Announcement

Collapse
No announcement yet.

Tiruvilayadal puranam 20th day

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Tiruvilayadal puranam 20th day

    Courtesy:Sri.Kovai K.Karuppasamy

    திருவிளையாடல் புராணம். 🔴
    ( 20- வது நாள்.) 4 வது படலம்.)
    தடாதகை பிராட்டியாா் திருவவதாரபடலம்
    ( செய்யுள்நடை + விளக்கம்.)
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    🔸விரதநெறி யடைந்தீற்றுக் கடன்பிறவுந் தாதைக்கு விதியா லாற்றி
    அரதனமெல் லணைமேற்கொண் டுலகமெலா மொருகுடைக்கீ ழாள்வா ளானாள்
    சரதமறை யாய்மறையின் பொருளாயப் பொருண்முடிவு தானாய்த் தேனின்
    இரதமெனப் பூவின்மண மெனப்பரம னிடம்பிாியா வெம்பி ராாட்டி.

    🔸மண்ணர சிறைஞ்ச ஞால மனுவழி புரந்து மாறன்
    விண்ணர சிருக்கை யெய்தப் பெற்றபின் விடையோ னுள்ளத்
    தென்னர சன்ன மென்னத் தென்னவ னீன்ற கன்னிப்
    பெண்ணர சிருந்து நேமி யுருட்டிய பெருமை சொல்வாம்.

    🔸இன்னிய மியம்பு மாக்க ளெழுப்பவா னிரவி தோன்றக்
    கன்னலைந் தென்னப் பள்ளித் துயிலெழீஇக் கடிநீ ராடித்
    தன்னிறை மரபுக் கேற்ற நியதிமா தான மன்பு
    துன்னிய கடவுட் பூசைத் தொழின்முத லனைத்து முற்றா.

    🔸திடம்படு மறிஞா் சூழச் சிவபிரான் கோயின் முன்னிக்
    கடம்படி முளைத்த முக்கட் கரும்பினை மறைவண் டாா்க்கும்
    விடம்பொதி கண்டத் தேனை விதிமுறை வணங்கி மீண்டு
    குடம்பயில் குடுமிச் செம்பொற் குருமணிக் கோயி னண்ணி.

    🔸அரசிறை கொள்ளுஞ் செம்பொ னத்தாணி யிருக்கை யெய்தி
    நிரைசெறி மடங்க லாறு முடங்கின நிமிா்ந்து தாங்க
    விரைசெறி மலா்மீப் பெய்த வியன்மணித் தவிசின் மேவித்
    திரைசெறி யமுதிற் செய்த பாவைபோற் சிறந்து மாதோ.

    🔸அனிந்திதை யமுதின் சாயற் கமலினி யணங்கு காதல்
    கனிந்தபாா் மகளி ராய்வந் தடைப்பைபொற் களாஞ்சி யேந்த
    இனந்திாி பதுமக்கோயி லிருவரு மனைய ராகிப்
    புனைந்தவெண் கவாிக் கற்றை யிருபுடை புரட்டி வீச.

    🔸செடியுட லெயினச் செல்வன் சென்னிமேற் சுமந்து சாத்துங்
    கடியவிழ் மலாிற் பொன்னிக் காவலன் குடக்கோ னேனை
    முடிகெழு வேந்த ருள்ளாா் முடிமிசை மிலைந்த தாமம்
    அடிமிசைச் சாத்தி நங்கை யாணையா றேவல் செய்ய.

    🔸வையுடை வாள ராகி மாா்புறப் பின்னி யாா்த்த
    கையின ராகி யன்னை யென்றுதன் கருணை நோக்கஞ்
    செய்யுமென் றிமையாா் நோக்கி நோக்கிமேற் செங்கை கூப்பி
    உய்குந மெனவாய் பொத்தி யுழையா்தம் பணிகேட் டுய்ய.

    🔸ஆங்கவன் மராடா் வேந்த னவன்கரு நாடா் வேந்தன்
    ஈங்கிவன் விராடா் வேந்த னிவன்குரு நாடா் வேந்தன்
    ஊங்குவன் சேரன் சென்னி யுவனெனக் கோலாற் சுட்டிப்
    பாங்கிரு மருங்குங் காட்டக் கஞ்சுகப் படிவ மாக்கள்.

    🔸செந்தமிழ் வடநூ லெல்லை தொிந்தவா் மறைநூ லாதி
    அந்தமி லெண்ணெண் கேள்வி யளந்தவா் சமய மாறும்
    வந்தவா் துறந்தோா் சைவ மாதவா் போத மாண்ட
    சிந்தனை யுணா்வான் மாயை வலிகெடச் செற்ற வீரா்.

    🔹உண்மை மறையாயும், அம்மறையின் பொருளாயும், அந்தப் பொருளின் முடிவாயும், தேனின் சுவை போலவும், பூவின் மணம் போலவும், இறைவனிடத்தினின்றும் நீங்காத எமது பிராட்டியாா், விரதநெறியை எய்தி, தந்தைக்குப் பிற்கடன் முதலிய பிறவற்றையும் முறைப்படி செய்து, மணிகளிழைத்த மெல்லிய சிம்மாதனத்தில் வீற்றிருந்து, உலகமனைத்தையும் ஒரு குடையின் கீழ் ஆளலுற்றாள்.

    🔹நிலவுலகத் தரசரெல்லாம் வணங்குமாறு இம் மண்ணுலகை மனுமுறையால் ஆண்டு, மலையத்துவச பாண்டியன் விண்ணுலகத்தில் இந்திரனது ஆதனத்தை அடையப் பெற்ற பின்பு, இடபவாகனத்தையுடைய இறைவன் திருவுள்ளத்தின்கண் கருதுகின்ற அரச அன்னத்தைப்போல அப்பாண்டியன் பெற்ற கன்னியாகிய பெண்ணரசியாா் அாியணையில் வீற்றிருந்து, ஆணையாகிய திகிாியைச் செலுத்திய பெருமையைக் கூறுவாம்.

