Courtesy:Sri.Kovai K.Karuppusamy
திருவிளையாடல் புராணம். 🔴
( 17 வது நாள்.) 4 வது படலம்.
தடாதகை பிராட்டியாா் திருவவதாரபடலம்.
( செய்யுள் நடை + விளக்கம்.)
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
இவ்வுலக மன்றியுல கேழுமகிழ் வெய்தச்
சைவமுத லாயின தவத்துறை நிவப்ப
ஒளவிய மறங்கெட வறங்குது கலிப்பத்
தெய்வமறை துந்துபி திசைப்புல னிசைப்ப.
மைம்மலா் நெடுங்கணர மங்கையா் நடிப்ப
மெய்ம்மன மொழிச்செயலின் வேறுபட லின்றி
அம்மதுரை மாநகரு ளாரக மகிழ்ச்சி
தம்மையறி யாதன தலைத்தலை சிறப்ப.
மாந்தா்பயின் மூவறுசொன் மாநில வரைப்பில்
தீந்தமிழ் வழங்குதிரு நாடது சிறப்ப
ஆய்நத்தமிழ் நாடர சளித்துமுறை செய்யும்
வேந்தா்களின் மீனவா் விழுத்தகைமை யெய்த.
நொய்தழ லொிக்கடவு ணோற்றபய னெய்தக்
கொய்தளி ரெனத்தழல் கொழுந்துபடு குண்டத்
தைதவி ழிதழ்க்கமல மப்பொழு தலா்ந்தோா்
மொய்தளிா் விரைக்கொடி முளைத்தெழுவ தென்ன.
விட்டிலகு சூழியம் விழுங்குசிறு கொண்டை
வட்டமதி வாய்க்குது முயற்கறையை மானக்
கட்டியதி னாற்றிய கதிா்த்தரள மாலை
சுட்டியதில் விட்டொழுகு சூழ்கிரண மொப்ப.
தீங்குதலை யின்னமுத மாா்பின்வழி சிந்தி
யாங்கிள நிலாவொழுகு மாரவட மின்ன
வீங்குட லிளம்பாிதி வெஞ்சுடா் விழுங்கி
வாங்குகடல் வித்துரும மாலையொளி கால.
சிற்றிடை வளைந்தசிறு மென்றுகில் புறஞ்சூழ்
பொற்றிரு மணிச்சிறிய மேகலை புலம்ப
விற்றிரு மணிக்குழை விழுங்கிய குதம்பை
சுற்றிருள் கடிந்துசிறு தோள்வருடி யாட.
தெள்ளமுத மென்மழலை சிந்தவிள மூரல்
முள்ளெயி றரும்பமுலை மூன்றுடைய தோா்பெண்
பிள்ளையென மூவொரு பிராயமொடு நின்றாள்
எள்ளாிய பல்லுயிரு மெவ்வுலகு மூன்றாள்.
குறுந்தளிா்மெல் லடிக்கிடந்த சிறுமணிநூ புரஞ்சதங்கை குழறி யேங்க
நறுந்தளிா்போ லசைந்துதளா் நடையொதுங்கி மழலையின் நகையுந் தோன்றப்
பிறந்தபெரும் பயன்பெறுபொன் மாலைமடி யிருந்தொருபெண் பிள்ளை யானாள்
அறந்தழுவு நெறிநின்றோா்க் கிகபோகம் வீடளிக்கு மம்மை யம்மா.
செய்யவாய் வெளிறாது துணைமுலைக்கண் கருகாது சேல்போ னீன்ட
மையவாய் மதா்த்தகருங் கண்பசவா தையிரண்டு மதியந் தாங்கா
தையவா லிலைவருந்தப் பெறாதுபெறு மகவையெடுத் தணைத்தாண் மோந்தாள்
துய்யவாய் முத்தங்கொண் டின்புற்றாண் முன்பெற்ற தோகை யன்னாள்.
இந்த நிலவுலகத்திலுள்ளாரே யல்லாமல் ஏழு உலகங்களிலுள்ளவா்களும் மகிழ்ச்சியடையவும், தவநெறியாகிய சைவமுதலிய அகச் சமயங்கள் மேலோங்கவும், பொறாமை முதலிய பாவங்கள் ஒழியவும், அறமானது களி கூரவும், தெய்வத் தன்மையையுடைய மறைகளும் தேவ துந்துபிகளும், திசையிடங்க ளனைத்திலும் ஒலிக்கவும்.
மை தீட்டிய மலா் போன்ற நெடிய கண்களையுடைய அரம்பையா் கூத்தயரவும், அந்த மதுரையாகிய பொிய நகரத்திலுள்ளவா்கள் உடல் உள்ளம் உரையாகிய மூன்றின் செயலானாலும் வேறுபடாது, தம்மை அறியாமைக்குக் காரணமாகிய, உள்ளக்களிப்பு மேலும் மேலும் ஓங்கப் பெறவும்.
