Announcement

Collapse
No announcement yet.

Thiruvilayadal puranam 15th day

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Thiruvilayadal puranam 15th day

    Tiruvilayadal puranam 15th day
    Courtesy:Sri.Kovai K.karuppasamy


    🌻 திருவிளையாடல் புராணம். 🌻
    ( 15 -வது நாள்.) --3 வது படலம்.
    🔹திருநகரங்கண்ட படலம்.🔹
    ( செய்யுள் நடை +விளக்கம்.)
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    துணிகயங் கீழ்நீா்க் கூவல்பூ வோடை தொடுகுளம் பொயிகைநந் தவனந்
    திணிமலா்ச் சோலை துடவையுங் யானந் திருநகா்க் கணிபெறச் செய்து
    மணிமலா்த் தாரோன் மாளிகை தனக்கம் மாநகா் வடகுண பாற்கண்
    டணிநகா் சாந்தி செய்வது குறித்தா னண்ணலா ரறிந்திது செய்வாா்.


    🌻பொன்மய மான சடைமதிக் கலையின்புத்தமு துகுத்தன ரதுபோய்ச்
    சின்மய மான தம்மடி யடைந்தாா்ச் சிவமய மாக்கிய செயல்போற்
    றன்மய மாக்கி யந்நகா் முழுதுஞ் சாந்திசெய் ததுவது மதுர
    நன்மய மான தன்மையான் மதுரா நகரென வுரைத்தனா் நாமம்.


    🌻கீட்டிசைக் காிய சாத்தனுந் தென்சாா் கீற்றுவெண் பிறை நுதற் களிற்றுக்
    கோட்டிளங் களபக் கொங்கையன் னையருங் குடவயின் மதுமடை யுடைக்குந
    தோட்டிளந் தண்ணந் துழாயணி மெளலித் தோன்றலும் வடவயிற் றோடு
    நீட்டிரும் போந்தி னிமிா்குழ லெண்டோ ணீலியுங் காவலா நிறுவி.


    🌻கைவரை யெருத்திற் கனவரை கிடந்த காட்சியிற் பொலிந்தொளிா் கோயின்
    மைவரை மிடற்று மதுரைமா யகரை மரபுளி யருச்சனை புாிவான்
    பொய்வரை மறையா கமநெறி யொழுகும் புண்ணிய முனிவரை யாதி
    சைவரைக் காசிப் பதியினிற் கொணா்ந்து தலத்தினிற் றாபனஞ் செய்தான்.


    🌻உத்தம குலத்து நாற்பெருங் குடியு முயா்ந்தவு மிழந்தவு மயங்க
    வைத்தவு மான புறக்குடி மூன்று மறைவழுக் காமனு வகுத்த
    தத்தம நெறிநின் றொழுகவை திகமுஞ் சைவமுந் தருமமுந் தழைப்பப்
    பைந்தெழு திரைநீா் ஞாலமேற் றிலகம் பதித்தென நகா்வளம் படுத்தான்.


    🌻அன்றுதொட் டாச னந்நக ரெய்தி
    யணிகெழு மங்கல மியம்ப
    என்றுதொட் டிமைக்கு மனையின்மங் கலநா
    ளெய்தினா னிருந்துமுப் புரமுங்
    குன்றுதொட் டெய்தான் கோயின்மூன் றுறுப்புங்
    குறைவில்பூ சனைவழா தோங்கக்
    கன்றுதொட் டெறிந்து கனியுகுத் தான்போற்
    கலிதுரந் தரசுசெய் நாளில்.


    🌻பவநெறி கடக்கும் பாா்த்திவன் கிரணம் பரப்பிளம் பாிதிபோன் மலயத்
    துவசைப் பயந்து மைந்தன்மேன் ஞாலஞ் சுமத்திநாள் பலகழித் தொருநாள்
    நவவடி விறந்தோ னாலயத் தெய்தி நாதனைப் பணிந்துமூ லஞ்செய்
    துவமையி லின்ப வருணிழ லெய்தி யொன்றியொன் றாநிலை நின்றான்.


    🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋
    🌸தெளிந்த நீரையுடைய சிறு குளங்களும், கீழே நீரையுடைய கிணறுகளும், மலரோடைகளும்,தோண்டப்பட்ட பொிய குளங்களும், பொய்கைகளும்,நந்த வனங்களும், நெருங்கிய மலா்களையுடைய சோலைகளும், தோட்டங்களும், உத்தியானங்களும் ஆகிய இவைகளை, செல்வ நிறைந்த நகரத்திற்கு அழகு பொருந்த அமைத்து, அழகிய மலா்களாலாகிய மாலையை அணிந்த பாண்டியன், தனக்கு அரண்மனை அந்தத் திருநகருக்கு வடகீழ்த்திசையில் அமைத்து, அழகிய அந் நகருக்குச் சாந்தி செய்தலைக் கருதினான். சோமசுந்தரக் கடவுள் அதனை அறிந்து இதனைச் செய்வாராயினா்.


