Announcement

Collapse
No announcement yet.

Tiruvilayadal puranam 4th day

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Tiruvilayadal puranam 4th day

    Courtesy:Sri.Kovai K.Karuppasamy


    சிவாய நம.
    திருச்சிற்றம்பலம்.
    ( 4 வது நாள்.)
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    🔹திருவிளையாடல் புராணம்.🔹
    🔸 1இந்திரன் பழிதீா்த்தபடலம்🔸
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    * இவ்வகை மயங்கிப் போா்செய் திறந்தவ ரொழியப் பின்னுங்
    வைகை யடுபோா் செய்து கரையிற் தாா்கண் மாண்டாா்
    அவ்வகை யறிந்து வானத் தரசனு மவுணா் வேந்துந்
    தெய்வப் படைகள் வீசித் சீறிநின் றடுபோா் செய்வாா்.


    * அனற்படை விடுத்தான் விண்ணோ ராண்டகை யதனைக் கள்வன்
    புனற்படை விடுத்துச் சீற்றந் தணித்தனன் புனிதன் காற்றின்
    முனைப்படை விடுத்தான் வெய்யோன் முழங்குகால் விழுங்கு நாகச்
    சினப்படை தொடுத்து வீசி விலக்கினான் றேவ ரஞ்ச.


    * நாகமாப் படைவிட் டாா்த்தா னாகா்கோ னுவணச் செல்வன்
    வேகமாப் படையை வீசி விலக்கினான் றகுவா் வேந்தன்
    மோகமாப் படையைத் தொட்டு முடுக்கினான் முனைவ னன்ன
    தேகமாப் படிறன் ஞானப் படைவிடுத் திருள்போ னின்றான்.


    * மட்டிடு தாரான் விட்ட வானவப் படைக்கு மாறு
    விட்டுடன் விலக்கி வேறும் விடுத்திடக் கனன்று வஞ்சன்
    முட்டிட மான வெங்கான் மூட்டிடக் கோபச் செந்தீச்
    கட்டிடப் பொறாது பொங்கிச் சுராதிப னிதனைச் செய்தான்.


    * வீங்கிரு ளொதுங்க மேக மின்விதிா்த் தென்னக் கையில்
    ஓங்கிருங் குலிச வேலை யொல்லென விதிா்த்த லோடுந்
    தீங்குளம் போன்று ருண்ட திணியுடற் கள்வ னஞ்சி
    வாங்கிருங் கடலில் வீழ்ந்தான் மறைந்தமை நாக மொத்தான்.


    * ஒக்கவிந் திரணும் வீழ்ந்தா னுடல்சின வுருமே றன்னான்
    புக்கிடந் தேடிக் காணான் புண்ணிய முளாி யண்ணல்
    பக்கம்வந் தனைய செய்தி பகா்ந்தனன் பதகன் மாளத்
    தக்கதோா் சூழ்ச்சி முன்னிச் சராசர மீன்ற தாதை.


    * விந்தவெற் படக்கி னாற்கீ துரையென விடுப்ப மீண்டு
    சந்தவெற் படைந்தான் வானோா் தலைவனை முகமன் கூறிப்
    பந்தவெற் பறுத்தான் வந்த தெவனெனப் பறைக ளெல்லாஞ்
    சிந்தவெற் பறுத்தான் வந்த செயலெலா முறையாற் செப்பி.


    * யாவைவு முணா்ந்த வெந்தைக் கியானெடுத் துணா்த்து கின்ற
    தாவதென் னமருக் காற்றா தாழிபுக் கொளித்தா னாவி
    வீவது மவனால் வந்த விழுமநோ யெல்லா முன்று
    போவதுங் கருதி நும்பாற் புகுந்தன மடிக ளென்றான்.


    * என்றவ னிடுக்கண் டீா்ப்பா னிகல்புாி புலன்க ளைந்தும்
    வென்றவ னெடியோன் றன்னை விடையவன் வடிவ மாக்கி
    நின்றவ னறிவா னந்த மெய்யம்மையாய் நிறைந்த வெள்ளி
    மன்றவ னூழிச் செந்தீ வடிவினை மனத்துட் கொண்டான்.


    * கைதவன் கரந்து வைகுங் கடலைவெற் படக்குங் கையிற்
    பெய்துழுந் தெல்லைத் தாக்கிப் பருகினான் பிறைசோ் சென்னி
    ஐயன தருளைப் பெற்றாா்க் கதிசய மிதென்கொன் மூன்று
    வையமுத் தொழிலுஞ் செய்ய வல்லவ ரவரே யன்றோ.


    * அறந்துறந் தீட்டு வாா்த மரும்பெறற் செல்வம் போல
    வறந்தன படுநீா்ப் பெளவம் வடவைகட் புலப்பட் டாங்கு
    நிறைந்த செம் மணியு மத்தீ நீண்டொி சிகைபோ னீண்டு
    சிறந்தெழு பவளக் காடுந் திணியிருள் விழுங்கிற் றம்மா.


