கவசம்
உன் திருவடியை உறுதியென் றெண்ணும்
எந்தலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க(65)
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க
நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க(70)
பதவுரை
உன்திருவடியை உறுதியென்றெண்ணும்-உம்முடைய திருவடி மலர்ப் பாதங்களே நன்மை பயக்கும் என பற்றிகொண்டு எண்ணியிருக்கும்.
என் தலை வைத்துன் இனையயடிகாக்க- உம்முடைய அடிமையாகிய என் சிரசின் மீது உம்முடைய மலர்பாதங்களை வைத்து என்னை காத்தருல்வீராக,
என்னுயிர்க்குயிராம்-என்னுடைய உயிருக்கு மூலாதாரமாய் விளங்கும் , இறைவன் காக்க-இறைவனான முருகப் பெருமானே என்னைக் காத்தருள வேண்டும்.
பன்னிரு விழியால் பாலனைக் காக்க-கருணை பொங்கும் பன்னிரு விழியால் அறியாச் சிறுவனான என்னைக் காத்தருள வேண்டும்
அடியேன் வதனம் அழகுவேல் காக்க-அடியேனுடைய முகத்தை தங்களின் எழில் மிகுந்த வேலாயுதம் காக்க வேண்டும்,
பொடிபுனை நெற்றியை-தூய திருநீறு அணிந்த என்னுடைய நெற்றியை, புனிதவேல் காக்க-தூய்மையான வேலாயுதம் கொண்ட முருகனே நீ காக்க வேண்டும்.
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க- ஒளி வீசும் வேலாயுதப் படைகளைக் கொண்ட முருகனே என் இரு கண்களையும் காக்க வேண்டும்,
விதி செவி இரண்டும்-நெறியான முறையில் அமைந்துள்ள என் இரண்டு செவிகளையும் வேலவர் காக்க- வேற்படை தாங்கிய வேலாயுதப் பெருமானே காத்தருள வேண்டும்,
நாசிகள் இரண்டும்-என்னுடைய நாசித்துவாரங்களிரன்டையும் நல்வேல் காக்க-நன்மையே செய்யும் வேலைக் கொண்டவனே காக்க வேண்டும்,
பேசிய வாய்தனை- அன்றாடம் இடையறாது உமது புகழையும், பெருமையையும் பேசி வருகின்ற வாய்தனை, பெருவேல் காக்க- பெருமை மிக்க உயரிய வேற்படை காக்க வேண்டும்.