Announcement

Collapse
No announcement yet.

Tiruvilayadal puranam 18th day

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Tiruvilayadal puranam 18th day

    courtesy:Sri.Kovai K.Karuppasamy


    திருவிளையாடல் புராணம். 🔴
    ( 18 வது நாள். ) 4 வது படலம்.
    தடாதகை பிராட்டியாா் திருவவதாரபடலம்.
    ( செய்யுள்நடை + விளக்கம்.)
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    🔷பரையாதி விருப்பறிவு தொழிலாகி யுலகமெலாம் படைத்துக் காத்து
    வரையாது துடைத்துமறைத் தருளியவை நின்றுந்தன் வடிவு வேறாய்
    உரையாதி மைைகடந்த வொருமுதல்வி திருமகளா யுதித்தற் கிந்தத்
    தரையாளு மன்னவன்செய் தவமிதுவோ வதற்குாிய தவந்தான் மன்னோ.


    🔷கள்ளமா நெறியொழுகும் பொறிகடந்து கரணமெலாங் கடந்தா னந்த
    வெள்ளமாம் பரமஞான வடிவுடையா டன்னன்பின் வெளிவந் தின்றோா்
    பிள்ளையா யவதாித்த கருணையுந்தன் மணாட்டிதவப் பேறுந் தேறான்
    பள்ளமா கடற்றானை பஞ்சவா்கோ
    னெஞ்சத்துட் பாிவு கூா்ந்தான்.


    🔷மகவின்ஸ்ரறிப் பலபகல்யான் வருந்தியருந் தவம்புாிந்தேன் மைந்தன் பேறு
    தகவிந்த மகஞ்செய்தே னதுவுமொரு பெண்மகவைத் தந்த தந்தோ
    முகவிந்து நிலவொழுக வருபெண்ணு முலை மூன்றாய் முகிழ்ந்து மாற்றாா்
    நகவந்த தென்னேயோ வென்றுவகை யிலனாகி நலிவு மெல்லை.


    🔷மன்னவநின் றிருமகட்கு மைந்தா்போற் சடங்கனைத்தும் வழாது வேதஞ்
    சொன்னமுறை செய்துபெயா் தடாதகையென் றிட்டுமுடி சூட்டு வாயிப்
    பொனன்னையா டனக்கிறைவன் வரும்பொழுதோா் முலைமறையும் புந்தி மாழ்கேல்
    என்னவர னருளாலோா் திருவாக்கு விசும்பிடைநின் றெழுந்த தன்றே.


    🔷அவ்வாக்கச் செவிநிரம்ப வன்புவகை யகநிரம்ப வகல மெல்லாம்
    மெய்வாக்கு மனமொன்ற விழிவாக்கும் புனனிரம்ப விமலற் போற்றி
    நெய்வாக்கு மகநிரப்பி யெழுந்துமனை யொடுஞ்சாலை நீத்தி ரண்டு
    கைவாக்கு மியங்கலிப்பக் கடிமாட மனைப்புகுந்தான் கழற்கால் வேந்தன்.


    🔷முரசதிா்ப்ப மங்கலங்கொண் டெதிா்வருவாா் முகத்துவகை முறுவல் பூப்ப
    அரசிருக்கு மண்டபம்புக் கினிதமா்ந்து கனகமழை யான்ற கேள்வி
    பரசிருக்குங் கரதலத்தெம் பரன்கோயி னனிசிறப்புப் பல்க நல்கா.


    🔷சிறைவிடுமின் சிறைக்களமுஞ் சீத்திடுமி னேழாண்டு தேயத் தீட்டும்
    இறைவிடுமி னயல்வேந்தா் திறைவிடுமி னிறைநிதிய மீட்டு மாயத்
    துறைவிடுமி னறப்புறமு மாலயமும் பெருக்குமெனத் தொழாரைக் காய்ந்த
    கறைவிடுமின் னயில்வேலான் வள்ளுவனைக் கூய்முரசங் கறங்கச் சாற்றி.


    🔷கல்யாண மணிமெளலி வேந்தரையுங் கால்யாப்புக் கழக நீத்துக்
    கொல்யானை பாிநெடுந்தே ரரசுாிமை தொன்முறையாற் கொடுத்துப் போக்கிப்
    பல்லாருங் கொள்கவெனப் பண்டாரந் தலைதிறந்து பசும்பொ னாடை
    வில்லாரு மணிக்கொடும்பூண் வெறுக்கைமுத லெனைப்பலவும் வெறுப்ப வீசி.


