Announcement

Collapse
No announcement yet.

Saiva Siddhantam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Saiva Siddhantam

    🏼 சர்வம் சிவமயம் 🏼




    சைவசித்தாந்தம் – ஒரு வார்த்தையில் விளக்கம்.


    சைவம் என்றால் என்ன?


    சைவம் என்றால் சிவ சம்பந்தமுடையது என்பது பொருள்.


    சைவ சமயம் எப்போது தோன்றியது?


    சைவ சமயம் அநாதியானது. அநாதி என்றால் ஆதி அற்றது (தொடக்கமில் காலம் தொட்டு) என்பது பொருள்.


    யார் சைவர்?


    சிவபெருமானை முழுமுதற் கடவுள் என உணர்ந்து வழிபடுபவரே சைவர்.


    சைவ சமயத்தின் முக்கிய நூல்கள் யாவை?


    பதினான்கு சாத்திரங்களும், பன்னிரண்டு திருமுறைகளும்.


    சமயக் குரவர்கள் யாவர்?


    1. திருஞான சம்பந்த நாயனார்
    2. திருநாவுக்கரசு நாயனார்
    3. சுந்தரமூர்த்தி நாயனார்
    4. மாணிக்கவாசகர்


    அகச்சந்தானக் குரவர்கள் யாவர்?


    1. திருநந்தி தேவர்
    2. சனற் குமாரமுனிவர்
    3. சத்திய ஞான தரிசினிகள்
    4. பரஞ்சோதி முனிகள்


    புறச்சந்தானக் குரவர்கள் யாவர்?


    1. ஸ்ரீ மெய்கண்டதேவ நாயனார்
    2. அருள்நந்தி சிவாச்சாரியார்
    3. மறைஞான சம்பந்தர் சுவாமிகள்
    4. உமாபதி சிவாச்சாரியார்


    திருமுறை மற்றும் சாத்திரங்களின் அமைப்பு எவ்வாறு உள்ளது?


    திருமுறைகள் சிவபெருமானின் பெருமைகளை விளக்கும் புகழ் நூல்களாக் அமைந்திருக்கின்றன. சாத்திரங்கள் சைவ சமயத்தின் கொள்கைகளை விளக்கும் பொருள் நூல்களாக அமைந்துள்ளன.


    திருமுறை என்ற சொல்லுக்குப் பொருள் யாது?


    முறை என்னும் சொல் நூல் என்னும் பொருளை உடையது. திருமுறை என்பது மாறாத செல்வத்தை மக்கள் எளிதாகப் பெறுவதற்கு வழிகாட்டும் நூல் என்பது பொருள்.
    இந்நூல் 12 பகுதிகளாக தொகுக்கப் பெற்று பன்னிரு திருமுறை என்று போற்றப்படுகிறது.


    திருமுறைகள் பிரணவத்துள் அடங்கும் என்பதை விளக்குக?


    பன்னிரு திருமுறையில் முதல் பாடல் 'தோடு' என்னும் சொல்லுடன் தொடங்கி, இறுதிப் பாடலில் 'உலகெலாம்' என்ற சொல்லுடன் முடிகிறது. தோடு என்பதில் முதல் எழுத்து ஓ உலகெலாம் என்பதில் ஈற்றெழுத்து ம் ஆகும்.


    திருமுறைகளை முறையாக வகைப்படுத்தியவர் யாவர்?


    திருநாரையூரில் பொல்லாப் பிள்ளையாருக்குப் பூசைகள் செய்து அவரிடம் நேரடியாக உபதேசம் பெற்ற நம்பியாண்டார் நம்பிகள். இராசராச சோழர் காலத்தில் பொல்லாப் பிள்ளையார் அருளினால் நம்பியாண்டார் நம்பிகள், மறைத்து வைக்கப்பட்டிருந்த தேவாரங்களை எடுத்து தொகுத்து அருளினார்கள்.


    திருமுகப் பாசுரம் யார் அருளிச் செய்தது?


    திருமுகப்பாசுரம் சிவபெருமானால் அருளிச் செய்யப்பட்டது. இப்பகுதி பதினொராம் திருமுறையில் அமைந்திருக்கிறது.


    பஞ்சபுராணம் குறிப்பு தருக.


    மூவர் தேவாரங்களில் ஒரு பாடலும், திருவாசகத்தில் ஒரு பாடலும், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு மற்றும் பெரியபுராணத்தில் இருந்து ஒவ்வொரு பாடலுமாக மொத்தம் ஐந்து பாடல்கள் பாடுவது பஞ்சபுராணம் எனப்படும்.


    அகத்தியர் தேவாரத் திரட்டு – குறிப்பு தருக.


    அகத்திய முனிவர் 'அடங்கள் முறை' முழுவதையும் சிவாலய முனிவருக்கு உபதேசித்து. அவற்றில் இருந்து 25 பதிகங்களை திரட்டி ஒரு நூலாக செய்து அருளினார். அந்நூலே அகத்தியர் தேவாரத் திரட்டு ஆகும். இதில் 8 நிலைகள் உள்ளன.


