Announcement

Collapse
No announcement yet.

'மனிதாபிமானம்'...by Krishnaamma :)

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 'மனிதாபிமானம்'...by Krishnaamma :)

    ஒரு வேண்டுகோள் : நான் கடைகள் எழுத ஆரம்பித்து இருக்கேன், இங்கு அவைகளை NVS மாமாவின் அனுமதியுடன் பகிர்கிறேன். பொறுமையாக படிப்பவர்கள், ஒரு வரியாவது பின்னுட்டம் போடுங்கள், அது எனக்கு 'டானிக்' போல இருக்கும். உங்களின் மேலான விமரிசனங்களும் வரவேற்கப்படுகின்றன

    'மனிதாபிமானம்'

    ஒரு சிறிய டவுனிலிருந்து மகன் வீட்டுக்கு வந்திருந்த சிகவாமி அம்மாளும் பக்கத்து வீடு பார்வதி அம்மாளும் பேசிக்கொண்டிருந்தனர். யாரோ ஒருவர் பேசக்கிடைத்தது சிவகாமிக்கு ரொம்ப சந்தோஷம்.

    "இந்த வீடு பரவாஇல்லை, ஏதோ அக்கம் பக்கம் பேசுவதற்கு ஏதோ அவசரம் ஆத்திரம் என்றால் ஒரு குரல் கூப்பிட வாகாக மனிதர்கள் இருக்கிறீர்கள், என் சின்ன பிள்ளை flat இல் இருக்கிறான். அங்கு பக்கத்து flat இல் இருப்பது யார் என்று கூட நமக்கு தெரியாது....தப்பித்தவறி யாரையாவது பார்த்தால் ஒரு சிரிப்பு ஒரு விசாரிப்பு கூட கிடையாது. சின்ன பசங்க கூட போன் ஐ கை இல் வைத்துக்கொண்டு, காதில் எதையோ மாட்டிக்கொண்டு தலையை ஆட்டிக்கொண்டு, தப்பித்தவறி கூட அடுத்தவர்கள் பேச்சு நம் காதில் விழவேண்டாம் என்பது போல தனியாகவே இருக்கிறார்களே ?....ஏன் இப்படி? "

    "மகனும் மருமகளும் ஆபீஸ் போவதால், flat வாசலில் கிரில் கேட் வேறு. ...ஜெயில் மாதிரி...எப்பவும் பூட்டியே வைக்க சொல்வார்கள். 'யாராவது வந்தால் கிரில் கதவை திறக்காமலேயே பேசு, போஸ்ட் வந்தாலும் அந்த கதவின் இடுக்கு வழியே வாங்கு....பத்திரம் , பத்திரம்.....இது நீ இருக்கும் கிராமம் போல இல்லை ' என்று தினமும் ஒரு நூரு முறையாவது சொல்லிவிட்டுத்தான் கிளம்புவார்கள்......."

    அவர்கள் சொல்வதும் வாஸ்தவம் தான், தினமும் பேப்பரில் தான் பார்க்கிறோமே, இங்கு கொள்ளை அங்கு கொலை என்று......மாலை ஆனால் பறவைகள் போல கூட்டில் அடைகிறார்கள்..............மறுபட்டியும் கம்ப்யூட்டர் , போன் , இல்லாவிட்டால் டிவி என்று .என்ன வாழ்க்கை இது?.... நாம எதைத்தேடி ஓடறோம் என்றே இவர்களுக்கு புரிவதில்லை.........மனிதர்களுடன் பேசவே பேசாமல், எந்த மனித உறவுகளுமே இல்லாமல் இவர்கள் வெறும் மெஷின்களுடன் என்ன வாழ்க்கை வாழுகிறார்கள்?"

    "அங்கு இரண்டு நாளிலேயே எங்களுக்கு மூச்சு முட்டிவது போல ஆகிவிட்டது............"உங்களுக்கு எப்போ எங்களைப் பார்க்கணும் என்று தோன்றுகிறதோ அப்போ நம்ப வீட்டுக்கு வந்துடுங்கப்பா" என்று சொல்லி கிளம்பிவிட்டோம் நாங்கள் என்றாள்.

    "அப்புறம் இவனும் மருமகளும் கூப்பிட்டதால் இங்கு வந்திருக்கோம், நீங்க எப்படி இங்கேயே இருகீங்க?" என்று சிரித்தபடி பார்வதி அம்மாவை பார்த்து கேட்டாள்.

