Announcement

Collapse
No announcement yet.

Breath

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Breath

    சித்தர்களின் குரல் shiva shangar
    சூட்சுமம் திறந்த திருமந்திரம் {பாகம் 3}
    ******************************
    ***************
    ************************************
    {யோகத்தை பயிலுபவர்களுக்கு , யோகத்தை
    பற்றி விரிவாக அறிய விரும்புபவர்களுக்கு
    9000 வருடங்களுக்கு முன்னரே திருமூல
    தெய்வம் நமக்கு அளித்த யோக ரகசியங்கள் .
    படித்து முழுமையான பலனை பெறுவோம் .}
    அட்டமா சித்திகளில் ஒன்று "லகிமா சித்தி.'
    இந்த லகிமா சித்தியைப் பெற்ற சித்தர்களால்
    தாம் விரும்பிய மாத்திரத்தில் தமது உடலைக்
    காற்றை விட லேசாக்கிக் கொள்ள முடியும்.
    தரையில் கால்படாமல் மிதக்க முடியும். நீரின்
    மேல் நடக்க முடியும். காற்றில் பறந்து
    செல்லவும் முடியும். இப்பாடலின் கடைசி
    அடிக்கு, முதலாவது பாட பேதத்தை எடுத்துக்
    கொண்டால் "லகிமா சித்தி' குறித்து திருமூலர்
    கூறுவதாக எடுத்துக் கொள்ளலாம்.
    இரண்டாவது பாட பேதத்தை எடுத்துக்
    கொண்டால்
    "மனிதனும் கடவுளாகலாம்' என்ற
    சூட்சுமத்தை திருமூலர் விளக்குவதாகக்
    கொள்ளலாம்.
    இரண்டுமே பொருத்தமுடைய
    விளக்கங்களாகவே தோன்றுகின்றன.
    பிறந்தது முதல் இறப்பது வரையில்
    அனைவருமே சுவாசிக்கிறோம்.
    மனிதர்கள்
    மட்டுமின்றி தாவரங்களும் விலங்குகளும்கூட
    சுவாசிக்கின்றன.
    கண்ணுக்குத் தெரியாத
    பாக்டீரியாக்கள் எனும் நுண்ணுயிர்களில்கூட
    சுவாசம் என்பது நடைபெறுகிறது. சுவாசமே
    உயிரின்- உயிர் வாழ்தலின் ஆதாரம்.
    இந்த சுவாசத்தை முறைப்படுத்தி, ஆயுளை
    நீட்டிப்பது என்பது ஆறறிவு படைத்த
    மனிதர்களுக்கு மட்டுமே சாத்தியமாகும்.
    அனைத்து உயிரினங்களிலும் சுவாசம் என்பது
    தானாகவே நடைபெறும் ஒரு அனிச்சை
    செயலாகவே உள்ளது.
    மனிதர்களால் மட்டுமே
    அதை முறைப்படுத்தி, நமது இச்சைக்கு
    உட்பட்ட ஒரு செயலாக மாற்றியமைக்க
    முடியும். இந்த சுவாசப் பயிற்சி களின்
    சூட்சுமங்களைக் கூறும் சில திருமந்திரப்
    பாடல்களைக் காணலாம்.
    "ஏற்றி யிறக்கி யிருகாலும் பூரிக்குங்
    காற்றைப் பிடிக்குங் கணக்கறி
    வாரில்லை
    காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
    கூற்றை யுதைக்குங் குறியது வாமே'
    -திருமந்திரம் பாடல் எண்: 564.
    சுவாசம் என்பது இரு பகுதிகளைக் கொண்டது.
    உள்ளே மூச்சை இழுப்பது (உள் சுவாசம்),
    மூச்சை வெளியே விடுவது (வெளி சுவாசம்).
    சுவாசப் பயிற்சியின்போது இடது நாசியின்
    வழியாக (இடகலை நாடி) மூச்சை உள்ளே
    இழுத்து, வலது நாசியின் வழியாக (பிங்கலை
    நாடி) வெளியே விட வேண்டும். இந்த இரு
    நாடிகளையே "இருகாலும்' என்கிறார்
    திருமூலர்.
    "ஏற்றி யிறக்கி யிருகாலும் பூரிக்குங்
    காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை.'
    உள்ளே, வெளியே என இடகலை, பிங்கலை
    ஆகிய இரு நாடிகளையும் நிறைக்கும்
    (பூரிக்கும்) காற்றை தன் வசப்படுத்தும்
    (பிடிக்கும்) கணக்கை பெரும்பாலான
    மனிதர்களும் உணர்ந்து கொள்வதில்லை என
    முதல் இரு அடிகளில் திருமூலர்
    குறிப்பிடுகிறார்.
    "காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
    கூற்றை யுதைக்குங் குறியது வாமே.'
