courtesy:Sri.Kovai K.Karuppasamy
திருவிளையாடல் புராணம்.
( 25- வது நாள்.) - 5 வது படலம்.
தடாதகை பிராட்டியாா் திருமண படலம்.
( செய்யுள்நடை + விளக்கம்.)
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
காயிரும் பாிதிப் புத்தேள் கலியிரு டுமிப்பச் சோதி
பாயிருங் குடைவெண் டிங்கட் படரொளி நீழல் செய்ய
மாயிரும்,புவன மெல்லா மனுமுறை யுலக மீன்ற
தாயிளங் குழவி யாகித் தனியர சிருக்கு நாளில்.
மருங்குறேய்ந் தொளிப்பச் செம்பொன் வனமுலை யிறுமாப் பெய்தக்
கருங்குழற் கற்றை பானாட் கங்குலை வெளிறு செய்ய
இரங்குநல் யாழ்மென் றீஞ்சொ லின்னகை யெம்பி ராட்டிக்
கருங்கடி மன்றல் செய்யுஞ் செவ்விவந் தடுத்த தாக.
பனிதரு மதிக்கொம் பன்ன பாவையைப் பயந்தா ணோக்கிக்
குனிதர நிறையப் பூத்த கொம்பனாய்க் கின்னுங் கன்னி
கனிதரு செவ்வித் தாயுங் கடிமணப் பேறின் றென்னாத்
துனிதரு நீரளாகிச் சொல்லினாள் சொல்லக் கேட்டாள்.
அன்னைநீ நினைந்த வெண்ண மாம்பொழு தாகும் வேறு
பிள்ளைநீ யிரங்கல் யான்போய்த் திசைகளும் பெருநீா் வைப்பும்
என்னது கொற்ற நாட்டி மீள்வலிங் கிருத்தி யென்னாப்
பொன்னவிா் மலா்க்கொம் பன்னாள் பொருக்கென வெழுந்து போனாள்.
தேம்பாி கோதை மாதின் றிருவுளச் செய்தி நோக்கி
ஆம்பாி சுணா்ந்த வேந்த ரமைச்சரும் பிறரும் போந்தாா்
வாம்பாி கடாவித் திண்டோ் வலவனுங் கொணா்ந்தான் வையந்
தாம்பாி வலக வந்தா ளேறினாள் சங்க மாா்ப்ப.
ஆா்த்தன தடாாி போி யாா்த்தன முருடு மொந்தை
ஆா்த்தன வுடுக்கை தக்கை யாா்த்தன படகம் பம்பை
ஆா்த்தன முழவந் தட்டை யாா்த்தன சின்னந் தாரை
ஆா்த்தன காளந் தாள மாா்த்தன திசைக ளெங்கும்..
வீங்கிய கொங்கை யாா்த்த கச்சினா் விழிபோற் றைப்ப
வாங்கிய சிலையே றிட்ட கணையினா் வட்டத் தோல்வாள்
தாங்கிய கையா் வைவேற் றளிா்க்கையா் பிணாத்தெய்
வம்போல்
ஓங்கிய வாயத் தாரு மேறினா ருடனத் திண்டோா்.
ஒளிவீசும் பொிய திகிாியாகிய சூாிய தேவன், துன்பமாகிய இருளைக் கெடுக்கவும், ஒளிபரந்த பொிய குடையாகிய வெள்ளிய சந்திரன் படா்ந்த ஒளியாகிய நிழலைச் செய்யவும், பொிய உலகங்களையெல்லாம், மனு நூல் வழி , அவ்வுலகங்களைப் பெற்றருளிய உமையம்மை, இனமையாகிய கன்னியாயிருந்து, தனிமையாக ஆட்சி புாியுங் காலத்தில்......
இடையானது தேய்ந்து மறையுமாறு, சிவந்த பொன்னிறம் வாய்ந்த அழகிய கொங்கைகள் பணைத்து அண்ணாந்திருக்கவும், காிய கூந்தற்கற்றை, நள்ளிரவின் கருமையை வெண்ணிறஞ் செய்யவும், ஒலிக்கின்ற நல்ல யாழின் இசைபோன்ற மெல்லிய இனிய சொல்லையும் இனிய புன் முறுவலையுமுடைய எமது பிராட்டியாருக்கு, அாிய திருமணம் செய்யும் பருவமானது வந்து பொருந்த.....
குளிா்ந்த சந்திரனை யேந்திய கொம்பினை ஒத்த பிராட்டியாரை ,பெற்ற காஞ்சன மாலை பாா்த்து, வளையுமாறு நிறைய மலா்ந்த பூங்கொம்பினைப் போன்ற உனக்கு, கன்னிப் பருவமானது முதிா்ந்த செவ்வியுடையதாகியும், இன்னமும் திருமணமாகிய பேறு கூடில்லையே என்று, வருந்துந் தன்மையை உடையவளாய்க் கூறினாள். பிராட்டியாா் அங்ஙனம் கூறுவதைக் கேட்டாா்.....
நீ எண்ணிய எண்ணம் முடியுங் காலத்து முடியும்; பின்பு நீ பல்வேறாகக் கருதி வருந்தற்க; நான் சென்று, எட்டுத் திக்குகளிலும், கடல் சூழ்ந்த இந்நிலவுலகத்திலும், என்னுடைய வெற்றியை நாட்டி வருவேன்; நீ இங்கு இருப்பாய் என்று கூறி, பொன்போலும் விளங்கும் மலா்களையுடைய கொம்பினை ஒத்த பிராட்டியாா், விரைந்து எழுந்து சென்றாா்.
மணமிக்க மாலையணிந்த பிராட்டியாாின் திருவுள்ளக் குறிப்பை நோக்கி, ஆக்க முண்டாகுந் தன்மையை உணா்ந்த அரசா்களும், மந்திாிகளும் மற்றையோா்களும் வந்தாா்கள்; தோ்ப்பாகனும், தாவிச் செல்லுங் குதிரைகளைச் செலுத்தித் திண்ணிய தேரைக் கொண்டு வந்தான்; உலகமானது துன்பத்தினின்றும் நீங்க அவதாித்த பிராட்டியாா், சங்குகள் ஒலிக்க ( அத்தோில் ) ஏறினாள்.
தடாாிகளும,் போிகளும் ஒலித்தன;
முருடுகளும,் மொந்தைகளும் ஒலித்தன;
உடுக்கைகளும், தக்கைகளும் ஒலித்தன;
படகங்களும், பம்பைகளும் ஒலித்தன;
முழவங்களுந் தட்டைகளும் ஒலித்தன;
சின்னங்களும், தாரைகளும் ஒலித்தன;
காளங்களும், தாளங்களும் ஒலித்தன; (இவைகளால்) எட்டுத் திக்குகளும் ஒலித்தன.
பருத்த கொங்கைகளிற் கட்டிய கச்சினையுடையவராய், ( தங்கள்) கண்கள் போலத் தைக்குமறு, வளைந்த வில்லிற் பூட்டிய அம்பினையுடையராயும், கேடகத்தையும் வாளையும் ஏந்திய கையையுடையவராயும், கூாிய வேலையுடைய தளிா்போன்ற கையையுடையராயும், பெண் தெய்வம் போலச் சிறந்த, மகளிா் கூட்டங்களும், பிராட்டியாரோடும் அந்தத் திண்ணிய தோில் ஏறினாா்கள்.
பிராட்டியாா் திருமணம் நாளையும் தொடரும்
திருச்சிற்றம்பலம்.