    அதற்கு பார்வதியும், "எனக்கும் முதலில் கொஞ்சம் கஷ்டமாக த்தான் இருந்தது, எனவே தான் அதுபோல இருக்கும் flat களிலிருந்து இது போல வீட்டுக்கு மாறி வந்து விட்டோம். இங்கு கொஞ்சம் பரவாஇல்லை, அக்கம் பக்கம் நீங்க சொல்வது போல பார்க்க பேசி பழக மனிதர்கள் உண்டு " என்றாள்.

    " ம்... எங்க ஊரில் முன்பு போல வாசல் திண்ணைகள் இல்லையே தவிர, அக்கம் பக்கம் பேச கொள்ள, ஒரு பண்டிகை பருவம் என்றால் நாம் சமைத்ததை அடுத்த வீடுகளுக்கு கொடுத்து அனுப்புவோம். அதக்கு ஒரு நாலு பேராவது இருப்பார்கள். அத்தை, மாமா, அக்கா , அண்ணா என்று கூட இருப்பவர்களை முறை சொல்லி கூப்பிட்டு பழகுவோம்.........ஒரு தபால்காரர் வந்தால் கூட உட்காரவைத்து ரெண்டு வார்த்தை பேசி, ஒரு டம்ளர் மோர் கொடுத்து அனுப்புவோம். யார்க்கவது ஒன்று என்றாள் எலோரும் ஓடுவோம்..."

    " ஆனால் இன்று, அடுத்தவன் ரோட்டில் அடிபட்டு இருந்தால் கூட பார்த்துக்கொண்டே செல்பவர்கள் தானே அதிகமாய்ப் போனார்கள்...........அவங்களுக்கு உதவக்கூட ஆள் இல்லையே.....இதுக்கும் இப்போ எல்லோரும் கையில் போன் ஐ வைத்துக்கொண்டு திரிகிறார்கள்........கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல் போச்சு இன்றைய மனிதர்களிடம்...............இப்படி இருந்தால் எப்படி நாடு விளங்கும்? எங்கிருந்து மழை வரும்..." என்று வருத்தத்துடன் அங்கலாய்த்தாள் சிவகாமி அம்மாள்.

    பார்வதி அம்மாளுக்கு என்ன சொல்வது என்று தெரியலை. பிறகு " நீங்க சொல்வது வாஸ்த்தவம் தான், நாம் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே, கொஞ்சம் கொஞ்சமாய் உறவுகள் அவற்றின் நற்பண்புகள் எல்லாம் குறைந்து கொண்டே வருகிறது.... நம் உணவுகள், பண்புகள், கலாச்சாரம் எல்லாவற்றையும் இந்த மேற்கத்திய மோகம் என்கிற வெள்ளம் அடித்து சென்றுவிடும் போல இருக்கு.........எல்லோரும் பல்லக்கில் ஏற ஆசைப்படுவதன் விளைவு இது....தனக்கு தகுதி இருக்கோ இல்லியோ, ஒரேநாளில் பணக்கரனாகிடணும் , என்கிற எண்ணம் எல்லோருக்குமே வந்து விட்டது தான் காரணம் என்று நினைக்கிறேன்....." என்றாள்.

    இவர்கள் இப்படி பேச ஆரம்பித்ததிலிருந்து சிவகாமி அம்மாளின் மருமகள் லக்ஷ்மி, வாசலில் கீரைக்கரியுடன் பேரம் பேசிக்கொண்டிருந்தாள். ஒருவழியாக கீரை வாங்கிக்கொண்டு உள்ளே வந்தவளை " அம்மா லக்ஷ்மி, அந்த கீரையை இப்படிக்கொடு, நான் ஆய்ந்து வைக்கிறேன்" என்றாள் சிவகாமி.

    " வேண்டாம் ம்மா, நான் பார்த்துக்கறேன்" என்றாள் லக்ஷ்மி.

    " பரவாஇல்ல்லை சும்மத்தனே இருக்கேன், கொடு இப்படி " என்றாள் மருமகளிடம்.

    அவளும் கீரைக் கட்டுகளை இவர்களின் அருகில் கொண்டுவைத்துவிட்டு, பார்வதி அம்மாளை பார்த்து ,
    " லதாவும், கேசவனும் ஆபீஸ் போயாச்சா ஆண்டி'? என்றாள்.