    காற்றை வசப்படுத்தும் கணக்கை அறிந்து
    கொண்ட வர்களுக்கு அதுவே யமனை அல்லது
    மரணத்தை (கூற்றை) வெல்லுகின்ற
    (உதைக்கும்) வழிமுறையாகும்.
    (குறியதுவாமே!) காலனை எட்டி உதைக்கும்
    வழியே மூச்சுப் பயிற்சி என்கிறார் திருமூலர்!
    "காலா உனை நான் சிறு புல்லென
    மதிக்கிறேன்- என்றன்
    காலருகே வாடா சற்றே உனை மிதிக்கிறேன்!'
    என்ற மகாகவி பாரதியின் வரிகளை யும் இங்கே
    நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
    திருமூலரும் பாரதியும் எதற்காக "உதைத்தல்'
    என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிரு
    க்கிறார்கள் என்பதை சற்றே சிந்தித்துப்
    பாருங்கள். பெரும் பாலான மனிதர்களுக்கு
    "மரண பயம்' என்பது அடிமனதில் ஏதோ ஒரு
    மூலையில் இருந்துகொண்டேதான்
    இருக்கிறது. வயது ஏற ஏற மரண பயமும்
    படிப் படியாக அதிகமாகிறது. அந்த மரண
    பயமே அவர்களைப் பெரும் துன்பத்தில் ஆழ்த்தி
    விடுகிறது.
    மரணமும், அதைக் கொண்டு
    வருவதாகக் கூறப்படும் காலனும் (யமனும்)
    அஞ்சத் தகுந்தவையல்ல என்பதை
    மறைமுகமாக உணர்த்தவே "எட்டி
    உதைக்கிறேன்', "உதைக்கும் குறியதுவாமே'
    என்பன போன்ற சொற்களை இந்த இருவரும்
    உபயோகப் படுத்தியுள்ளனர்.
    மரணம் என்பது
    துச்சமானது. காலால் அதை எட்டி உதைக்க
    முடியும் என்று உணர்த்தி, மக்களின் மனதை
    மூடிக்கிடக்கும் "மரண பயத்தை'ப்
    போக்குவதற்காகவே இவர்கள் "உதைத்தல்'
    என்ற சொல்லைப் பயன் படுத்தியிருக்க
    வேண்டும். ஒருவர் மகாசித்தர்! மற்றொருவர்
    மகாகவி!
    சாதாரண மனிதர்களுக்கு மூச்சை வசப்
    படுத்தும் கணக்கு தெரியாது என இந்தப்
    பாடலில் உரைத்த திருமூலர்,
    அடுத்த சில பாடல்களில் அந்த கணக்கு என்ன
    என்பதையும் விளக்கிவிடுகிறார்! அவற்றை
    ஒவ்வொன்றாகக் காணலாம்.
    "மேல், கீழ், நடுப்பக்கம் மிக்கு உறப் பூரித்துப்
    பாலாம் இரேசகத்தால் உட்பதிவித்து
    மாலாகி உந்தியுள் கும்பித்து வாங்கவே
    ஆலாலம் உண்டான் அருள் பெறலாமே.'
    -திருமந்திரம் பாடல் எண்: 565.
    மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது
    மேல், கீழ், நடுப்பக்கம் ஆகிய மூன்று
    பகுதிகளும் அந்தக் காற்றால் நிரம்பிப் பூரிக்க
    வேண்டும். (சற்றே பெரிதாக வேண்டும்).
    இங்கே திருமூலர் குறிப்பிடும் மூன்று
    பகுதிகள் எவை?
    மேல்- உச்சந்தலை
    நடுப்பக்கம்- நெஞ்சுப் பகுதி
    கீழ்- அடி வயிற்றுப்பகுதி
    ஆகிய மூன்று பகுதிகளையே திருமூலர்
    குறிப்பிடுவதாகவே பெரும்பாலான விளக்க
    உரைகளும் கூறுகின்றன.
    ஆனால் நவீன
    மருத்துவ விஞ்ஞானப்படி இது ஒரு தவறான
    கருத்தாகத் தெரியலாம். எப்படி? சற்றே
    விளக்கமாகக் காண்போம்.
    நாம் காற்றை உள்ளே இழுக்கும் போது நமது
    விலாப்பகுதிகளிலுள்ள சுவாசத் தசைகள்
    (Respiratony muscles) சுருங்குவதால்
    நெஞ்சுக்கூடு (தண்க்ஷ ஸ்ரீஹஞ்ங்)
    விரிவடைகிறது.