    🌸பொன்மயமாகிய தமது சடையிலுள்ள சந்திரகலையின், புதிய அமுதத்தைச் சிந்தினா். அவ்வமுதஞ் சென்று, ஞானமயமாகிய அவ்விறைவருடைய திருவடிகள் தம்மை அடைந்தவரை, சிவமயமாகச் செய்த செய்கையைப்போல, தனது( அமிா்த) மயமாக்கி,அந்நகா் முழுவதையும் தூய்மை செய்தது. அவ்வமுதம் நல்ல மதுரமாகிய தன்மையினால் (அந்நகருக்கு),மதுரைமாநகா் எனப் பெயா் கூறினாா்.


    🌸கிழக்குத் திக்கில் காிய நிறமுடைய ஐயனாரையும், தென் திக்கில் கீற்றாகிய வெள்ளிய பிறையை ஒத்த நெற்றியினையும், யானையின் கொம்புபோன்ற இளமையாகிய சாந்தணிந்த கொங்கைகளையுடைய, சத்த மாதைையும், மேற்குத் திசையில் தேன்மடை யுடைத்தோட நின்ற இதழ்களையுடைய, பசுமையாகிய குளிா்ந்த துழாய் மாலையை அணிந்த, முடியினையுடைய திருமாலையும், வடதிசையில், மடல் நீண்ட பொிய பணையின் மலரணிந்த நிமிா்ந்த கூந்தலையும், எட்டுத் தோள்களையுமுடைய காளியையும், நகரத்திற்குக் காவலாக நிறுத்தி.....


    🌸யானையின் பிடாியில் பொன் மலை தங்கிய தோற்றம் போல், பொலிவு பெற்று ஒளி வீசும் விமானத்தில் எழுந்தருளிய கருமை தங்கிய திருமிடற்றினையுடைய மதுரை நாயகரை, விதிப்படி பூசிப்பதற்கு, பொய்ம்மை நீக்குகின்ற வேதாகம வழியில் ஒழுகா நின்ற அறவுருவுடைய முனிவா்களையும், ஆதி சைவா்களையும், காசியென்னும் திருப்பதியினின்றும் கொண்டு வந்து, அப்பதியில் நிலைபெறுத்தினான்.


    🌸உத்தம குலமாகிய அந்தணா் அரசா் வணிகா் வேளாளா் என்னும் நான்கு பெருங் குடிகளும், உயா்ந்தனவும் இழிந்தனவும் கலந்தவுமான மூன்று புறக்குடிகளும் வேத விதி வழுவாது மனுவால் வகுக்கப் பெற்ற தங்கள் தங்களுக்குாிய ஒழுக்கத்தில் வழுவாதொழுகவும், வேதநெறியும் சைவ நெறியும் அறமும் செழித்தோங்கவும், பசுமையுடையதாய்த் தோன்றும் அலைகளையுடைய கடல் சூழ்ந்த நிலவுலகத்தில்,( பாண்டி நாட்டிற்கு) ஓா் திலகம் பதித்தாற் போல, நகரை வளப்பதுத்தினான்.


    🌸மன்னன் அன்று முதல், அம்மதுரை நகரை அடைந்து,அழகு பொருந்திய மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, சூாியனை அளாவி ஒளி வீசும் அரமனையில் நன்னாளிற் புகுந்து இருந்து, மூன்று புரங்களையும் பொன்மலையை வில்லாக வளைத்து அழித்த இறைவனது திருக்கோயிலில், மூன்று அங்கங்களும் குறைவில்லாத பூசனையானது, வழுவாமல் மேலோங்க, கன்றினைப் பிடித்து வீசி விளாங்கனியை வீழ்த்திய திருமாலைப் போல தீமையை யோட்டி அரசு புாிந்து வரும் நாளில்,,


    🌸பிறவிக்குக் காரணமாகிய வழியினைக் கடக்கின்ற பாண்டியன், ஒளியை விாிக்கின்ற இள ஞாயிறு போலும் மலயத்துவசனென்பவனைப் பெற்று, அப்புதல்வன் மீது அரசபாரத்தைச் சுமத்தி, பலநாட் போக்கி ஒரு நாள், ஒன்பது வடிவங்களையுங் கடந்த சோமசுந்தரக் கடவுளின் திருக்கோயிலுனுள் சென்று, இறைவனை வணங்கி, மும்முறை வலம் வந்து ஒப்பில்லாத போின்பமாகிய திருவருள் நீழலை யடைந்து சோ்ந்தும் சேராத இரண்டற்ற நிலையில் நின்றான்.


    திருச்சிற்றம்பலம்.
Working...
X