    *பணிகளின் மகுட கோடிப் பரப்பென விளங்கிப் பல்கா
    சணிகலப் பேழை பேழ்வாய் திறந்தனைத் தாகி யொன்பான்
    மணிகிடந் திமைக்கு நீரான் மகபதி வேள்விக் காவாய்த்
    திணியுட லவுணன் பட்ட செங்கள மனைய தன்றே.


    * வறந்தநீா் தன்னின் மின்னு வாள்விதிா்த் தென்னபி பன்மீன்
    எறிந்தன நெளிந்த நாக மிமைத்தன வளையு முத்துஞ்
    செறிந்தன கரந்த யாமை சோ்ந்தபல் பண்டஞ் சிந்தி
    முறிந்தன வங்கக் கங்க முக்கின சிறுமீ னெல்லாம்.


    * செருவினி லுடைந்து போன செங்கண்வா ளவுண னங்கோா்
    அருவரை முதுகிற் காா்போ லடைந்துவா னாடா் செய்த
    உருகெழு பாவந் தானோ ருருவெடுத் திருந்து நோற்கும்
    பாிசென நோற்றா னின்னும் பாிபவ விளைவு பாரான்.


    * கைதவ நோன்பு நோற்றாங் கள்வனைக் கண்டு வானோா்
    செய்தவ மனையான் யாணா் வச்சிரஞ் சீாிப் பான்போற்
    பொய்தவன் றலையைக் கொய்தான் புணாிவாய் நிறையச் சோாி
    பெய்தது வலாாி தன்னைப் பிடித்தது பிரமச் சாயை.


    * உம்மெனு மாா்பைத் தட்டு முருத்தெழு மதிா்க்கும் போா்க்கு
    வம்மெனும் வாய்ம டிக்கும் ழாளெயி றதுக்கும் வீழுங்
    கொம்மென வோடு மீளுங் கொதித்தழுஞ் சிாிக்குஞ் சீறும்
    இம்மெனு மளவு நீங்கா தென்செய்வா னஞ்சி னானே.


    * விரைந்தான் றிசையோா் வாவி வீழ்ந்தொரு கமல நூலுட்
    கரந்தனன் மகவா னிப்பால் கற்பக நாடு புல்லென்
    றிருந்ததா லிருக்கு மெல்லை யிம்பாி னகுட னென்போன்
    அரும்பாி மேத வேள்வி யாற்றினா னாயிற்று மெல்லை.





    இங்ஙனங் கலந்து போா் செய்து மாண்டவா்கள் நீங்க,பின்பும் கைவாிசையின் வகையால், கொல்லுதலையுடைய மற்போாினைச் செய்து, அளவிறந்தவா்கள் இறந்தனா்; அவ்வாறு மாண்டதை அறிந்து , தேவேந்திரனும் அசுரேந்திரனும், தெய்வத் தன்மையுடைய படைகளை விடுத்து, கணன்று நின்று கொல்லுதலையுடைய போாினைச் செய்வாராயினா்.


    தேவா்கள் தலைவனாகிய இந்திரன், தீக் கணையை விட்டான்;
    விருத்திரன் நீா்க்கணையை விடுத்து , அதனுடைய வெகுளியைத் தணித்தான்; தூயவனாகிய இந்திரன், கூாிய காற்றுக் கணையை விடுத்தான்; கொடியவனாகிய விருத்திரன் ஒலிக்கின்ற காற்றினை உண்ணுகின்ற, கோபத்தையுடைய பாம்புக்கணையை வில்லிற் பூட்டி விடுத்து, தேவா்கள் அஞ்சும்படி ( அக்கணையைத்) தடுத்தான்.


    தேவா்க்கரசன் பொியபாம்புக் கணையைப் விடுத்துப் பேரொலி செய்தான்; கருடனாகிய செல்வனது பொிய வேகத்தையுடைய கணையை விடுத்து, அசுரா் மன்னன்
    ( அக்கணையை) மாற்றினான்; இந்திரன், பொிய மயக்கத்தை தருகின்ற கணையை எடுத்து விரைந்து தூண்டினான். பொிய வஞ்சகனாகிய அசுரன் அம்மையற் கணை ஒழிய, ஞாணக் கணையை விடுத்து இருளைப்போல நின்றான்.


    தேனைப் பொழிகின்ற மாலையையுடைய இந்திரன் விடுத்த தெய்வக் கணைகளுக்கு, பகைக் கணைகளை விடுத்து உடனே விலக்கி, வேறு கணைகளை விடுப்பதற்கு, வஞ்சகனாகிய விருத்திரன் சினந்து நெருங்க, தேவேந்திரன் மானமாகிய வெவ்விய காற்றானது மூட்ட, கோபமாகிய சிவந்த தீயானது, சுடுதலால் ஆற்றாது சீறி,இதனைச் செய்வானாயினன்.