    அதே நேரத்தில் நம்
    மார்பையும் வயிற்றையும் பிரிக்கும்
    உதரவிதானம் கீழ்நோக்கி நகருகிறது. இதனால்
    நெஞ்சுக் கூட்டினுள்ளே ஒரு வெற்றிடம்
    உருவாகிறது. அதை சமன் செய்ய
    வெளியிலிருந்து காற்று உள்ளே நுழைய,
    நுரையீரல்கள் விரிவடைகின்றன. இதுவே உள்
    சுவாசம் (Inspiration) .
    மூச்சை வெளியே விடும்போது இதற்கு
    நேர்மாறான நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
    சுவாசத் தசைகள் விரிவடைவதால் நெஞ்சுக்
    கூடு சுருங்குகிறது.
    உதரவிதானம் மேல்
    நோக்கி நகருகிறது. இதனால் நெஞ்சுக்
    கூட்டின் உள்ளே அழுத்தம் அதிகமாவதால்
    நுரையீரல் கள் சுருங்குகின்றன. அதன் உள்ளே
    நிறைந் திருக்கும் காற்று வெளியே
    தள்ளப்படுகிறது. இதுவே வெளி சுவாசம்
    (Expirtaion).
    இந்த உள்சுவாசம், வெளிசுவாசம்
    இரண்டும் மாறி மாறி நடைபெற்று
    வருகின்றன.
    ஆக சுவாசத்தின்போது சுவாசக் குழாய்கள்
    (தொண்டை), நெஞ்சுக்கூடு, உதரவிதானம்,
    நுரையீரல்கள் ஆகியவையும் சுருங்கி
    விரிகின்றன. இதுவே நவீன விஞ்ஞானம்
    கூறும் உண்மை.
    சுவாசக் காற்று நெஞ்சுக்
    கூட்டைத் தாண்டி நேரடியாக அடிவயிற்றுப்
    பகுதிக்குச் செல்வதோ அல்லது மேலே
    தொண்டையைத் தாண்டி உச்சந்தலைக்குச்
    செல்வதோ, நவீன உடற்கூறியல் (Anatomy),
    உடல் இயங்கியல் (Physiology)
    தத்துவங்களின்படி நிகழ முடியாத
    செயல்களாகும்.
    சுவாசம் மூக்கு, தொண்டை, மூச்சுக் குழாய்,
    நுரையீரல்கள் ஆகிய பகுதிகளுக்குள் மட்டுமே
    செல்ல முடியும்- அங்கிருந்து வெளியே வர
    முடியும்.
    உச்சந்தலைக்கோ வயிற்றுப் பகுதிக்கோ
    செல்வதற்கான பாதைகளோ வழிகளோ உடலில்
    இல்லை என்பதே நவீன விஞ்ஞான உண்மை.
    அப்படியானால், திருமூலர் கூற்று
    விஞ்ஞானத்திற்கு ஏற்புடையதல்ல
    என்றாகிறது. ஆனால் விஞ்ஞானத்தால் விளக்க
    முடியாத பலவற்றிற்கும் திருமூலர் கண்ட
    மெய்ஞ்ஞானத் தில் விளக்கம் உண்டு.
    நாம் சுவாசிக்கும்போது காற்றிலுள்ள பிராண
    வாயுவை (ஆக்சிஜன்) மட்டுமின்றி, காற்றில்
    நிறைந்து நிற்கும் பிரபஞ்ச சக்தி (பிராண
    சக்தி)யையும் சேர்த்தே உள்ளே இழுக்கிறோம்.
    காற்றும் அதிலுள்ள பிராண வாயுவும்
    நுரையீரல்களைத் தாண்டி வேறு
    இடங்களுக்குச் செல்ல முடியாது என்பது
    உண்மையே. ஆனால் பிராண சக்திக்கு
    இத்தகைய தடைகள் கிடையாது. நாம்
    சுவாசிக்கும்போது உள்ளே நுழையும் பிராண
    சக்தி, உடலின் ஒவ்வொரு செல்லுக்குள்ளும்
    ஊடுருவிச் செல்லுகிறது. நாம் ஒவ்வொரு
    முறை சுவாசிக்கும் போதும் நுரையீரல்கள்
    மட்டுமின்றி உடலிலுள்ள அனைத்து தசை
    களும் மூட்டுகளும்கூட சுருங்கி விரிகின்றன.
    இந்த பிராண சக்தியானது நமது உடலிலுள்ள
    நாடிகள் எனப்படும் சக்தி நாளங்களின் வழியே
    உடல் முழுவதும் கொண்டு செல்லப்
    படுகிறது. இந்த நாடிகள் நமது பருவுடலுக்கு
    சற்றே வெளிப்புறமாக உள்ள சக்தி உடலில்
    அமைந்துள்ளன.
    பருவுடலின் தடைகள்
    எதுவும் இந்த சக்தி உடல்களில் கிடையாது.
