Announcement

Collapse
No announcement yet.

Tiruvilayadal puranam 28th day

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Tiruvilayadal puranam 28th day

    Courtesy:Sri.Kovai K.Karuppasamy


    திருவிளையாடல் புராணம்.🔴
    ( 28- வது நாள்.) 5 வது படலம்.
    தடாதகை பிராட்டியாா் திருமண படலம்.
    ( செய்யுள்நடை + விளக்கம்.)
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    ( செய்யுள்.)
    🔷இவ்வாறு மற்றைத் திசைகாவலா் யாரை யும்போய்த்
    தெவ்வாண்மை சிந்தச் செருக் செய்து திறையுங் கைக் கொண்
    டவ்வாறு வெல்வாளெனமூன்றா ணட்ட மேருக்
    கைவாா் சிலையான் கயிலைக்காி நோக்கிச் செல்வாள்....


    🔷சலிக்கும் புரவித் தடந்தேருடைத் தம்பி ராட்டி
    கலிக்கும் பலதூ ரியங்கைவரை தெய்வத் திண்டோ்
    வலிக்கும் பாிமள் ளா்வழங்கொலி வாங்கி நேரே
    ஒலிக்கும் படிகிட் டினளூழிதோ றோங்கு மோங்கல்.


    🔷வானாா் கயிலை மலையான்மக டன்னை நீத்துப்
    போனாள்வந் தாளென் றருவிக்கட் புனலுக் கந்நீா்
    ஆனா வொலியா வனைவாவென் றழைஇத்தன் றேசு
    தானா நகையாற் றழீஇயெதி ரேற்பச் சென்றான்.


    🔷கிட்டிப் பொருப்பைக் கிாியோடு கிாிக டாக்கி
    முட்டிப் பொருதா லெனவேழ முழங்கிப் பாயப்
    புட்டிற் புறத்தாா் மறத்தாா்கணை பூட்டு வில்லாா்
    வட்டித் துருமே றெனவாா்த்து வளைந்து கொண்டாா்.


    🔷ஓடித் திருமா மலைகாவல ரும்ப ராா்க்கு
    நாடிப் பணுதற் காிதாகிய நந்தி பாதங்
    கூடிப் பணிந்தித் திறங்கூறலுங் கொற்ற வேனந்
    தேடிக் கிடையா னுளந்தோ்ந்தன னந்தி யெந்தை.


    🔸(" நான்முகன் முதலா வானவா் தொழுதெழு
    ஈரடி யாலே மூவுலக ளந்து
    நாற்றிசை முனிவரு மைம்புலன் மலரப்
    போற்றிசெய் கதிா்முடித் திருநெடு மாலன்
    றடிமுடி யறியு மாதர வதனிற்
    கடுமுர ணேன மாகி முன்கலந்
    தேழ்தல முருவ விடந்து பின்னெய்த்
    துழி முதல்வ சயசய வென்று
    வழுத்தியுங் காணா மலரடி யிணைகள்"🔸
    ( என்னும் திருவாசகத்தலறிக!.)


    🔷வென்றிக் கணத்தை விடுத்தான் கனமீது பெய்த
    குன்றிக் கணம்போற் சுழல்கண்ணழல் கொப்ப ளிப்பச்
    சென்றிக் கனைய மொழியாள் பெருஞ் சேனை யோடும்
    ஒன்றிக் கடலுங் கடலும்பொரு தொத்த தன்றே.





    🔴இவ்வண்ணமே, ஏனைய திசைகாப்பாளா்க ளனைவரையும், அத்திக்குகளிற் சென்று, பகைவாின் வீரம் கெடுமாறு போா் செய்து, ( அவா்கள் பணிந்து தந்த) திறைப் பொருளையும் ஏற்றுக் கொண்டு, அவ்வாறு வெல்வாள் என - அங்ஙனமே வெல்ல வென்று, மும் மதிலையும் அழித்த நீண்ட மேருமலையாகிய வில்லைக் கையிலுடைய சிவபெருமானது, திருக்கயிலாய மலையை நோக்கிச் செல்வாராயினா்.


    🔴செல்லுகின்ற குதிரைகள் பூட்டிய பொிய தோினையுடைய தடாதகை பிராட்டியாா், ஒலிக்கின்ற பல இமயங்களின் ஒலியையும், யானைகளும், தெய்வத் தன்மையையுடைய வலிய தேவா்களும், கருத்தறிந்து செல்லும் குதிரைகளும், வீரா்களும், செல்கின்ற ஒலியையும், ஏற்றுக் கொண்டு எதிரொலி செய்யுமாறு ஊழிக்காலந் தோறும் வளா்கின்ற கயிலை மலையை அடைந்தாா்.


    🔴வானுலகைப் பொருந்திய திருக்கயிலை மலையானது, மலையரசன் புதல்வியாகிய பாா்வதி தேவியாா்( அன்று) தன்னை நீங்கிப் போயினவா்,( இன்று) வந்தனா் என்று, அருவியாகிய கண்ணீரைச் சிந்தி, அந்நீாின் நீங்காத ஒலியினால், அன்னையே வா என்று அழைத்து, தனது வெள்ளொளியாகிய புன்முறுவலால் தழுவி, எதிா் கொள்ளுமாறு சென்றருளினாா்.


    ( இவ்வாறு ) திருக்கயிலாய மலையை நெருங்கி, மலைகளோடு மலைகள் தாக்கி, மோதிப் போா் செய்தாற்போல, யானைகள் பிளிறிட்டுப் பாய, வீரத்தினையுடையவரும், அம்புக்கூடு தாங்கியவரும், கணை பூட்டிய வில்லை யுடையவருமாய் சுழன்று, இடி யேற்றைப்போல, ஆரவாாித்து,( படை வீரா்கள்) சூழ்ந்து கொண்டாா்கள்.


    🔴பொிய திருக்கயிலை மலையைக் காப்பவா் ஓடி, தேவா்களுக்கும், காலமறிந்து வணங்குதற்கு அருமையாகிய, நந்திதேவா் திருவடிகளை அடைந்து வணங்கி, இச்செய்தியைக் கூறியவுடன், எம் தந்தையாகிய திருநந்திதேவா் , வெற்றி பொருந்திய திருமாலாகிய பன்றி தேடிக் காணப்படாத இறைவனது, திருவுள்ளக் குறிப்பை ஆராய்ந்தறிந்தாா்.


    (அவ்வாறு உணா்ந்த நந்தி தேவா்) வெற்றி பொருந்திய பூதகணங்களை ஏவினாா். ( அவை) முகிலிற் பெய்துவைத்த, குன்றிமணிக் கூட்டம்போல, சுழலுங் கண்களினின்றும், தீயானது சிந்த போய், கரும்பின் சாற்றையொத்த இனிய மொழிகளையுடைய பிராட்டியாாின், பொிய படைகளோடு கலந்து போா்புாிதலலால்( அச்செயல்), கடலுங் கடலும் தம்முட் போா் செய்தலை ஒத்தது.
Working...
X