    1. குருவருள்
    2. பரையின் வடிவம்
    3. அஞ்செழுத்து
    4. கோயில் திறம்
    5. சிவன் உருவம்
    6. திருவடிகள் பெருமை
    7. அருச்சனைச் சிறப்பு
    8. அடிமைத் திறம்


    தேவார அருள்முறைத் திரட்டு – குறிப்பு தருக.


    மூவர் பெருமக்கள் அருளிச் செய்த தேவாரங்களை திருவருட்பயன் என்னும் சாத்திர நூலில் வரும் பத்து தலைப்புகளில் உமாபதிசிவம் ஒரு நூல் அருளியுள்ளார். அந்நூலுக்கு தேவார அருள்முறைத் திரட்டு என்று பெயர். அந்நூலில் 99 தேவாரப் பாடல்கள் உள்ளன.


    பன்னிரு திருமுறைகளில் மொத்தம் எத்தனை பாடல்கள்?


    18,497 பாடல்கள்.


    மூவர் பெருமக்கள் பாடிய மொத்த பதிகங்கள் எவ்வளவு?


    மொத்தம் பாடியவை கிடைத்தவை


    திருஞான சம்பந்த சுவாமிகள் 1,60,00,383
    திருநாவுக்கரசு சுவாமிகள் 4,90,00,312
    சுந்தரமூர்த்தி சுவாமிகள் 3,80,00,100
    ————————————————————
    மொத்தம் 10,30,00,795
    ————————————————————


    நால்வர் பெருமக்களின் அவதாரத் தலங்கள் எவை?


    திருஞான சம்பந்த சுவாமிகள் – சீர்காழி
    திருநாவுக்கரசு சுவாமிகள் – திருவாமூர்
    சுந்தரமூர்த்தி சுவாமிகள் – திருநாவலூர்
    மாணிக்கவாசகர் – திருவாதவூர்


    நால்வர் பெருமக்கள் இப்பூவுலகில் வாழ்ந்த காலம் எவ்வளவு?


    திருஞான சம்பந்த சுவாமிகள் – 16 ஆண்டுகள்
    திருநாவுக்கரசு சுவாமிகள் – 81 ஆண்டுகள்
    சுந்தரமூர்த்தி சுவாமிகள் – 18 ஆண்டுகள்
    மாணிக்கவாசகர் – 32 ஆண்டுகள்


    திருத்தொண்டர் தொகை ஆசிரியர் யார்?


    சுந்தரமூர்த்தி சுவாமிகள்.


    நாயன்மார்கள் மொத்தம் எத்தனை பேர்?


    அறுபத்து மூவர்.


    சாத்திரத்தில் தோத்திரம், தோத்திரத்தில் சாத்திரம் என்று கூறப்படும் நூல்கள் எவை?


    சாத்திரத்தில் தோத்திரம் – போற்றிப் ப•றொடை
    தோத்திரத்தில் சாத்திரம் – திருமந்திரம்


    மெய்கண்டாருக்கு உபதேசம் செய்தது யார்?


    பரஞ்சோதி முனிகள்


    மெய்கண்டாரின் மாணாக்கர்கள் எத்தனை பேர்?


    அதில் தலையாய மாணவராக விளங்கியவர் சகல ஆகம பண்டிதர் என்று அழைக்கப்படும் அருள்நந்தி சிவாச்சாரியார். 'துகளறுபோதம்' என்ற நூலை அருளிச் செய்த சிற்றம்பல நாடிகளும் இவர் மாணாக்கரே.


    சிவஞான போதத்திற்கு காலத்தால் முற்பட்ட சாத்திர நூல்கள் யாவை?


    திருவுந்தியார் மற்றும் திருக்களிற்றுப்படியார்.


    அருள்நந்தி சிவம் அருளிச் செய்த நூல்கள் யாவை?


    1. சிவஞான சித்தியார்
    2. இருபா இருப•து


    சித்தாந்த அட்டகம் – விளக்குக.


    பதினான்கு சாத்திரங்களில் உமாபதிசிவம் அருளிச் செய்த நூல்கள். மொத்தம் எட்டு. அந்த எட்டு நூல்களே சித்தாந்த அட்டகம் என வழங்கப்படுகிறது.


    1. சிவப்பிரகாசம்
    2. திருவருட்பயன்
    3. உண்மை நெறி விளக்கம்
    4. போற்றிப் ப•றொடை
    5. கொடிக்கவி
    6. வினா வெண்பா
    7. சங்கற்பநிராகரணம்
    8. நெஞ்சு விடுதூது
    என்பவையே அந்த எட்டு நூல்கள்.


    ஞானாமிர்தம் என்ற நூலின் ஆசிரியர் யார்?


    வாகீச முனிவர்


    வேதங்கள் – குறிப்பு தருக.


    வேதம் சிவபிரானால் அருளிச் செய்யப்பட்டது. இது கர்மகாண்டம், ஞான காண்டம் என இரு பகுதிகளை உடையது. ரிக், யசுர், சாமம், அதர்வணம் என நான்கு வேதங்கள் உள்ளன.


    ஆகமங்கள் – குறிப்பு தருக.