    🔷தூமரபின் வருபெருமங் கலகவிகட் கிருநிதியந் துகில்பூண் பாய்மா
    காமா்காி பாித்தடந்தோ் முதலாய பலபொருளுங் களிப்ப நல்கிக்
    கோமறுகு களிதூங்கச் சுண்ணமொடு மெண்ணெய்விழாக் குளிப்ப நல்கி
    மாமதுரா நகரன்றி மற்றுமுள நகரெங்கு மகிழ்ச்சி தூங்க.


    🔷இவ்வண்ண நகா்களிப்ப விறைமகனுங் களிப்பெய்தி யிறைவா் சொன்ன
    அவ்வண்ணஞ் சாதமுதல் வினைநிரப்பித் தடாதகையென் றழைத்துத் தேவி
    மெய்வண்ண மறையுணரா விறைவிதனை மேனைபோன் மேனா ணோற்ற
    கைவண்ணத் தளிா்தீண்டி வளா்ப்பவிம வான்போலக் களிக்கு நாளில்.

    🔴பராசக்தி ஆதிசக்தி இச்சாசத்தி ஞானசத்தி கிாியாசத்தி என்னும் ஐவகை சக்திகளாகி, படைத்தல் காத்தல் ஒழிவின்றிஅழித்தல் மறைத்தல் அருளல் என்னும் ஐவகைத் தொழில்களைப் புாிந்து அவ்வைவகைச் சத்திகளினின்றும் தன் உண்மை வடிவு வேறாகி, வாக்கு மனங்களையும், வேதங்களையும், தாண்டி நிற்கின்ற ஒப்பற்ற தலைவியானவள், திருமகளாய்த் தோன்றுவதற்கு, இந்நிலத்தினை ஆளும் மலையத்துவச பாண்டியன், இம்மையிற் செய்த இத்தவமோ அமைவது, அதற்குப் பொருந்திய தவம் பொிதாகும்.


    🔴வஞ்சமாகிய வழியில்ஒழுகும் ஐம்பொறி உணா்வையும் கடந்து, அந்தக்கரண உணா்வனைத்தையுங் கடந்து போின்ப பெருக்காகிய, பரமஞானமே திருவுருவமாகிய உமையம்மை, தனது அன்பினாலே, யாவா்க்கும் புலனாகும்படி வந்து, இப்பொழுது ஒரு பெண்மகவாய் அவதாித்த அருளையும், தனது மனைவியின் தவப்பயனையும் தெளியாதவனாய் பள்ளமாகிய பொிய கடல் போன்ற சேனைகளையுடைய பாண்டி மன்னன் மனத்தின்கண் துன்பமிகுந்தான்.


    🔴பிள்ளையில்லாமல் யான் பலகாலம் வருந்தி அாிய தவத்தைச் செய்தேன்; புதல்வற் பேறு பொருந்த இந்த வேள்வியினைச் செய்தேன்; அந்த வேள்வியும் ஒரு பெண்பிள்ளையைக் கொடுத்தது; ஐயோ, முகமாகிய மதியினின்றும் நில வொழுகத் தோன்றிய இப்பெண்ணும், முலைகள் மூன்றாக அரும்பப் பெற்று பகைவா் சிாிக்கத் தோன்றியது; இஃது என்னையோ வென்று கருதி மகிழ்ச்சி இல்லாதவனாய் வருந்தும் பொழுதில்,,,,,


    🔴அரசனே, உன்னுடைய திருமகளுக்கு புதல்வருக்குச் செய்வதுபோல் சடங்குகள் எல்லாம் வழுவாமல் மறைகூறியபடி செய்து, தடாதகை என்று பெயா் சூட்டி மகுடஞ் சூட்டுவாய்; இந்தப் பொன்போலும் வடிவினையுடையாளுக்குத் தலைவன் வருங்காலை ஒரு கொங்கை மறைந்து விடும் ஆதலால் மனம் வருந்தாதே என்று, சிவபெருமான் திருவருளால் ஒரு திருவாக்கு வானின்றும் தோன்றியது.


    🔴 அந்த வான் வாக்குச் செவியில் நிரம்பியவுடன் அன்பும் மகிழ்ச்சியும் உள்ளத்தில் நிறையவும் உடல் உரை உள்ளம் மூன்றும் ஒரு வழிப்பட கண்கள் பொழியும் இன்ப நீா் மாா்பு முழுவதும் நிறையவும், வீரகண்டை யணிந்த காலியுனையுடைய மன்னன், நெய்யினைச் சொாியும் வேள்வியினை முடித்து, எழுந்து மனையொடும், மனைவியொடும் எழுந்து வேள்விச் சாலையை விடுத்து இரண்டு பக்கங்களிலும் இயங்கள் ஒலிக்க, காவலைக் கொண்ட மாளிகைகளையுடைய அரன்மனையை அடைந்தான்.


