Announcement

Collapse
No announcement yet.

Thiruvadi & Sambandar swamigal

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Thiruvadi & Sambandar swamigal

    திருவடி பற்றி திருஞானசம்பந்தர் பெருமான்


    பன்னிரு திருமுறைகளுள் முதல் ஏழு திருமுறைகளை தேவாரம் எனத் தொகுத்தார் நம் முன்னோர்கள். இதில் முதல் மூன்று திருமுறை திருஞான சம்பந்தர் அவர்களால் அருளப்பட்டது.


    சம்பந்தரின் ஞானம், இறைவனை உணர்ந்த ஞானம்! முற்பிறவியின் பயனால் 3 வயதிலே வாலை அருளால் ஞானப்பால் அருந்தியவர்! தன்னை உணர்ந்தார்! ஒளியானார்! தான் மட்டுமல்ல! தன் 16 வயதிலே தான் திருமணத்திற்கு வந்திருந்த அனைவரையும் தன்னோடு பேரொளியிலே ஒளியாகி கலக்க வைத்த ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஞானி.


    வள்ளல் பெருமானும் திருஞானசம்பந்தரை "நற் காழி ஞான சம்பந்த தெள்ளமு தாஞ் சிவகுருவே" என போற்றி பாடுகிறார். திருஞான சம்பந்தரை போற்றி "ஆளுடைய பிள்ளையார் அருண் மாலை" என்ற தலைப்பில் பாடல் இயற்றி உள்ளார் வள்ளல் பெருமான்.


    இறைவன் திருவடியான மெய்ப்பொருளான கண்ணை – கண்ணில் ஒளிரும் ஒளியை பற்றி திருஞானசம்பந்தர் பெருமான் தேவாரத்தில் பாடியுள்ள பாடல்களில் சிலவற்றை எங்கள் குரு நாதரின் தேவார விளக்க உரை நூல் "மூவர் உணர்ந்த முக்கண்" என்ற நூலிலிருந்து கொடுக்கிறோம்.


    "கருமை பெற்ற கடல் கொள்ள மிதந்ததோர் கலம் இது" – பாடல் 5


    நமது கண் அமைப்பை நன்றாக பாருங்கள். வெள்ளை விழி – அதன் நடுவே கருவிழி – இந்த கருவிழியை தான் கருமை பெற்ற கடல் என்கிறார் திருஞான சம்பந்தர், வெள்ளை விழி தான் திருப்பாற்கடல் என்றார்கள் ஆழ்வார்கள். இந்த கருவிழியாகிய கருங்கடலிலே மிதக்கின்ற கலம் தான் நம் கண்மணி. எவ்வளவு ஒப்பற்ற உவமை இது. நம் கண்மணி வேறு எதையும் பற்றாமல் கருவிழியில் பிராணநீரில் மிதந்து கொண்டிருக்கிறது. இது தான் ஞான இரகசியம். தாயின் கருவினுள் சிசு பனிக்குடத்தில் இருப்பது போலவே கண்மணியும் "நீர் மேல் நெருப்பாக" மிதந்து கொண்டிருக்கிறது. கண்மணியின் மையம் ஊசிமுனை துவாரம் உள்ளது. அதனுள் ஊசிமுனை அளவு நெருப்பு. என்னே இறைவனின் படைப்பின் அற்புதம். யாரறிவார் இந்த ஞான இரகசியத்தை. சீர்காழியில் 3 வயது திருஞான சம்பந்தரை ஆட்கொண்டு அருளிய இறைவனின் திருநாமம் தோணியப்பர். கலம் – தோனி. கருமை பெற்ற கடல் கொள்ள மிதந்ததோர் கலம் – தோனி நம் கண்மணி , அதன் நடுவிலே இறைவன். தோணியாகிய கண்மணியிலே அம்மையப்பன் – அப்பன் – தோணியப்பர். உன் கண்மணியே – தோணியப்பர். காழிப்பிள்ளை உரைத்த ஞானம் இது.