    ஆகமங்களும் சிவபிரானால் சிறப்பாக சைவர்களுக்கு அருளிச் செய்யப்பட்டன. சிவ ஆகமங்கள் 28 உள்ளன. சைவசமயம் வேதத்தைப் பொது எனவும், ஆகமத்தை சிறப்பு எனவும் கருதுகிறது.


    சமயங்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?


    அகச்சமயம், அகப்புறச்சமயம், புறச்சமயம், புறபுறச்சமயம் என நான்கு வகைப்படும்.
    அகச்சமயம் அகப்புறச்சமயம்


    1. பாடாணவாத சைவம், 1. பாசுபதம்
    2. பேதவாத சைவம், 2. மாவிரதம்
    3. சிவசமவாத சைவம், 3. காபாலம்
    4. சிவசங்கிராந்தவாத சைவம், 4. வாமம்
    5. ஈசுவர அவிகாரவாத சைவம், 5. பைரவம்
    6. சிவாத்துவித சைவம், 6. ஐக்கியவாத சைவம்


    புறச்சமயம் புறப்புறச்சமயம்.


    1. நியாயம், 1. உலகாயதர்
    2. சாங்கியம், 2. சமணர்
    3. யோகம், 3. செளத்திராந்திகர்
    4. மீமாஞ்சை, 4. யோகசாரர்
    5. வேதாந்தம், 5. மாத்யமிகர்
    6. பாஞ்சராத்திரம், 6. வைபாடிகர்


    சைவ சித்தாந்தர் என்ற குறிப்பினைத்தரும் திருமுறை எது?


    திருமந்திரம் :-


    "கற்பனைக் கற்று கலைமன்னும் மெய்யோகம்
    முற்பத ஞானம் முறைமுறை நண்ணியே
    சொற்பதங் கடந்து துரிசற்று மேலான
    தற்பரம் கண்டுளோர் சைவசித்தாந்தரே"


    சைவ சித்தாந்த தத்துவத்தின் சிறப்பு யாது?


    1. தர்க்க ரீதியானது (Logic)
    2. அறிவியற் பூர்வமானது (Scientific)
    3. வரலாற்றுத் தொன்மையுடையது (Historic)
    4. நடைமுறைக்கு இயைந்தது (Easy to Adapt)
    5. உலகளாவியது (Universal)
    6. முற்போக்குச் சிந்தனைகளை உடையது (Optimistic)


    சற்காரிய வாதம் – சிறுகுறிப்பு தருக.


    'உள்ளது அழியாது, இல்லது தோன்றாது' என்ற விஞ்ஞான அடிப்படையில் தான் சைவசித்தாந்த தத்துவம் தனது கொள்கைகளை நிலைநிறுத்துகிறது.


    அளவை – குறிப்பு தருக.


    நீட்டல் அளவை, நிறுத்தல் அளவை போல உலகப் பொருள்களை அளப்பதற்கு பலவிதமான அளவை முறைகள் இருப்பவை போல சமய உலகிலும் பல அளவைகள் பேசப்படுகின்றன. குறிப்பாக மூன்று அளவைகள்.


    1. காட்சி அளவை – (பிரத்தியட்சப் பிராமணம்)
    2. கருதல் அளவை – (அனுமானப் பிராமணம்)
    3. உரை அளவை – (ஆகமப் பிராமணம்)


    மேலும் பல அளவை முறைகள் இருப்பினும் பொதுவாக அவைஎல்லாம் மேற்சொன்ன மூன்றில் அடங்கும்.


    சைவசித்தாந்தம் கூறும் முப்பொருள்கள் யாவை?


    1. இறைவன் – பதி
    2. உயிர் – பசு
    3. மலம் – பாசம்


    இம்மூன்று பொருள்களுக்கும் உரிய தொடர்பினை கீழ்வரும் திருமந்திரப் பாடல் விளக்குகின்றது :-


    "பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்
    பதியினைப் போல் பசு, பாசம் அநாதி
    பதியினைச் சென்று அணுகா பசு பாசம்
    பதி அணுகிற் பசு பாசம் நில்லாவே"


    முப்பொருள்களும் அறிவுடைப் பொருள்களா?


    இறைவன் – தாமே அறியும் பேரறிவு உடையவன்.
    உயிர்கள் – அறிவிக்க அறியும் சிற்றறிவு உடையவன்.
    மலங்கள் – அறிவித்தாலும் அறியாத சடப்பொருள்கள்.


    பொருள்களின் இரண்டு இயல்புகள் யாவை?


    பொருள்களுக்கு பொது இயல்பு, சிறப்பு இயல்பு என இரண்டு இயல்புகள் உண்டு.


    பொது இயல்பு :-


    ஒரு பொருளுக்கு மற்றொரு பொருளின் சார்பால் உண்டாகி, அச்சார்பு நீங்கிவிடும் போது நீங்கி விடும் இயல்பு.
    (எ.கா) நீரில் வெம்மை


    சிறப்பு இயல்பு :-


    ஒரு பொருளுக்கு எச்சார்ப்புமின்றி இயற்கையாகவே அமைந்திருக்கும் இயல்பு.




    🏻 திருச்சிற்றம்பலம் 🏻
Working...
X