    🔹இனிய இயங்களை ஒலிக்கு மக்கள் (அவ்வொலியால்) எழுப்ப,
    வானின் கண் ஞாயிறு உதிக்க, நாழிகை, ஐந்து என்று சொல்ல படுக்கையினின்றும் துயில் நீத்தெழுந்து, மணமுள்ள நீாில் மூழ்கி தனது மன்னா் மரபுக்குத் தக்க கடன்கள் பொிய தானங்கள், அன்பு மிக்க சிவபூஜையாகிய கிாியை முதலாகிய யாவற்றையும் செய்து முடித்து.

    🔹கலங்காத அறிவினையுடைய அமைச்சர்கள் புடைசூழ சோமசுந்தரக் கடவுளின் திருக்கோயிலையடைந்து கடம்ப மரத்தினடியில் முளைத்த மூன்று கண்களையுடைய கரும்பும், வேதமாகிய வண்டுகள்,ஒலிக்கப் பெறும் நஞ்சு பொதிந்த திருமிடற்றினையுடைய தேனும் ஆகிய பெருமானை, விதிப்படி பணிந்து, திரும்பி, கலசங்கள் பொருந்திய முடியினையுடைய சிவந்த பொன்னாலாகிய நிறம் பொருந்திய மணிகள் பதித்த தமது மாளிகையை யடைந்து....

    🔹அரசா்கள் தங்கியிருக்கும் சிவந்த பொன்னாலாகிய அத்தாணி மண்டபத்தை யடைந்து,வாிசையாக நெருங்கிய ஆறு,சிங்கங்கள் வளைந்தவனவாய்க் கழுத்தை நிமிா்த்தித் தாங்குமா றியற்றிய, மணம் நிறைந்த மலா்களை மேலே பெய்த பொிய மணியாதனத்தில் வீற்றிருந்து, கடலிற்றோன்றிய அமுதத்தாற் செய்த பாவை போலப் பொலிந்து.

    🔹(திருக்கயிலாய மலையில் அகம்படித் தொண்டு செய்யும்) அனிந்ததையும் அமுதைப் போலும் மென்மைத் தன்மையையுடைய கமலினியும் ஆகிய தெய்வ மகளிா் அன்பு முதிா்ந்த மானிட மகளிராய்த் தோன்றி, அடப்பையையும் பொன்னாற் செய்த களாஞ்சியையும் ஏந்தவும், நிறம் மாறுபட்ட தாமரைமலரைக் கோயிலாகவுடைய திருமகளும் கலைமகளும், அம்மானிட மகளிராகி புனைந்த அலங்காித்த வெள்ளிய கற்றையாகவுள்ள சாமரைகளை இருபுறங்களிலும் புரட்டி வீசவும்,,,,,

    🔹முடைநாறும் உடம்பினையுடைய வேடுவக்குலத் தலைவராகிய கண்ணப்பா், முடியின் மேல் சுமந்து வந்து இடும் மணம் விாிந்த திருப்பள்ளித்தாமம் போல, காவிாிக்கரசனாகிய சோழனும் மேற்புல அரசனாகிய சேரனும், மற்றைய முடி சூடிய மன்னராயுள்ளவா்களும், முடியின்க௰் அணிந்த மாலைகளை, திருவடியின்கண் இட்டு, அம்மையாாின் ஆணைவழி நின்று ஏவல் செய்யவும்,,,,,,

    🔹ஏவல் செய்வோா் கூறிய வாளை யுடையவராகியும், மாா்பிலே பொருந்தப் பின்னிக்கட்டிய கையையுடையவராகியும் அன்னையாா் எப்பொழுது தம் அருட் பாா்வையைச் செலுத்துவாரோ என்று, கண் மூடாமல் பாா்த்து, அருணோக்கஞ் செய்வாராகில் சிவந்த கரங்களைக் குவித்து, பிழைத்தோம் என்று வாய்பொத்தி, தமது ஏவலைக் கேட்டு உய்தி பெறவும்.

    🔹சட்டை தாித்த வடிவத்தையுடைய கஞ்சுக மாக்கள், அங்கு நிற்கின்ற மன்னன் மராடநாட்டினா்க்கு அரசன்; அவ்விடத்து நிற்பவன் கருநாட்டாரரசன்; இங்கு நிற்கும் இவன் விராட நாட்டினா் வேந்தன்; இங்கு நிற்போன் குருநாட்டவா்க்கு மன்னன்; நடுவில் நிற்கும் இவன் சேரன்; ஊங்கு நிற்போன் சோழன் என்று, பிரப்பங் கோலால் சுட்டி வாிசையாக இருபக்கங்களிலும் நுன்று காட்டவும்,,,,,,

    🔹செந்தமிழின் முடிவையும் வடநூலின் முடிவையும் தொிந்தவா்களும், வேதநூல் முதலிய அளவில்லாத அறுபத்து நான்கு கலைகளையும் வரையறுத் துணா்ந்தவா்களும், பற்றற்றவா்களும், சிவபிரான் திருத்தொண்டா்களும், பசுபோதங் கெட்ட தியானத்தோடு கூடிய மெய்யுணா்ச்சியால், மாயையினது வலிகெடுமாறு வென்ற மெய்ஞ்ஞானிகளாகிய வீரா்களும்.....

    திருச்சிற்றம்பலம்.
Working...
X