    "அடி வீழ் தரு மிடும் பாவனத் திறையே" – பாடல் 182


    திருவடி – கண்மணி. அங்கே ஒளிரும் இறையே பாவனம். கண்மணி ஒளியே இறைவன் – திருவடி – பாவனம். பாவனமான கண்மணியான இறைவன் திருவடியே இறையவன்.


    "பச்சமுடை யடிகள் திருப் பாதம்பணி வாரே" – பாடல் 184


    இவ்வுயிரிடத்தும் பச்சமுடைய – அன்புடைய அருளாளர்களே இறைவன் திருப்பாதமாம் கண்மணியை அறிந்து பணிந்து தவம் செய்வர். சிறுவர்கள் நான் உன் கூட பச்சம் நான் உன் கூட சண்டை என்று கூறுவார்களே! அது தான்! பச்சம் என்றால் நட்பு. உன்னோடு சேர்ந்தவன் எனப்பொருள்.


    "கண்டமர் மாமயி லாடுங் கற்குடி மாமலை யாரே" – பாடல் 467


    நமது கண்டம் – கண்ணில் ஒளியே மயிலாடும் துறையிலே பல வர்ண ஒளி என்றது. மேரு மலையான கண்ணிலே கற்குடியான் ஒளியே. கண்ணிலே குடியிருப்பவனே கற்குடியான்.


    "தண்மதி சூடிய சைவர்" – பாடல் 461


    சைவர் யார் என்றால் தண்மதி சூடியவர். ஞான சற்குரு மூலம் உபதேசம் தீட்சை பெற்று எப்போதும் குளிர்ந்த சந்திர ஒளியோடு நினைந்து உணர்ந்து நெகிழ்பவரே. நமது இடது கண்ணையே சந்திரனாம்.


    "பாதந் தொழுவார் பாவந் தீர்ப்பார் " பாடல் 722


    இறைவனுடைய பாதம் – திருவடியான – மெய்ப்பொருளான நம் கண்மணியில் ஒளியானவனை தொழுவார் – எண்ணி தவம் செய்வார் பாவம் எல்லாம் சிவன் தீர்ப்பார்.


    "கண் மேற் கண்ணும்" – பாடல் 723


    கண்மேல் கண் – கண்மேல் – மத்தியில் உள்ள ஊசிமுனை துவாரத்தின் உள் ஊசிமுனை அளவு ஒளி. அதுவே :கண் மேற் கண்" பரிபாஷை. சிந்தித்து அறிய வேண்டும்.


    "தூண்டு சுடர் பொன்னொளிகொள் மேனிப்பவளத் தெழிலார்" – பாடல் 770


    நம் சிரநடுவுள் துலங்கும் ஜோதி , சுடர் நாம் தவம் செய்து துண்ட துண்ட தான் ஒளிரும் பொன்னொளியாகும். தங்க ஜோதியாகும். அது தான் சிவம். செக்க சிவந்த பவளம் போன்ற அழகிய ஒளியே அது.


    தீங்கரும் பனையர் தன் திருவடி தொழுவார்
    ஊன்றி நயந்துருக உவவைகள் தருவா
    ருச்சி மேலுறைபவ ரொன்றலாதூரார் – பாடல் 832


    இறைவன் திருவடியாகிய தன் கண்களை எண்ணி ஞான தவம் செய்வோருக்கு தித்திக்கும் சுவைமிகு இனிக்கும் கரும்பு போன்றவர் இறைவன். அவரை , கண்மணி மத்தியிலே நம் மனதை ஊன்றி உணர்ந்து நெகிழ்ந்து உருகுவார் , ஞான தவம் செய்வோருக்கு எல்லா இன்பமும் தருவார் கடவுள். உச்சியான ஊசிமுனை துவாரத்தை பற்றி இரு கண்ணும் ஒன்றும் படி விடாது தொடர்ந்து ஞான தவம் செய்பவர் ஒன்றலாம் இறையோடு. அதுவே கடவுள் இருக்கும் ஊராம்.