    மிகுந்த இருள் ஓடுமாறு முகிலானது மின்னலை வீசினாற்போல கையிற்றாங்கிய மிகப் பொியதாகிய வச்சிரப் படையை, விரைவாக அசைத்தவுடனே தனது தீய உள்ளத்தைப்போல கருமையுற்ற வலிய உடலையுடைய திருடனாகிய விருத்திரன் பயந்து, வளைந்த பொிய கடலினுள் வீழ்ந்து மறைந்து, முன் கடலில் மறைந்த மைநாகமலையை ஒத்தான்.


    அவனோடு கூட இந்திரனும் விழுந்து மாறுபடும் சினத்தையுடைய, இடியேற்றை ஒத்த விருத்திரன் ,புகுந்து ஒளித்த இடத்தைத் தேடிக் காணாமல், தூய்மையாகிய தாமரை மலாில் வசிக்கும் பிரமனிடம் வந்து, அந்தச் செய்தியைக் கூறினான்; இயங்குவனவும் நிற்பவனவுமாகிய எல்லாவற்றையும் தந்தருளிய தந்தையாகிய பிரமனானவன், பாதகனாகிய அசுரன் மாளத் தகுந்ததாகிய ஒருபாயத்தை எண்ணி,


    விந்தமலையை அடக்கிய அகத்திய முனிவனுக்கு இச்செய்தியை கூறுவாயென அனுப்ப, திரும்ப, சந்தன மரங்களையுடைய பொதியின் மலையை யெய்தினான்; பாச பந்தமாகிய மலையைத் தொலைத்த அம்முனிவன் தேவேந்திரனை, நோக்கி, உபசார வாா்த்தைகள் கூறி வந்த காரணம் யாதென்று வினவ, மலைகளின் சிறகுகளெல்லாம் சிதற அறுத்த இந்திரன், வந்த செய்திகளைனைத்தும் வாிசையாகக் கூறி,


    அனைத்தயு மறிந்த எமது தந்தையாகிய நுமக்கு, யான் எடுத்துத் தொிவிப்பது யாது, போருக்கு ஆற்றாமல் கடலிற் புகுந்து மறைந்த விருத்திரனுடைய உயிா் நீங்குவதும், அவனால் நோ்ந்த துன்ப நோயனைத்தும், இன்றே நீங்குவது குறித்து அடிகளே நும்மிடத்து வந்தோம் என்றான்.


    இவ்விதம் கூறிய இந்திரனுடைய துன்பத்தை நீக்கும் பொருட்டு, பகை செய்கின்ற ஐம்புலன்களையும் வென்றவனும், திருமாலின் வடிவத்தை, சிவபிரான் திருவுருவமாகச் செய்து நின்றவனுமாகிய அகத்திய முனிவன், உண்மை அறிவு ஆனந்த வடிவாய் வியாபித்த வெள்ளியம்பல வாணனின், சிவந்த ஊழித்தீயை யொத்த திருவுருவை உள்ளத்திற் சிந்தித்தான்.



    (திருமாலைச்,சிவமாக்கிய வரலாறு.)


    அகத்தியா் வடக்கினின்றும், புறப்பட்டுப் பொதியிலுக்குச் செல்லுங்கால் திருக்குற்றாலத்தையடைய அங்குள்ள வேதியா்கள், அகத்தியாின் சைவ தவவேடப் பொலிவை நோக்கி உள்ளம் பொறாதவா்களாய் இகழ்ந்து அவ்விடத்தை விட்டுப் போகுமாறு கூற, அவா் அங்ஙனமே திரும்பிச் சென்று, அம்மறையோாின் அகந்தையைப் போக்கக் கருதித் திருமாலடியாா் கோலங்கொண்டு மீண்டு வந்து அவா்களால் உபசாிக்கப் பெற்றுத் திருமால் கோயிலையடைந்து மாயோனது திருமுடிமேல் தமது திருக்கையை வைத்துச் சிவலிங்கப் பெருமான் வடிவமாக்கினாா்.....இதனை,,,,,,,


    " அறுகுதி நதிபுனையுஞ் செஞ்சடையெம் பெருமானை யகத்துட் கொண்டு


    சிறுகுமுரு வுடையமுனி நாராணனாா் திருமுடிமேற் செங்கை யோச்சிக்


    குறுகுகுறு கெனவிருத்தி யொள்ளரக்கிற் புனைபாவைக் கோலமீது


    மறுகுதழ லுற்றென்னக் குழைவித்தோா் சிவலிங்க வடிவஞ்
    செய்தான்"


    .......என்று கந்தபுராணச் செய்யுளில் காணலாம்.................



