Announcement

Collapse
No announcement yet.

Vishnu in Tiruppugazh

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Vishnu in Tiruppugazh



    9. வள்ளி-தெய்வயானை
     ஸ்ரீமன் நாராயணரின் ஆனந்தக் கண்ணீரில் இருந்து அமிர்தவல்லி –சுந்தரவல்லி என்ற இரு கன்னிகைகள் தோன்றி முருகப் பெருமானை மணம் புரிய, இமயமலையில் தவம் புரிந்தனர்.


     கன்னியர் தவத்திற்கு உகந்த ஷண்முகப் பெருமான் சூர சம்ஹாரத்துக்குப் பின்னர் இருவரையும் மணம் புரிவதாக வாக்களித்தார்.
     சம்ஹாரக் காலம் வரையில் அமிர்தவல்லி இந்திரனின் வளர்ப்பு மகளாகவும், சுந்தரவல்லி வள்ளி மலையிலும் வளர்ந்து வருமாறு அருளினார்.
     அதன் படி, குழந்தை வடிவம் தாங்கிய அமிர்தவல்லியை இந்திரனின் வாகனமான ஐராவதம் வளர்த்தது. ஆதலால் 'தெய்வ யானை' என்ற திருப்பெயரால் அழைக்கப் பெற்றாள்.
     வள்ளி மலையில் ஸ்ரீமகாவிஷ்ணு முனிவராக தவநிலையில் இருந்து வந்தார். அத்தருணம் ஸ்ரீமகாலக்ஷ்மி பெண் மான் வடிவம் தாங்கி முனிவரை கடந்து செல்ல, பரந்தாமனின் திருப்பார்வை கடாட்சத்தால் அம்மான் ஒரு பெண் மகவை ஈன்று மறைந்தது.
     வேடர் தலைவர் நம்பிராஜன், வள்ளிக் கிழங்கு குழியில் கண்டெடுத்த தெய்வக் குழந்தைக்கு 'வள்ளி' என்னும் திருநாமம் சூட்டி வளர்த்தான்.
     செந்தில் வேலவன் சூர சம்ஹார நிகழ்வுக்குப் பின்னர், தெய்வயானைத் தாயாரை திருப்பரங்குன்றத்திலும், வள்ளி அம்மையாரை வள்ளி மலையிலும் மணம் புரிந்தார்.


     இந்நிகழ்வுகளால் ஷண்முகப் பெருமான் திருமாலின் மருமகன் என்னும் திருநாமம் பெற்றார்.
     முருகனுக்காக யானை, "தெய்வயானையை வளர்த்தது" "வள்ளியை மணமுடித்தது".
Working...
X