Announcement

Collapse
No announcement yet.

பகவத்கீதை படிக்கிற ஒவ்வொரு முறையும்.....

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பகவத்கீதை படிக்கிற ஒவ்வொரு முறையும்.....

    பெரியவர் ஒருவர் எப்போது
    பார்த்தாலும் தன்னுடைய வீட்டு
    வாசலில் அமர்ந்தபடி பகவத்கீதை படித்துக்
    கொண்டே இருப்பார். இளைஞன் ஒருவன்
    பல நாட்களாக இதனை கவனித்துக்
    கொண்டே இருந்தான். ஒரு நாள் அவரிடம்
    வந்து கேட்டான் , " தாத்தா! எப்பப்
    பாத்தாலும் இந்த புத்தகத்தையே
    படிச்சிட்டு இருக்கீங்களே. இதை எத்தனை
    நாளா படிக்கிறீங்க?" என்றான்.
    பெரியவர் சொன்னார்,
    " ஒரு அம்பது அம்பத்தஞ்சு வருஷம்
    இருக்கும் ".
    "அப்படின்னா இந்தப் புத்தகம் உங்களுக்கு
    மனப்பாடம் ஆயிருக்குமே! அப்புறம் ஏன்
    இன்னும் படிக்கிறிங்க ?" என்றான்.
    தாத்தா சிரித்தபடி கூறினார்,
    " எனக்கு ஒரு உதவி செய். நீ செஞ்சு
    முடிச்சப்புறம் நான் பதில் சொல்றேன்".
    இளைஞன் கேட்டான்,
    " என்ன உதவி தாத்தா? "
    பெரியவர் ஒன்றும் பேசாமல் பக்கத்தில்
    இருந்த ஒரு மூங்கில் கூடையை
    எடுத்தார். அதில் அடுப்புக் கரி
    இருந்தது. அதை ஒரு மூலையில்
    கொட்டினார். பல நாட்களாகக் கரியை
    சுமந்து சுமந்து அந்தக் கூடையின்
    உட்புறம் கருப்பாக மாறி இருந்தது.
    பெரியவர் சொன்னார்,
    " தம்பி, அதோ இருக்குற பைப்புல
    இருந்து இந்தக் கூடையில கொஞ்சம்
    தண்ணி பிடியேன்"
    இளைஞனுக்கு சிரிப்பு வந்தது.
    இருந்தாலும் பெரியவர் சொல்லி
    விட்டதால் எடுத்துச் சென்று தண்ணீர்
    நிரப்பி எடுத்து வந்தான். அவன் வந்து
    சேருவதற்கு முன்பே எல்லா நீரும்
    தரையில் ஒழுகிப்போனது. பெரியவர்
    சொன்னார்,
    " இன்னும் ஒரு முறை " . இளைஞன்
    மீண்டும் முயன்றான். ஆனால் மூங்கில்
    கூடையில் தண்ணீர் எப்படி நிற்கும்?
    மீண்டும் சிந்திப் போனது. பெரியவர்
    கேட்டார்,
    " தாத்தாவுக்காக இன்னும் ஒரே ஒரு
    முறை மட்டும் " . இளைஞன் ஒரு
    முடிவுக்கு வந்தான்.
    "இம்முறை மட்டும் அவர் சொல்கிறபடி
    செய்து விட்டு திரும்பிப் பார்க்காமல்
    ஓடிவிடுவோம். அவர் எந்தப் புத்தகத்தைப்
    படித்தால் எனக்கென்ன வந்தது? "
    தண்ணீர் பிடித்தான். வழக்கம் போலவே
    எல்லாத் தண்ணீரும் தரையில்.
    " தாத்தா, இந்தாங்க உங்க கூடை. இதில்
    தண்ணி நிக்காதுன்னு உங்களுக்குத்
    தெரியுமா தெரியாதா? எதுக்கு
    என்னை இந்தப் பாடு படுத்தினிங்க "
    என்றான்.
    அவர் புன்னகையோடு சொன்னார்,
    " இதுல தண்ணி நிக்காதுன்னு எனக்கும்
    தெரியும். நீ முதல்ல தண்ணீர் பிடிக்கப்
    போகும் போது இதோட உட்புறம் எப்படி
    இருந்தது? " என்றார்.
    இளைஞன் சொன்னான் ,
    " ரொம்ப அழுக்குப் பிடிச்சு கருப்பா
    இருந்தது "
    "இப்போ பார் "என்றார்.
    தண்ணீர் பட்டுப் பட்டுக் கூடையின்
    உட்புறம் சுத்தமாகி இருந்தது.
    பெரியவர் சொன்னார்,
    " தம்பி, நீ கேட்ட கேள்விக்கு பதில்
    இதுதான். எத்தனை முறை தண்ணீர்
    பிடிச்சாலும் மூங்கில் கூடை
    நிரம்பவே இல்லை. ஆனாலும் ஒவ்வொரு
    முறையும் கூடை சுத்தமாயிடிச்சு.
    அது போலத்தான்
    எத்தனை முறை படிச்சாலும் முழு
    வேதமும் மனப்பாடம் ஆயிடும்னு
    சொல்ல முடியாது. ஆனா படிக்கிற
    ஒவ்வொரு முறையும் உள்ளுக்குள்ள
    இருக்கும் அழுக்கும், கறையும்
    சுத்தமாகிக்கிட்டே இருக்கும்" என்றார்.
    இளைஞனுக்குள்ளே என்னென்னவோ
    செய்தது.
    "தாத்தா, எனக்குள்ளேயும் நிறைய
    அழுக்கு இருக்குது. எனக்கும் இந்தப்
    புத்தகம் கிடைக்குமா " என்றான்.
    " நிச்சயமாப்பா !" என்றபடி தாத்தா
    வீட்டுக்குள்ளிருந்து ஒரு பகவத்கீதை
    எடுத்து வர எழுந்தார்.