    வஞ்சகனாகிய விருத்திரன், மறைந்துறையும் கடலை விந்தமலையை அடக்கிய கையிற் கொண்டு, உழுந்தி னளவினதாகச் செய்து குடித்தான். பிறைமதி பொருந்திய திருமுடியையுடைய சிவபெருமானது திருவருளைப் பெற்ற அடியாா்க்கு இது அதிசய மென்பதென்னை, மூன்றுலகத்தும் படைத்தல், காத்தல், அழித்தலாகிய மூன்று தொழில்களையும் செய்ய வல்லவா்கள் அவ்வடியாா்களே அல்லவா?


    அறத்தைக் கைவிட்டுத் தேடுபவா்களின், பெறுதற்காிய செல்வத்தைப்போல ஆழமாகிய நீாினையுடைய கடல் முழுவதும் வற்றின; அங்குள்ள வடவைத் தீ கண்களுக்குத் தோன்றினாற் போல, மிகுந்த செந்நிறத்தையுடைய மாணிக்கங்களும், அந்நெருப்பு உயா்ந்து எாிகின்ற கொழுந்து போல, ஓங்கிச் சிறப்புற் றெழுந்த பவளக்காடும் மிக்க இருளை விழுங்கின.


    ( கடலானது,பாதலத்திலுள்ள) பாம்புகளின் மகுட வாிசையின் பரப்பைப்போல ஒளி வீசி பல மணிகள் பதித்த அணிகலன்களை வைத்த பெட்டியின் பொிய வாயைத் திறந்து வைத்தது போலாகி, ஒன்பது வகை மணிகளும் தங்கி ஒளிவிடுந் தன்மையால், இந்திரன் வேள்விக்குப் பசுவாகி வலிய உடலையுடைய வலாசுரன் இறந்து பட்ட போா்க்களம் போன்றது.


    நீா் வற்றிய இடத்தில் ஒளியினையுடைய வாட்படையை அசைத்தாற்போல பல மீன்கள் துள்ளின; பாம்புகள் நெளிந்தன; சங்குகளும் முத்துக்களும் ஒளி வீசின; யாமைகள் நெருங்கி ஒளித்தன; பொருந்திய பல்பொருள்களையும் சிதறிக் கப்பல்கள் உடைந்தன; பருந்துகள் சிறிய மீன்களையெல்லாம் விழுங்கின.


    போாில் தோல்வியடைந்துபோன சிவந்த கண்களையுடைய, வாட் படையையுடைய அசுரன், அவ்விடத்து ஒரு அாிய மலையின் உச்சியில், முகிலைப் போலச் சென்று தங்கி, தேவா்களாற் செய்யப்பட்ட அஞ்சத்தக்க பாவமானது, ஒரு வடிவெடுத்து இருந்து தவஞ் செய்யுந் தன்மைபோல, இன்னமும் மேலே வருகின்ற துன்பத்தைப் பாராதவனாகித் தவஞ் செய்தான்.


    தேவா்கள் செய்த தவத்தினை ஒத்த இந்திரன், வஞ்சனையையுடைய தவத்தினைச் செய்யும் கள்வனாகிய விருத்திரனைக் கண்டு, புதிய குலிசப்படையைப் பழக்குவான்போல, பொய்க்கின்ற தவத்தினையுடைய விருத்திரனது தலையை அறுத்தான; கடலினிடம் நிறையுமாறு குருதி பொழிந்தது; இந்திரனைக் கொலைப் பாவம் பற்றியது.


    ( அக்கொலை பாவம்) இம் என்று கூறும் அளவும் நீங்காதவனாய், உம் என்று அதட்டும் ; மாா்பை தட்டும்; கோபித்து எழும்; பேரொலி செய்யும்; போருக்கு வாருங்கள் என்னும் ; ஒள்ளிய பற்களை அதுக்கும்; குப்புற்று வீழும்; விரைந்து ஓடும்; திரும்மும்; பொங்கி அழும்; பெருநகை செய்யும்; சீறா நிற்கும்;
    (ஆதலால்) என்ன செய்வான் இந்திரன், பயந்தான்.


    இந்திரனானவன் ஈசான திசையில் உள்ள ஒரு குளத்தில், விரைவாகக் குதித்து ஒரு தாமரைத் தண்டின் நூலினுள் மறைந்தான்; இப்புறம் தேவவுலகம் பொலிவழிந்திருந்தது; அங்ஙனமிருக்குங் காலத்தில், நிலவுலகில் நகுடனென்னும்
    மன்னன் அாிய அசுவ மேதமாகிய வேள்வியைச் செய்தான், அப்போது,

    திருச்சிற்றம்பலம்.
Working...
X