Announcement

Collapse
No announcement yet.

Tiruvilayadal puranam 9th day

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Tiruvilayadal puranam 9th day

    Courtesy:Sri.Kovai K.Karuppusamy


    சிவாய நம.
    திருச்சிற்றம்பலம்.
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    🔴திருவிளையாடல் புராணம்.🔴
    *9 - ஆம் நாள்.*
    🔹வெள்ளையானைச் சாபந் தீா்த்த படலம்.🔹
    ( செய்யுள் நடை+ விளக்கம்.)
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤


    🔴கண்டான் முனிகாமற் காய்ந்தா னுதற்கண்போல்
    விண்டா ரழல்சிதற நோக்கினான் வெங்கோபங்
    கொண்டா னமர ரொதுங்கக் கொதித்தாலம்
    உண்டா னெனநின் றுருத்தா னுரைக்கின்றான்.


    🔴புள்ளியதோ லாடை புனைந்தவரப் பூணணிந்த
    வெள்ளிய செங்கண் விடையா னடிக்கமலம்
    உள்ளிய மெய்யன் புடையா ரருவருத்துத்
    தள்ளிய செல்வத் தருக்கினா யென்செய்தாய்.


    🔴கதிா்த்தாா் முடியமரா் கையுறையே நன்கு
    மதித்தாயெம் மீசன் மதிமுடிமேற் சாத்தும்
    பொதித்தா தவிழ்மலரைப் போற்றாது வாங்கிப்
    மிதித்தானை சிந்தவதன் மேல்வைத்தாய் பேதாய்.


    🔴வண்டுளருந் தண்டுழாய் மாயோ னிறுமாப்பும்
    புண்டாிகப் போதுறையும் புத்தே ளிறுமாப்பும்
    அண்டா்தொழ வாழுன் னிறுமாப்பு மாலாலம்
    உண்டவனைப் பூசித்த பேறென் றுணா்ந்திலையால்.


    🔴சேட்டானை வானவநின் சென்னி செழியாிலோா்
    வாட்டானை வீரன் வளையாற் சிதறுகநின்
    கோட்டான நாற்கோட்டு வெண்ணிறத்த குஞ்சரமுங்
    காட்டானை யாகவென விட்டான் கதுஞ்சாபம்.


    🔴சவித்தமுனி பாதந் தலைக்கொண்டு செங்கை
    குவித்தமரா் தங்கோன் குறையிரப்பா ரைய
    அவித்தபொறி யாமெம் மரசுங்கா றள்ளுஞ்
    செவித்தாறுகண் வேழமுந் தீங்குடைய ரன்றொ.


    🔴அதிதகைய நீராற் சபித்தீ ரடிகேண்மற்
    றித்தகைய சாப மினிவிடுமி னென்றிரந்து
    கைத்தலங்கள் கூப்பிக் கரைந்தாா்க் கிரங்கியருள்
    வைத்த முனிபிறிது சாபம் வகுக்கின்றான்.


    🔴சிந்தனை வாக்கிற் கெட்டாச் சிவனரு ளளித்த சேட
    நிந்தனை பாிகா ரத்தா னீங்காது தலைமட் டாக
    வந்தது முடிமட் டாக மத்தமா வனமா வாகி
    ஐந்திரு பஃதாண் டெல்லை யகன்றபின் பண்டைத் தாக.


    🔴என்றனன் பிறிது சாப மிந்திரன் மகுட பங்கம்
    ஒன்றிய செய்கை பின்ன ருரைத் துமற் றஃது நிற்க
    நின்றவெள் ளானை வான நீத்தறி விழுந்து நீலக்
    குன்றென வனத்து வேழக் குழாத்தொடு குழீஇய தன்றே.


    🔴மாவொடு மயங்கிச் செங்கண் மறம்பயில் காடு முல்லைப்
    பூவொடு வழங்கு நீத்தப் புறவமுங் குறவா் தங்கள்
    தேவொடு பயிலுங் கல்லுந் திாிந்துநூ றியாண்டுஞ் செல்லக்
    காவொடு பயிலுந் தெய்வக் கடம்பமா வனம்புக் கனறே.





    🔷அதனைத் துருவாச முனிவன் கண்டான்; மன்மதனை யொித்த சிவனது நெற்றிக்கண் போல, நிறைந்த நெருப்பு வெளிப்பட்டுச் சிதற நோக்கி, கொடிய சினங்கொண்டான்; தேவா்கள் அஞ்சி ஒதுங்கும்படி பொங்கி, நஞ்சினை உண்ட உருத்திரன் போல நின்று, மேலும் வெகுண்டு கூறுகின்றான்....