  • #2
    Re: பகவத்கீதை படிக்கிற ஒவ்வொரு முறையும்.....

    Very nice sir please continue

    Comment


    • #3
      Re: பகவத்கீதை படிக்கிற ஒவ்வொரு முறையும்.....

      ஏற்கனவே வாங்கி ஸ்டாக் செய்து
      வைத்திருந்த கீதையில் ஒரு புஸ்தகத்தை
      எடுத்து அவனிடம் தந்தார் .
      அது சமஸ்க்ருதம் மற்றும் தமிழ் உரை
      உள்ள நூல். நன்றியோடு பெற்றுச் சென்றான்.
      தினசரி ஒரு பக்கம் வாசிப்பான்.
      உரையை படித்தும் அதன் உட்கருத்தை
      முழுவதுமாக மனதில் பதிய வைக்க
      முடியவில்லை. என்றாலும் தொடர்ந்து
      படித்து வந்தான்.
      சில நாட்கள் சென்ற பின்பு மீண்டும்
      முதியவரை காண சென்றான்.
      அப்போதும் அவர் கீதையை வாசித்து
      கொண்டு தான் இருந்தார்.
      " நான் அநேக முறை படித்தும்
      அதன் உட்பொருளை மனதில்
      கொள்ளமுடியவில்லை. எப்படி
      படித்தால், முழு பொருளும்
      அறிந்து கொள்ள முடியும் ?"
      என்று கேட்டான்.
      அதற்கு பெரியவர்,
      " கீதை என்பது ஒரு வழிகாட்டி.
      அது சொல்லும் ஆழ் கருத்தை
      மனதில் கொள்ள ஒரு உபாயம்
      உள்ளது .அதை நீ அறிய வேண்டும்."
      என்றார் .


      " உனது ஸ்மார்ட் போனை தா "


      அவன் கொடுத்தான். அதில் சில
      பட்டன்களை அழுத்தினார்.
      எந்த பட்டனை எதற்கு அமுக்க
      வேண்டும் என்பது அவருக்கு
      தெரிந்தாலும் அதை விட்டு விட்டு
      எதை எதையோ அழுத்தினார்.
      " தாத்தா ! அப்படி அல்ல , இப்படி"
      என்று விளக்கினான் .


      முதியவர் மெல்ல நகைத்தார்.


      " எது நமக்கு இன்று தேவையோ
      அந்த பொருள் உள்ள பக்கத்தை -
      அத்தியாயத்தை நீ முதலில் வாசிக்கவேண்டும்.
      அதன் முழு உட் பொருளை மனதில் பதிய விடுவது
      சுலபம். அதன் பிறகு, அடுத்தது
      மறு நாள் அடுத்தது. என்று வாசித்தால்
      கீதையின் பொருள் புரியும். ஒன்றை
      விட்டு மற்றதில் கவனம் இருந்தால்
      வாசிக்கும் போது, அதன் உட் பொருள்
      விளங்காது.அதாவது நீரில் முழ்கி
      இருக்கும் போது நமது சிந்தனை
      எல்லாம் மீண்டும் மூச்சை பெறுவது தான்.
      அது போலவே திசை திரும்பா கவனம்
      நிச்சயம் தேவை. முயற்சி செய். "
      என்று கூறியதும், அவனுக்கு புரிய
      தொடங்கியது.


      ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்ததது,
      இன்று அவனுக்கும் புரிந்தது.
      தெளிவு கிடைத்தது.

      Comment

      Working...
      X