Announcement

Collapse
No announcement yet.

Latest treatement by Krishnaamma :)

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Latest treatement by Krishnaamma :)

    இந்த கதையை நேத்து தான் எழுதினேன்

    Latest treatement by Krishnaamma

    லதாவும் கவினும் மனமொத்த தம்பதிகள். கவின் மைசூரில் பிறந்து வளரர்ந்தவன். இப்போது பெங்களூரில் வேலை பார்க்கிறான். லதா தமிழ்நாட்டின் தென்கோடி இல் இருந்து பெங்களுருக்கு வேலைக்கு வந்தவள்.வந்தவளுக்கு இந்த ஆடம்பரமும் நவநாகரீகமும் ரொம்ப பிடித்துப்போனது , அவளும் நவநாகரீக மங்கையாக வளைய வந்தாள் . கவினின் காதலுக்கு பாத்திரமானாள். நல்லபடி கல்யாணமும் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.

    கவினின் பெற்றோருக்கு அவளை பிடித்திருந்தாலும் அவளின் 3/4 th ம், லெ கின்சும், கை இல்லாத டாப்ஸ் ம் பிடிக்கலை ; சரி, ஏதோ சின்னஞ்சிறுசு கல்யாணம் ஆனதும் சரி ஆகிவிடும் என்று நினைத்தார்கள். ஆனால் அவர்கள் நம்பிக்கை இல் மண் விழுந்தது.

    அவள் எப்போதும் போலவே வளைய வந்தாள் . கவினுக்கும் அதில் ஏதும் பிரச்சனை இருப்பதாகத் தெரியவில்லை . அதனால் ஏதும் சொல்ல முடியாத அவனின் பெற்றோர், மைசூருக்கு பயணமானார்கள். இப்படியே நாட்கள் உருண்டு ஓடின. ஒருமுறை அவர்கள் லீவுக்கு மைசூர் சென்றார்கள். அவர்கள் இருவரும் பிரியமாய் இருந்த போதும் குழந்தை செல்வம் இல்லாததால் பெற்றவர்களின் சொல்படி, ஒரு டாக்டரை பார்க்க எண்ணினார்கள்.

    அப்போது எதேர்ச்சையாக வெளிநாட்டில் இருந்து லீவுக்கு வந்திருந்த தூரத்து சொந்தமான ஒரு டாக்டர் இவங்க வீட்டுக்கு வந்தார்.அவர் கவினின் சிறுவயது தோழனும் கூட. அவரிடம் இவர்கள் பேச்சு வாக்கில் ஒரு மருத்துவரை சந்திக்க வேண்டும் என்று சொன்னார்கள்.அவர் சிரித்த படியே நான் ஒன்று சொல்கிறேன் அது படி ஒரே ஒரு மாதம் செய்து பாருங்கள், பலன் இல்லாவிட்டால் அப்புறம் நீங்க டாக்டரை பார்க்கலாம் என்றார். அவர் ஒரு மனோதத்துவ டாக்டர்.

    இவர்களும், இத்தனை நாள் போயாச்சு இன்னும் 1 மாதம் தானே, இவன் ஏதோ சொல்கிறான், செய்து தான் பார்க்கலாமே என்று நினைத்து , அப்படி என்ன செய்யணும் என்றார்கள்.அவரும் நான் சில கேள்விகள் கேட்கிறேன் அதற்கு முதலில் பதில் சொல்லுங்கள் என்றார். இவர்களும் ஒப்புக்கொண்டார்கள்.

    "கவின், உங்கள் ஆபீஸ் இல் உனக்கு நைட் ஷிப்ட் இருக்கா? "

    " ஒ...இருக்கே, நான் தான் வேண்டாம் என்று போவதில்லை " என்றான் கவின்.

    "நேரம் எப்படி" ? என்றார் டாக்டர்.

    " இரவு ஒரு 8 லிருந்து காலை 5 -30 வரை" என்றான் கவின்.

    "cool ! இனி 1 மாதத்துக்கு நீ நைட் ஷிப்ட் ஒப்புக்கொள்" என்றார் டாக்டர்.

    "என்னடா சொல்கிறாய்"? என்று கவினின் அம்மா கேட்டார்கள்.

