர் மன்னர்க்கொப்ப மனைவகுத்து
    உலவுத் தலைவந்த பெருநாள் அமையத்து
    இருசுடர் தம்முள் நோக்கி ஒரு சுடர்
    புன்கண் மாலை மலை மறைந்தாங்கு
    என்கிற சங்கப் பாடல் கூறுகிறது.
    -- ( ஜோதிடம் தெளிவோம் ) பகுதியில்...
    -- ஜோதிட ரத்னா மன்னை ஸ்ரீமதி வி. அகிலாண்டேஸ்வரி ஐயர்.
    -- 'தி இந்து' நாளிதழ். பெண் இன்று . ஞாயிறு , நவம்பர் 23, 2014.
    Posted by க. சந்தானம்
Working...
X