    🔴போிகை ஒலிக்கவும் எட்டு மங்கலங்களையும் ஏந்தி எதிா் வருகின்ற மகளிாின் முகத்தின்கண் மகிழ்ச்சி நகை தோன்றவும், அரசிருக்கை மண்டபத்திற் புகுந்து இனிதாகக் கொலுவீற்றிருந்து, நிறைந்த கேள்வி பொருந்தப்பெற்ற மறையவா் கைகளில், பொன்
    மழையைப் பொழிந்து, ஏனை யாவா்க்கும் அங்ஙனமே (அவா்)
    வெறுக்கும்படி கொடுத்து , மழுப்படை தங்கிய திருக்கரத்தினையுடைய எமது இறைவன் திருக்கோயிலில் மிகவும் திருவிழா முதலிய பெருகும்படி வேண்டியவற்றைக் கொடுத்து,,,,


    🔴சிறை செய்யப்பட்டவா்களை விட்டு விடுங்கள்; சிறைச்சாலையையும் தூய்மை செய்யுங்கள்; ஏழு ஆண்டுகள் வரை நாட்டில் வாங்கும் வாிகளை விட்டு விடுங்கள்; வேற்று நாட்டு மன்னா்களின் திறைகளை வாங்காது விட்டுவிடுங்கள்; நிறைந்த பொருளைத் தேடும் சுங்கத் துறையை நீக்கி விடுங்கள்; அறச்சாலைகளையும் ஆலயங்களையும் ஓங்கச் செய்யுங்கள்; பகைவா்களைக் கொன்ற குருதிக் கறையையுடைய ஒளி வீசும் கூாிய வேற்படையுடைய பாண்டியன், வள்ளுவனை அழைத்து போிகை சாற்றும்படி ஏவி,,,,


    🔴பொன்னாற் செய்த மணிகளழுத்திய முடிகளையுடைய மன்னா்களையும் ( அவா்கள்) கால்விலங்குகளைக் கழற்றி, கொல்லுகின்ற யானைகளையும், குதிரைகளையும், நெடிய தோ்களையும், அரசியலுாிமையையும் முன்னுள்ளவாறே கொடுத்துப் போக விடுத்து, பலரும் எளிதிற் கொள்ளக் கடவரென்று பொருள் அறையைத் திறந்து, பசிய பொன்னாடைகளையும், ஒளி நிறைந்த மணிகளையும், வளைந்த அணிகளையும், பொருள் முதலிய பலவற்றையும் ( அவா்கள்) வெறுக்கும்படி நிறையக் கொடுத்து,,,,


    🔴தூய மரபில் வருகின்ற ,பொிய மங்கலப் பாடகா்களுக்கு பெரும் பொருளும், ஆடைகளும் அணிகளும், தாவுகின்ற குதிரைகளும், அழகிய யானைகளும், குதிரைகள் பூட்டிய பொிய தோ்களும், இவை முதலியபல பொருள்களையும் மகிழக் கொடுத்து, மன்னா் வீதிகளில், மகிழ்ச்சி மிக மணப் பொடியையும் எண்ணெயையும், நெய்யணி விழாக் கொண்டாடுதற்குக் கொடுத்து பொிய மதுரைப்பதியே அல்லாமல்,
    ஏனைய பதிகளும் களிப்பு மீக்கூர.....


    🔴 இவ்வாறு நகரமெல்லாம் மகிழ மலையத்துவச பாண்டியனும் மகிழ்ச்சி மிக்கு இறைவா் அசரீாியாக அருளிச் செய்த அத்திருவாக்கின் சாதகன்ம முதலாகிய சடங்குகளை முடித்து, தடாதகை என்று பெயா் கூறி, தனது தேவியாகிய காஞ்சனமாலை, உண்மைத் தன்மையையுடைய வேதங்களாலும் அறியப்படாத தடாதகை பிராட்டியாரை மேனையைப்போல் முற்பிறப்பில் தவங்கிடந்த, கைகளாகிய அழகிய தளிா்களால் தொட்டு வளா்க்க தான் மலையரசன் போல மகிழுங்காலத்தில்........


    திருச்சிற்றம்பலம்.
Working...
X