    மறை நால்வர்க் குருவளரால நீழலமர்ந்தீங் குரைசெய்தார்
    கருவளர் கண்ணார் கோயிலடைந்தோர் கற்றாரே – பாடல் 1094


    நம் சிர நடுவுள் – அது தான் கல்லால மர அடி. அங்கு தான் இறைவன் குருவாக அமர்ந்து நமக்கு உபதேசிப்பார். அங்கு போக வழி , கருவளர் கண்ணார் கோயில். கருவிலே முதல் முதலாக வளர்ந்த கண்ணிலே கோயில் கொண்டான் இறைவன். நம் கண்ணகியை கோயிலிலே குடியிருக்கும் ஒளியாகிய கடவுளை எண்ணி உணர்ந்து நெகிழ்ந்தாலே ஞான தவம் செய்தாலே அடைய முடியும். கோயில் வாசல் வழியாக உட்சென்று தானே கருவறையில் இருக்கும் கடவுளை காண முடியும். கண்ணாகிய கோயில் ஊசி முனை வாசலை திறந்து உள்ளே போனால் கருவறையில் கல்லால மரநிழலில் நம் குரு – நம் ஜீவனாக அந்த சிவனே அமர்ந்திருப்பதை காணலாம். அந்த சிவன் தட்சிணாமூர்த்தி – குருமூர்த்தி உபதேசங் கேட்கலாம். கல்லாத கலை அனைத்தும் கற்கலாம். ஞான பண்டிதனாகலாம்.


    தம்மலரடி யொன் றடியவர் பரவத்
    தம்மலரடி யொன் றடியவர் பரவத்
    அம்மலர்க் கொன்னற யணிந்த வெம்மடிகள்
    அச்சிறு பாக்கம் தாட்சி கொண்டாரே – பாடல்-834


    தம்மலரடி – தன் கண்களை ஒன்றும் படியாக ஞான தவம் செய்வோர். தமிழாலும் ஞானம் அறியலாம். வடமொழியாலும் இறைவன் திருவடி சேரலாம். வேதங்கள் வடமொழிதானே. நால்வேதத்தை போற்றாத நல்லடியார் யாருளர். நம் மலராகிய கண்மலராகிய கொன்றை பூவை அணிந்தார் நம் திருவடியில் உள்ள இறைவனே. அவர் இருப்பது அச்சிறுபாக்கம் – அந்த சிறிய பார்க்கும் இடம் அதுவே அச்சிறுபாக்கம். நம் கண் தான். தமிழ் நாட்டில் எல்லா ஊர் பெயரும் கண்ணையே குறிக்கும். கடவுளின் எல்லா பெயரும் கண்ணே. அங்கே ஆட்சி கொண்டிருப்பவர் ஒளியான சிவம் தான்.


    பெண்ணாணாய பேரருளாளன் பிரியாத
    கண்ணார் கோயில் கைதொழுவோர் கட் கிடர் பாவம்
    நண்ணாவாகுந் – பாடல் 1091


    பெண் ஆணாய் ஆன பேரருளாளன் – சிவம் பாதி சக்தி பாதியாகிய இறைவன். நம் தலை நடு உள்ளெ இருக்கும் ஒளி சிவம் இடது கண்ணாக சக்தியாக வலது கண்ணாக சிவமாக அர்த்த நாரிஸ்வரராக பெண்ணாணாயவராய் துலங்குகிறார். உலக மக்கள் அனைவரும் உய்ய வேண்டி எல்லோருக்குள்ளும் தானே வந்து அமர்ந்த தயாளன். பேரருளாளன். அவன் நம் கண்ணையே கோயிலாக கொண்டு எக்காலமும் நம்மை விட்டு பிரியாமல் இருக்கிறான். திருஞான சம்பந்தர் நம் கண்ணையே கோயிலாக கொண்டு இறைவன் இருக்கிறான் என தெள்ள தெளிவாக கூறி விட்டார். கண்ணாகிய கோயிலிலே குடியிருக்கும் ஒளியை கண்டு தொழுவோர்க்கு கண்ணாகிய கண்ணை சேர்த்து உள் புகுவோர்க்கு எந்த துன்பமும் வராது. அவர் பாவ வினை யாவும் போகும்.


