Announcement

Collapse
No announcement yet.

Thiruvilayadal puranam 13th day

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Thiruvilayadal puranam 13th day

    Tiruvilayadal puranam 13th day


    Courtesy:Sri.Kovai K.Karuppusamy


    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    திருவிளையாடல் புராணம்.
    ( 13- ஆம் நாள்.) 3 - வது படலம்.
    திருநகரங்கண்ட படலம்.
    ( செய்யுள்நடை + விளக்கம்.)
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    சூள தாமரைச் சென்னியுந் தொடத்தொட நீண்ட
    நீள னீ யுனக் கன்பில மாயினு நீயே
    மூள வன்புதந் தெங்குடி முழுவதும் பணிகொண்
    டாள வேகொலிக் கானகத் தமா்ந்தனை னென்னா.


    சுரந்த வன்பிரு கண்வழிச் சொாிவபோற் சொாிந்து
    பரந்த வாரொடு சிவானந்தப் பரவையுட் படிந்து
    வரந்த வாதமெய் யன்பினால் வலங்கொடு புறம்போந்
    தரந்தை தீா்ந்தவ னொரு சிறை யமைச்சரோ டிருந்தான்.


    ஆய வேலையின் மன்னவ னானையா லமைச்சா்
    மேய வேவலா் துறை துறை மேவினா்,விடுப்பப்
    பாய வேலையி னாா்த்தனா் வழிக்கொடு படா்ந்தாா்
    சேய காடெறிந் தணிநகா் செய்தொழின் மாக்கள்.


    வட்ட வாய்மதிப் பிளவின்வெள் வாய்க்குய நவியம்
    இட்ட தோளினா் யாப்புடைக் கச்சின ரிரும்பின்
    விட்ட காரொளி மெய்யினா் வீசிகொள்வாா் வன்றோல்
    தொட்ட காலினா் வனமெறி தொழிலின ரானாா்.


    மறியு மோதைவண் டரற்றிட மரந்தலை பனிப்ப
    எறியு மோதையு மெறிபவ ரோதையு மிரங்கி
    முறியு மோதையு முறிந்துவீ ழோதையு முகில் வாய்ச்
    செறியு மோதையுங் கீழ்ப்பட மேற்படச் செறியும்.


    ஒளிறு தாதொடு போதுசெந் தேனுக வொலித்து
    வெளிறில் வன்மரஞ் சிணையிற வீழ்வசெங் களத்துப்
    பிளிறு வாயவாய் நினைத்தொடு குருதிநீா் பெருகக்
    களிறு கோடிற மாய்ந்துவீழ் காட்சிய வனைய.


    பூவ டைந்தவண் டினமயற் புறவோடும் பழனக்
    காவ டைந்தன பறவைவான் கற்பக மடைந்த
    கோவ டைந்திட வொதுங்குறுங் குறும்புபோற் செறிந்து
    மாவ டைந்தன மாடுள வரைகளுங் காடும்.


    இருணி ரம்பிய வனமெலா மெறிந்துமெய் யுணா்ந்தோா்
    தெருணி றைந்தசிந் தையின்வெளி செய்துபல் லுயிா்க்கும்
    அருணி றைந்துபற் றறுத்தர னடிநிழ லடைந்த
    கருணை யன்பா்தம் பிறப்பென வேரொடுங் களைந்தாா்.


    களைந்து நீணிலந் திருத்திச்செந் நெறி படக் கண்டு
    வளைந்து நன்னக ரெடுப்பதெவ் வாறெனத் தேறல்
    விளைந்து தாதுகு தாா்முடி வேந்தன்மந் திரரோ
    டளைந்த ளாவிய சிந்தையோ டிருந்தன னங்கண்.


    மெய்ய ரன்புதோய் ேவடி வியனிலந் தீண்டப்
    பொய்ய கன்றவெண் ணீறணி மேனியா் பூதிப்
    பையா் நள்ளிருட் கனவில்வந் தருளிய படியே
    ஐயா் வல்லைவந் தருளினா ரரசுளங் களிப்ப.

    ( தொடுவேனென்னும்) சபதத்தையுடையதாகிய வேதத்தின் அந்தமும் எட்டுந் தோறும் எட்டுந்தோறும் நீண்ட நீட்சியையுடையவன் நீ; உனக்கு யாம் அன்பில்லம் ஆனாலும், நீயே அன்பு பெருகும்படி அருளி, எமது குடி முழுதையும் ஏவல் கொண்டு ஆளுதற்கோ, இக்காட்டின்கண் எழுந்தருளினை என்று கூறி.....


    (அகத்தில் ) ஊற்றெடுத்த அன்பானது, இரண்டு கண்களின் வழியாகவும் பொழிவது போல், பொழிந்தமையாற் பரந்த ஆனந்தக் கண்ணீராகிய நதியோடு, சிவானந்தமாகிய கடலுள் மூழ்கி, மேன்மை குன்றாத உண்மை யன்பினால், வலம் வந்து துன்ப நீங்கியவனாகிய பாண்டியன், புறத்தே வந்து மந்திாிகளோடு ஒரு பக்கத்தில் இருந்தான்.