    நமது உடலிலுள்ள சக்கரங்கள், நாடிகள்,
    தசவாயுக்கள், பஞ்ச பூதங்கள் ஆகியவற்றைக்
    குறித்த சூட்சும ரகசியங்களை அறிந்து
    கொண்டவர்கள் மூச்சுப் பயிற்சிகளின் மூலம்
    சுவாசத்திலிருக்கும் பிராண சக்தியை உடலின்
    எந்த பாகத்திற்கும் தமது விருப்பப்படி
    கொண்டு செல்ல முடியும்.
    பிராண சக்தியின் வழியாக உடலிலுள்ள சக்தி
    மையங்களான சக்கரங்களைத் தூண்டிவிட
    முடியும். இதன் அடிப்படையில்
    பார்க்கும்போது, திருமூலர் கூறும் மூன்று
    பகுதிகளும் மூன்று சக்கரங்களைக்
    குறிப்பதாகவே கொள்ள வேண்டும்.
    மேல்: சகஸ்ராரச் சக்கரம் (மேல் நிலைச்
    சக்கரம்).
    நடுப்பக்கம்: அனாஹதச் சக்கரம் (இடைநிலைச்
    சக்கரம்).
    கீழ்: மூலாதாரம் (கீழ்நிலைச் சக்கரம்).
    சுவாசத்தை உள்ளே இழுக்கும்போது அந்த
    சுவாசத்திலுள்ள பிராண சக்தியானது இந்த
    மூன்று சக்கரங்களையும் நிறைக்க வேண்டும்.
    இந்த மூன்று சக்கரங்களும் தூண்டப்பட்டு,
    முழுத்திறனுடன் செயலாற்றத்
    துவங்கும்போது, மீதமுள்ள நான்கு
    சக்கரங்களின் செயல்பாடு களும்
    தூண்டப்பட்டுவிடும்.
    இனி இப்பாடலின்
    அடுத்த இரண்டு வரிகளைக் காணலாம்.
    "பாலாம் இரேசகத்தால் உட்பதிவித்து
    மாலாகி உந்தியுள் கும்பித்து வாங்கவே.'
    உள்ளே இழுத்த மூச்சுக் காற்றை வெளியே
    விடும்முன் (இரேசகம்) அதை சற்று நேரம்
    உடலில் தங்கியிருக்குமாறு செய்ய வேண்டும்.
    (உட்பதிவித்து). இவ்வாறு காற்றை உள்ளே
    தங்க வைப்பதையே "கும்பகம்' என்பார்கள்.
    "உந்தி' என்பது வயிற்றைக் குறிக்கும் சொல்லா
    கும். வயிற்றுப் பகுதியில் மூச்சை கும்பகம்
    செய்தல் வேண்டும். (உந்தியுள் கும்பித்து
    வாங்கவே).
    இந்த முறைப்படி மூச்சுப் பயிற்சியைத்
    தொடர்ந்து செய்து வந்தால்-
    "ஆலாலம் உண்டான் அருள் பெறலாமே.'
    ஆலாலம் என்பது ஆலகால விஷத்தைக்
    குறிக்கிறது.
    தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக்
    கடைந்தபோது முதலில் வெளி வந்தது
    ஆலகாலம் எனும் கொடிய விஷமாகும். அந்த
    விஷத்தின் காற்று பட்டாலே உயிரினங் கள்
    அனைத்தும் அழிந்துவிடும்.
    தேவர்களையும் அசுரர்களையும் காப்பாற்ற
    அந்த ஆலகாலத்தை சிவபெருமான் உண்டதாக
    புராணக் கதை உள்ளது. பார்வதி தேவி பயந்து
    போய் தனது கணவரின் கழுத்தைத் தாண்டி
    அந்த விஷம் சென்றுவிடாதிருக்க அவரது
    கழுத்தை இறுகப் பற்றிக் கொண்டதால், விஷம்
    தொண்டைப் பகுதியிலேயே தங்கிப்
    போய்விட்டதால் அந்தப் பகுதி மட்டும்
    நீலநிறமாக மாறிப்போய் விட்ட தாம்.
    எனவேதான் சிவனுக்கு நீலகண்டன் என்ற
    பெயரும் வந்தது.
    (இந்த கதை முழுக்க முழுக்க ஒரு உருவகம்
    ஆகும். குண்டலினி, லலானச் சக்கரம், நம்
    உடலில் சுரக்கும் அமுதம், மூன்று முதன்மை
    நாடிகள், விசுத்திச் சக்கரம் ஆகியவற்றைக்
    குறிக்கும் ஒரு உருவகக் கதை. அது குறித்து
    விரிவாக இத்தொடரில் காண இயலாது.)
    தொடர்ந்து மூச்சுப் பயிற்சிகளைச் செய்து
    வருபவர்களுக்கு சிவனின் அருள்
    முழுமையாகக் கிடைக்கும் என்பதே
    நான்காவது வரியின் பொருளாகும்.


    To be continued
Working...
X