    எவ்வுலகிற்குங் கண்ணவனைக் கண்ணார் திகழ் கோயிற் கணிதன்னை
    நண்ணவல்லோர்கட் கில்லை நமன்பால் நடலையே – பாடல் 1096


    எவ்வுயிர்க்கும் இறைவன் , அவர் அவர் கண்ணாக – கண்ணிலே கண்மணியிலே ஒளியாக கோயிலாக கொண்டு திகழ்கிறான். அந்த இறைவனை கற்பகக்கனியை கண்ணிலே துலங்கும் அவனை நாடி சேரத் தெரிந்தவர்க்கு எமனிடம் வேலை இல்லை. மரணமிலா பெருவாழ்வு வாழலாம்.


    மண்ணிடை வாழுமு யிர்க்கெல்லாம் கண்ணானே – பாடல் 1625


    வேத புராண ஞானியர் பாடல்களை படித்தால் அதில் எல்லாம் இருக்குமா?! உங்களுக்கு ஒன்றும் புரியாது. சிலது புரியும் பலதும் குழம்பிவிடும். பரிபாஷை இரகசியம் ஒன்றும் புரியாது. அதனால் தான் ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்றனர் ஞானியர்.


    இப்பூமியில் வாழும் எல்லா உயிர்களிடத்தும் கண்ணாக கண் ஒளியாக அந்த இறைவனே துலங்குகிறான்.


    "கனல் சேர்ந்த கண்ணானே" – பாடல் 1896


    நம் கண்ணில் கனல் சேர்ந்து உள்ளது. கண்ணாடி போன்ற மறைப்பு உள்ளதால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


    "சீர் வாயதுவே பார் கண்னே பரிந்திடவே" – பாடல் 1897


    இறைவன் நமக்கு கொடுத்த சீர்! நம் தாய்வீடான இறைவன் வீட்டிலிருந்து kodutha சீதனம் தான் சீர். நமது கண்மணி ஒளியே. கண்மணியின் வாயில் தான் – அதன் உள்ளே தான் ஒளி. வாயில் அடைக்கப்பட்டுள்ளது. கண்ணை பார் – கண்மணி ஒளியை எண்ணி எண்ணி பார். அப்போது தான் உள் உறையும் ஈசன் பரிந்து அருள்புரிவார். தவம் செய் வாயில் திறக்கும்.


    கருவரை காலி லடர்ந்த கண்ணுதலான் கடம்பூரில் – பாடல் 2208


    கருவரை உள்ளெ – தலை நடு உள்ளெ. கால் – இறைவன் திருவடி – பாதம் நம் உடலாகிய ஊரில் கடம்பூரில் கண்ணோடு கலந்திருப்பவனே. கண்ணில் ஒளியாக இருப்பவனே கடவுள். கடம்பூரில் – உள்ளெ போனால் கடவுள்ளே கடவுள் உள்ளே தான் காணலாம்.


    கண்ணது வோங்கிய கயிலையாரும் – பாடல் 3967


    கண்ணில் ஓங்கிய ஒளியே கயிலையார் சிவமே!


    "கண்ணினா லின்பங் கண்டொளி பரக்குங்" – பாடல் 4071


    கண்மணி ஒளியை எண்ணி உணர்ந்து ஞான தவம் செய்தால் காணலாம் ஒளியை அடையலாம் பேரின்பம்.
    www.vallalyaar.com
    திருச்சிற்றம்பலம்
Working...
X