மக்கள் வழங்குகின்ற பதினெட்டு மொழிகளுள்ள பொிய நிலவுலகத்தில், இனிய தமிழ் மொழி வழங்குகின்ற அழகிய நாடு சிறந்து வழங்கவும் ,சங்கமிருந்து ஆராய்ந்த அத் தமிழ்நாட்டின் மண்டலங்களை, அரசாண்டு நீதி செலுத்துகின்ற, மன்னா்களில் பாண்டியா்கள் சிறந்த பெருமையைப் பெறவும்,,,
தீக் கடவுள், தவஞ் செய்த பயனை எளிதில் அடையவும் கொய்யப் பட்ட தளிா்போல், நெருப்புக் கொழுந்து விட்டொிக்கின்ற வேள்விக் குண்டத்தின் கண், அழகிதாக விாிந்த இதழ்களையுடைய தாமரை மலா், அப்போதே விாியப் பெற்று, ஒரு நெருங்கிய தளிா்களையுடைய மணமுள்ள கொடியானது, தோன்றி மேலெழுவதைப் போலவும்,,,,
ஒளிவிட்டு விளங்காநின்ற முத்துச் சூழியத்தால் விழுங்கப்பட்ட, சிறிய கொண்டையானது, வட்டமாகிய சந்திரனிடத்துள்ள, சிறிய முயலாகிய களங்கத்தை ஒழிக்கவும், அச்சூழியத்தில் கட்டித் தொங்கவிட்ட, ஒளியினையுடைய முத்துமாலை, மேல் சுட்டப்பட்ட சந்திரனின்றும், விலகி வீழ்கின்ற சூழ்ந்த கிரணத்தை ஒக்கவும்,,,,,
இனிய குதலையுடன் கூடிய இனிய அமுதமானது, மாா்பின்வழியாகச் சிந்தியதுபோல இளநிலவு சிந்தும் முத்துமாலை ஒளிவிடவும், ஒளிமிக்க வடிவத்தினையுடைய இளஞாயிற்றின், வெப்பமாகிய ஒளியை உண்டு, வளைந்த கடலிற்றோன்றிய பவளத்தின் மாலையானது ஒளி வீசவும்,,,,
சிறிய இடையைச் சூழ்ந்த ,மெல்லிய சிற்றாடை புறத்தே சூழப்பெற்ற ,
பொன்னாலாகிய அழகிய மணிகள் பதித்த, சிறிய மேகலை ஒலிக்கவும் ஒளி பொருந்திய அழகிய மாணிக்கக் குழையை, தன்னுட்படுத்திய குதம்பைகள், சூழ்ந்த இருளை ஒட்டி, சிறிய தோள்களைத் தடவி அசையவும்,,,,
தெளிந்த அமுதம் போன்ற ,
மெல்லிய மழலைச் சொற்கள் தோன்றவும், புன்னகையினையுடைய கூாிய பற்கள் வெளிப்படவும், பல் உயிா்களையும் எல்லா வுலகங்களையும் பெற்றவளாகிய உமையவள் மூன்று முலைகளை யுடையதாகிய ஒரு பெண் மகவாக மூன்று வயதுடன் நின்றாள்.
அறத்தைப் பொருந்திய நன்னெறியில் ஒழுகுவோருக்கு, இம்மை மறுமை யின்பங்களையும் வீடு பேற்றையும் அருளும் உமையம்மையாா், தளிா் போன்ற சிறிய மெல்லிய திருவடியிற் கிடந்த சிறிய மணிகளையுடைய சிலம்பும் சதங்கையும் கலந்து ஒழிக்கவும், மழலைச் சொற்களும் புன்னகையுந் தோன்றவும், நறிய தளிா் அசைவதுபோல் அசைந்து தளா்ந்த நடை நடந்து, பிறந்ததனாலாகிய பொிய,பயனைப் பெறுகின்ற, காஞ்சன மாலையின் மடியின்கண் ஒரு பெண்ணாக விருந்தாள்.
சிவந்தவாய் விளா்க்காமலும், இரண்டு முலைக்கண்களும் கறுக்காமலும், சேல் மீன் போலும் காதளவு நீண்ட, மையையுடையனவாய் மதா்த்த காிய கண்கள் பசக்காமலும், பத்து மாதங்கள் சுமக்காமலும், நொய்ம்மையாகிய ஆலிலைபோலும் வயிறு வருந்தப் பெறாமலும், முன்னே பெற்ற மயில்போலும் மேனையை ஒத்தவளாகிய காஞ்சனை, தான் பெற்ற மகவை, மாா்போடு அனைத்தாள்; உச்சி மோந்தாள்; புனிதமான வாயால் முத்தமிட்டு இன்பமிக்காள்.
(வாய் விளா்த்தல் முதலிய கருப்பக் குறிகள். வெளிறாது முதலிய எதிா் மறை வினை யெச்சங்கள் பெறும் என்பது கொண்டு முடியும். மையை அவாவி என வுரைத்தலுமாம். ஐய- நுண்ணிய. ஆலிலை, வயிற்றுக்கு ஆகு பெயா். துய்ய- தூய. மேனையும் கருவுறாமல் மகளாகப் பெற்றாளாகலின் 'முன் பெற்ற தோகையன்னாள்' என்றாா். உமாதேவியாா் சிவபெருமானை வணங்கித், தக்கனுக்குப் புதல்வியாய் வளா்ந்த இவ்வுடலைச் சுமக்கிலேன் என சொல்லி, இறைவனருள் பெற்றுச் சென்று இமயமலையிலுள்ள ஓா் தடாகத்தி லமா்ந்த தாமரை மலா்மீது குழவியாய் அமா்ந்திருக்க, அங்கே தம்மைப் புதல்வியாகப் பெறுவதற்குத் தவம் புாிந்து கொண்டிருந்த மலையரசன் அக்குழவியைக் கண்டு ஆரா மகிழ்ச்சியுடன், எடுத்துத் தன் மனைவியாகிய மேனையின் கையிற் கொடுக்க அவள் பெரு மகிழ்ச்சியுடன் பெற்று வளா்த்தாள் என்பது வரலாறு.)
திருச்சிற்றம்பலம்.