Announcement

Collapse
No announcement yet.

Poetic beauty in Kamba ramayanam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Poetic beauty in Kamba ramayanam

    Courtesy: Smt.Uma Balasubramanian


    கம்பராமாயணத்தில் கவி நயம்


    நஞ்சம் அன்னவரை நலிந்தால், அது
    வஞ்சம் அன்று; மனு வழக்கு ஆதலால்,
    அஞ்சில், ஐம்பதில், ஒன்று அறியாதவன்
    நெஞ்சில் நின்று நிலாவ, நிறுத்துவாய்.

    நஞ்சம் = நஞ்சு போல்
    அன்னவரை = குணம் உள்ளவரை (நஞ்சு உண்டவர்களைக் கொல்லும்)
    நலிந்தால், = தண்டித்தால்
    அது = அது
    வஞ்சம் அன்று; = பழிக்குப் பழி வாங்கும் செயல் அன்று
    மனு வழக்கு = அது மனு நீதியின் முறை ஆகும்
    ஆதலால், = ஆதலால்
    அஞ்சில், = அஞ்சில்
    ஐம்பதில், = ஐம்பதில்
    ஒன்று அறியாதவன் = ஒன்றும் அறியாத (சுக்ரீவன்)
    நெஞ்சில் = மனதில்
    நின்று நிலாவ, = பதியும் படி
    நிறுத்துவாய். = நிலை நிறுத்துவாய்
    இதில் என்ன வார்த்தை நயம் என்று நினைக்கத் தோன்றுகிறது அல்லவா??
    அஞ்சில் ஐம்பதில் ஒன்று அறியாதவன் என்ற சொற்றொடர்...
    முதல் பொருள் - அஞ்சில் + ஐம்பதில் + ஒன்று + அறியாதவன் = ஐந்து வயதில், ஐம்பது வயதில் ஒன்றும் அறியாதவன்
    இரண்டாவது பொருள் - அஞ்சு + இல் + அம்பு + அது + ஒன்று + அறியாதவன் = அஞ்சுதல் இல்லாத அம்புகள் என்னிடம் உள்ளன. அதில் ஒன்றைக் கூட அவன் அறியாதவன்
    மூன்றாவது பொருள் = அஞ் + சிலம்பதில் + ஒன்று + அறியாதவன் = அந்த மலையில் (சிலம்பு என்றால் மலை) உள்ள அவன் ஒன்றும் அறியாதவன்
    நான்காவது = அஞ்சு + ஐம்பது + ஒன்று = ஐம்பத்துஆறாவது , ஐம்பத்தாறாவது வருடம் துந்துபி வருடம்ஆகும் . இலக்குவன் துந்துபி என்ற அரக்கனின் எலும்புக் கூட்டைக் கால் கட்டை விரலால் உந்தித் தள்ளினான். அதை சுக்ரீவன் அறியமாட்டான் அதை அவன் நெஞ்சில் நின்று உலாவ நிறுத்துவாய்.
    ஐந்தாவது = அஞ்சிலம் + பதில் + ஒன்று + அறியாதவன் = அச்சமும் இல்லை, எனக்குத் தருவதற்கு அவனிடம் ஒரு பதிலும் இல்லை, ஆதலால் விழிக்கும் அவன் ஒன்றும் அறியாதவன்
    நாமும் கம்பன் போல சொல் விளையாட்டைத் தெரிந்து கொண்டால் தமிழில் தேர்ச்சி பெற்று சிறந்து விளங்கலாம்.!---
Working...
X