திருப்புகழில் இப்போது கிடைத்திருப்பது 1307 பாடல்கள்தான். பல்லாயிரம் பாடல்கள் இருந்ததாகவும் அவை மறைந்து போனதாகவும் கூறுகிறார்கள்.
திருப்புகழைப் பாடிய அருணகிரி பாடல்களை எழுதி வைக்கவில்லை. அவர் பாடிய கோயில்களில் இருக்கும் அன்பர்கள் அந்தப் பாடல்களை ரசித்து எழுதி வைத்தார்கள். அப்படி எழுதி வைத்த பாடல்கள்தான் இன்று தப்பிப் பிழைத்து நமக்குக் கிடைத்திருக்கின்றன.
திருப்புகழை பாட சொன்ன முருகன்
திருப்புகழ் என்ற பெயரைப் பின்னால் யாரும் வைக்கவில்லை. அருணகிரியே ஒரு பாடலில் திருப்புகழ் என்று குறிப்பிடுகிறார்.
பக்கரை விசித்ரமணி பொற்கலனை இட்ட நடை
பட்சியெனும் உக்ர துரகமும் நீபப்
பக்குவ மலர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை வடிவேலும்
திக்கது மதிக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியு முற்றிய பனிருதோளும்
செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு
செப்பென எனக்கருள்கை மறவேனே
குற்றமற்ற மணிகள் பொருந்திய பொன்னணிகளை அணிந்து கொண்டு அழகு நடை போடும் மாமயிலையும், கடம்ப மலர் மாலையையும், கிரவுஞ்ச மலையானது மறைந்து போகும் படி திருக்கையால் ஏவித்துளைத்த வேலையும்,எட்டுத் திசையும் கிடுகிடுக்க வரும் சேவலையும்,அருள் தருகின்ற சிற்றடிகளையும்,பன்னிரண்டு தோள்களையும்,இருந்து அருள் செய்யும் ஒவ்வொரு திருப்பதிகளையும் வைத்து உயர்ந்த வகையில்திருப்புகழை உள்ளம் விரும்பிப் பாடு என்று அருள் சொன்ன கருணையை நான் என்றும் மறவேனே!
ஆக திருப்புகழ் என்ற பெயரை அருணகிரிநாதர் வைக்கவில்லை. முத்தமிழ்த் தெய்வமான முருகப் பெருமானின் திருவாயால் பெயரிடப்பட்ட நூல் திருப்புகழ். திருப்புகழை முருகன் அருணகிரியைப் பாட வைத்தான்.
பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு
பட்சிந டத்திய குகபூர்வ
பச்சிம தட்சிண வுத்தர திக்குள
பத்தர்க ளற்புத மெனவோதுஞ்
சித்ரக வித்துவ சத்தமி குத்த
திருப்புக ழைச் சிறி தடியேனுஞ்
செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
சித்தவ நுக்ரக மறவேனே
அடியவர்களுக்கு அருளும் இறைவனே ஆடும் மயில் ஏறி விளையாடும் குகனே கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய திசைகளில் உள்ள அன்பர்கள் எல்லாரும் அற்புதம் அற்புதம் என்று ரசித்து ஓதுகின்ற அழகு கவிநயமும் சந்தநயமும் மிகுந்து இருக்கும் திருப்புகழை கொஞ்சமாவது நானும் சொல்லும் படி செய்து உலகில் பரவுவதற்கு வகை செய்த உன்னருளை மறக்க மாட்டேன் முருகனே! என்று அருணகிரி முருகனுக்கு நன்றி கூறுகிறார்.
தொடரும்
நன்றி கே என் ரமேஷ்