    " இருங்க அம்மா, கொஞ்ச நேரம் " என்றார் டாக்டர்.

    அந்த அம்மாள் தலையில் அடித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்கள்.

    தொடரும்............
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

  • #2
    Re: Latest treatement by Krishnaamma

    டாக்டர் தொடர்ந்தார், "லதா, , நீங்கள் இன்று முதல் சுடிதார் போன்ற உடல் முழுவதும் மூடும் உடைகளை அணியுங்கள். வீட்டிலும் நைட்டி போன்றவைகளை உடுத்துக்கொள்ளுங்கள். விட்டால் 9 கஜம் உடுத்திக்கொள்ளுங்கள் என்று கூட சொல்லுவேன் ................வேண்டாம்,இப்போதைக்கு சுடிதார் ஓகே அப்புறம், உங்களுக்கு ஆபீஸ் நேரம் என்ன? " என்றார்.

    அவள் .."எனக்கு...காலை 8 மணி முதல் மாலை 5.30 வரை" என்றாள் .

    "பெர்பெக்ட்"..........."லதா, .நீங்கள் இப்படியே தொடரலாம். மேலும், இந்த ஒரு மாதமும், அம்மா அப்பா இருவரும் உங்களுடனேயே இருப்பார்கள். முடிந்தால் லதா உங்க அப்பா அம்மாவையும் உங்க வீட்டுக்கு வரசொல்லி விடுங்கள். வீட்டு வேலைக்கு ஆள் .போடுங்கள். அப்புறம் ரொம்ப முக்கியமானது NO TV AND NO FACE BOOK ! ஆபீஸ் விஷயம் தவிர, வேண்டுமானால் நெட் இல் செய்திகள் மட்டும் பாருங்கள். " என்றார் டாக்டர்.

    "என்னடா இதெல்லாம் " என்று கவினின் அப்பா கேட்டதற்கு, "அது ஒன்றும் இல்லை மாமா , இவர்கள் Space Space என்று சொல்லி சொல்லி, யாரும் அருகில் இல்லாமல் இருக்கிறார்கள், தனிமை முதல் ‘எல்லாமே’ தாராளமாய் கிடைக்கிறது..........எப்போதும் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து சலித்துப்போய் விடுகிறது மனது......அதனால் எல்லாமே ஒரு எந்திர கதி இல் நடக்கிறது. அன்பும் காதலும் கொஞ்சம் 'இலை மறை காய்மறைவாக' இருக்கும் போது ,அதில் ஒரு பற்று உண்டாகும். எல்லாமே 'ஓபன்' ஆக இருக்கும்போது ச்சே ! இவ்வளவு தானா என்று தோன்றுவதன் விளைவுதான் நீங்கள் .பார்ப்பது."

    " அந்த காலத்தில் மனைவி இடம் பேசக் கூட நேரம் பார்க்கணும், யாராவது கூட இருந்து கொண்டே இருப்பார்கள். இப்போ, தனியாக flat இல் இருக்கிறார்கள். எப்போ வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற சுதந்திரமே இப்போ இவர்களுக்கு எதிரியா போச்சு. மேலும் இப்போ நெட் இல் எல்லாத்துக்கும் வீடியோ வந்தாச்சு.கண்டதையும் பார்த்து பார்த்து இவ்வளவு தானா என்கிற சலிப்பு வந்து விட்டது நிறைய இளைஞர்களுக்கு.அதுக்குத்தான் இருவரையும் ஒருமாதம் இப்படி இருக்க சொன்னேன்."

    " இது ஒரு ஆரோக்கியமான பிரிவு, வாரக்கடைசிக்கு மனம் ஏ ங்கும், நீங்க எல்லோரும் கூட இருப்பதால், முன் போல இஷ்டப்படி இருக்க முடியாது, ஒரு ஒழுங்கு முறை வரும்" என்று பெரிய லெக்சரே அடித்து விட்டார் டாக்டர் பிரபு.

    இது சரிதானோ என்று அவர்கள் எல்லோருக்குமே தோன்றியது.அவர்கள் அப்படியே செய்து சக்சஸ் ஆனார்கள் என்று நான் சொல்லணுமா என்ன ?

    By Krishnaamma
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment

    Working...
    X