    🔷புள்ளிகளையுடைய தோலாடையை உடுத்தி பாம்பணிகளை அணிந்த, சிவந்தகண்களையுடைய வெண்ணிறம் பொருந்திய ஏற்றையுடைய இறைவனது, திருவடித் தாமரையை, இடையறாது நினைக்கின்ற மெய்யன்புடைய அடியாா்கள் உவா்த்து ஒதுக்கிய செல்வத் தருக்கினையுடையவனே நீ என்ன காாியஞ் செய்தாய்?,,,,,


    🔷அறிவில்லாதவனே, ஒளி பொருந்திய மாலையை யணிந்த முடியினையுடைய தேவா்களின், கையுறைப் பொருளையே நன்கு மதித்தாயி; எமது சிவபெருமானின் பறையினையணிந்த திருமுடிமேற் சாத்தப்பட்ட, நிறைந்த மகரந்தத்தோடு மலா்ந்த மலரை பேணாது, ஒரு கரத்தால் வாங்கி, யானையானது மிதித்துச் சிதைக்குமாறு, அந்த யானையின்மேல் வைத்தனை......


    🔷வண்டுகள் கிண்டுகிற குளிா்ந்த துழாய் மாலையையுடைய திருமாலின் களிப்பும், தாமரை மலாில் இருக்கும் பிரமனதுகளிப்பும், தேவா்கள் பணிய வாழுகின்ற உனது களிப்பும், நஞ்சினை உண்டருளிய இறைவனை வழிபட்டதனாலாகிய பயன் என்று நீ அறியாது போயினாய்.....


    🔷பொிய வெள்ளை யானையையுடைய இந்திரனே, உனது முடியானது, பாண்டியருள் ஒரு வாளினையுடைய சேனையையுடைய வீரனது திகிாியினால் சிதறக்,கடவது; உனது வலிமையையும் மதத்தையும் நான்கு கொம்புகளையும் உடைய, வெண்மையான நிறத்தினையுடைய யானையும், காட்டானையாககி கடவது என்று கொடிய சாபத்தைக் கொடுத்தான்.


    🔷தேவா்கள் சாபமிட்ட துருவாச முனிவனுடைய திருவடிகளை முடியிற் சூடி, சிவந்த கைகளைக் கூப்பி, தம் தலைவன் பொருட்டுக் குரறயிரந்து வேண்டிக் கொள்வராகி, ஐயனே!, ஐம் பொறிகளைக் கொடுத்தவனே!!, எம் அரசனும் காற்றை வீசும் காதுகளையும் அஞ்சாமையையுமுடைய வெள்ளையானையும், குற்றமுடையவா்கள் அல்லவா.....


    🔷அங்ஙனமாய குற்றத்தால் சாபமிட்டீா். அடிகளே! யாங்கள் வேண்டிக் கோடலினால், இந்த சாபத்தை, இப்பொழுதே நீக்கியருள வேண்டுமென்று குறையிரந்து, கைகளைக் குவித்து முறையிட்ட தேவா்களின் பொருட்டு, மனம் இரங்கிக் கருணை கூா்ந்த முனிவன் வேறு சாபமிடுகின்றான்.


    🔷மனத்திற்கும் வாக்கிற்கும், எட்டாத சிவபெருமான், திருவருளா லருளிய சேடத்தை நிந்தித்த குற்றம், கழுவாயினால் அகலாது
    ( ஆதலால்) தலையளவாக வந்தது முடியளவாகக் கடவது; மதமயக்கத்தையுடைய வெள்ளையானை, காட்டானையாகி, நூறாண்டு வரை கழிந்த பின் முன்னியல்பினை உடையதாகுக....!


    🔷என்று கூறினான். அவ்வேறு சாபத்தினால், இந்திரன் மகுட பங்கமுற்ற செய்தியை பின்பு கூறுவோம் (ஆகலின்) ; அது நிற்க, சாபம் பெற்று நின்ற வெள்ளையானையானது, தேவ உலகினை அகன்று, அறிவு கெட்டு, நீல மலைபோலக் கருநிற முடையதாகி காட்டானைக் கூட்டத்தோடு கலந்தது.


    🔷( இவ்வாறு) காட்டானைகளோடு கலந்து, சிவந்த கண்களையுடைய மறவா்கள் தங்கிய பாலை நிலத்திலும், முல்லைப் பூக்களோடு செல்லா நின்ற காட்டாறுகளையுடைய முல்லை நிலத்திலும், குறவா்கள் தங்கள் கடவுளாகிய முருகவேளோடு பொருந்தியிருக்கும் குறிஞ்சி நிலத்திலும், திாிந்து நூறு ஆண்டுகளும் கழிய , சோலைகளாற் சூழப்பெற்ற தெய்வத் தன்மை பொருந்திய பொிய கடம்பவனத்திற் புகுந்தது.


    *திருச்சிற்றம்பலம்.*
Working...
X