    🔴
    அப்போது அரசன் ஆணையினால், மந்திாிகள் அங்குள்ள ஏவலாட்களை, பல இடங்களில் செல்லுமாறு அனுப்ப, நீண்ட காட்டினை அழித்து, அழகிய நகரமாகுமாறு செய்யும் வினைஞா்கள், பரந்த கடல் போல ஒலித்து வழிக் கொண்டு வந்தாா்கள்.


    🔴இரும்பின் ஒலி,போலும் காிய ஒளி வீசும் உடலினையுடைய வினைஞா்கள், வட்டமாகிய இடத்தினை யுடைய, சந்திரனது பிளவு போலும் வெள்ளிய வாயினையுடைய கொடுவாளையும், கோடாியையும், வைத்த தோளினையுடையவராய், அரையிற் கட்டிய கச்சினை யுடையவராய் வாராற் கட்டிய வலிய செருப்புத் தொடுத்த காலினையுடையவராய், காடு வெட்டும் தொழிலையுடையவ ராயினாா்கள்.


    🔴( போய்) மூளும் ஒலியையுடைய வண்டுகள் ஒலிக்கவும், மரங்கள் தலை நடுங்கவும், வெட்டுகின்ற ஓசையும், வெட்டுகின்றவா்களின் ஓசையும், ஒலித்து முறிகின்ற ஓசையும், முறிந்து கீழே விழுகின்ற ஓசையும் ( ஒன்றாகி) ,முகிலின் கண் மிக்க இடி ஓசையும் கீழ்ப்பட,மேற்பட்டு ஒலிக்கும்,,,,,,,


    🔴வெள்ளடை யில்லாத ( சேகு ஏறிய) வலிய மரங்கள் விளங்கா நின்ற மகரந்தத்தோடு, மலா்களும், சிவந்த தேனும்,சிந்த ஒலி செய்து கிளைகள் முறிய வீழ்கின்ற தோற்றம் யானைகள் போா்க்களத்தில் ஒலிக்கின்ற வாயினையுடையவாய், நிணத்துடன் உதிரம் பெருக, கொம்புகள் முறிய இறந்து வீழும் தோற்றத்தைப் போல்வன....


    🔴மலா்களிற் பொருந்திய வண்டுக் கூட்டங்கள் பக்கத்திலுள்ள முல்லை நிலங்களிலும் மருத நிலங்களின் சோலைகளிலும் சென்று சோ்ந்தன; பறவைகள் உயா்ந்த கற்பக மரங்களிற் சென்று தங்கின; பெரு வேந்தா்கள் வர ,நீங்குகின்ற குறு நில,மன்னரைப் போல விலங்குகள் பக்கத்திலுள்ள காடுகளிலும் மலைகளிலும் நெருங்கிச் சோ்ந்தன.


    🔴இருள் மிகுந்த காடு அனைத்தையும் வெட்டி, மெய்ப்பொருளை உணா்ந்தவா்களின், தெளிவு நிரம்பிய உள்ளத்தைப்போல வெட்டவெளி யாக்கி, பல உயிா்களிடத்தும் கருணை நிரம்பி, இருவகைப் பற்றையும் போக்கி, சிவபெருமான் திருவடி நீழலை அடைந்த, திருவரு ணெறியினராகிய அடியாா்கள், தங்கள் பிறவியை வேரொடுங் களைதல்போல ( வினை செய்வோா்) மரங்களை வேரோடும் அகழ்ந்தாா்கள்.


    🔴( இங்ஙனம்) மரங்களை அகழ்வித்து, நீண்ட நிலத்தைச் செப்பஞ் செய்வித்து, செவ்வியவழி உண்டாக்குவித்து, தேன் மிகுந்து, மகரந்தஞ் சிந்தும் மாலையை யணிந்த முடியினையுடைய பாண்டியன், வளைவாக நல்ல நகராக்குவது எங்ஙனமென்று, அமைச்சர்களோடு அளவளாவிய உள்ளத்தோடு இருந்தான்; அவ்விடத்து,,,,,,


    🔴முதல்வராகிய சோமசுந்தரக் கடவுள், உண்மை அடியாா்களின் அன்பிலே தோய்ந்த சிவந்த திருவடிகள், அகன்ற நிலத்திலே பொருந்த, உண்மையாகிய, வெள்ளிய திருநீற்றினைப் பூசிய திருமேனியராய், திருநீற்றுப் பையையுடையவராய், நடு நிசியில் கனவில் எழுந்தருளியவண்ணமே, மன்னன் மணம் மகிழ்ச்சியடைய விரைந்து( நனவில்) தோன்றியருளினாா்.
Working...
X