    பார்வதியும் சிரித்தவாறே," ம்.. போயச்சுமா, உங்க மாமியாரை பார்த்தேன் அது தான் வந்துட்டேன் " என்றாள்.

    உடனே சிவகாமியும், " இங்க உறவு முறைகள் கூட ரெண்டு தான் ஆண்டி அங்கிள்....என்னவோ போங்கோ, எதுவும் மனசுக்கு பிடிக்கலை".என்றபடி கீரையை ஆயத் துவங்கினாள். வாசலில் இன்னும் கீரக்காரி காத்திருக்கவே,

    " என்னமா, இன்னும் கீரைக்காரிக்கு பணம் கொடுக்கலையா, அவள் காத்திருக்காளே, எப்பவும் பர்சுடன் தானே காய் வாங்க போவாய் ? " என்றாள் சிவகாமி.

    அதற்கு, " இல்லம்மா, அவளுக்கு ஜுரம் அடிப்பது போல இருக்காம், தலையை சுற்றுகிறதாம் , அது தான் ஒரு நாலு இட்லி சாப்பிட்டுவிட்டு, இந்த மாத்திரையை போட்டுக்கோ, இதுக்கும் கேட்காவிட்டால், காய் விற்று விட்டு வரும்போது, தெருக்கோடி டாக்டர் அங்கிள் , கிளினிக் முடிந்து வந்திருப்பார், அவரிடம் போ என்று சொன்னேன் . அது தான் காத்திருக்கா" என்று உள்ளிருந்து பதில் சொல்லியபடிய வந்த லக்ஷ்மி இன் கைகளில் நாலு இட்லி வைத்த தட்டும் குடிக்க ஒரு டம்ளர் தண்ணீரும் இருந்தது.

    " இதோ கொடுத்து விட்டு வரேன் ம்மா" என்றபடி சென்றாள்.

    இதைப்பார்த்த சிவகாமிக்கு மனம் நிறைந்தது, தான் பயந்த பதி இன்னும் மனிதாபிமானம் பூரணமாய் சாகவில்லை என்கிற நினைப்பே மனதை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. பார்வதியை பார்த்து சந்தோஷமாய் சிரித்தாள். என்றாலும், கீரைகாரியை அனுப்பிவிட்டு உள்ளே வந்த லக்ஷ்மி இடம்,

    " என்னமா 4 கத்தை கீரைக்கு அத்தனை நேரம் போராடுன, பேரம் பேசின, 'பொசுக்குனு' நாலு இட்டிலி, சாம்பார், மாத்திரை என்று கொடுத்துட்டே" என்றாள்.

    அதற்கு லக்ஷ்மி, " அது வியாபாரம் மா, இது மனிதாபிமானம், ரெண்டையும் குழப்பிக்க கூடாது " என்று சொலிவிட்டு, ஆய்ந்த கீரைகளை உள்ளே கொண்டு சென்றாள் இயல்பாக.

    சிவகாமியும் பார்வதியும் மன மகிழ்ச்சியாக சிரித்தனர். "இது போல சிலரால் தான் இன்னும் மழை பெய்கிறது" என்று பார்வதி சொன்னாள்.... சிவகாமியும் தன் மருமகளின் இயல்பான ஈகை குணத்தால் மனம் நிறைந்தாள்.

    கிரிஷ்ணாம்மா
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

  • #2
    Re: 'மனிதாபிமானம்'...by Krishnaamma

    நாட்டு நடப்பை கதையாய் படிக்கும் போது மனதுக்கு இதமாய் - ஒரு திருப்தி
    உண்டாகிவிட்டது. இது கதை அல்ல. நிஜம். மிக மிக நன்றி. தொடரட்டும் உங்கள்
    கதை. ஜி ஜி மூர்த்தி அய்யர்

    Comment


    • #3
      Re: 'மனிதாபிமானம்'...by Krishnaamma

      Sabahash such posts are the need of the hour

      Comment


      • #4
        Re: 'மனிதாபிமானம்'...by Krishnaamma

        Originally posted by ggmoorthyiyer View Post
        நாட்டு நடப்பை கதையாய் படிக்கும் போது மனதுக்கு இதமாய் - ஒரு திருப்தி
        உண்டாகிவிட்டது. இது கதை அல்ல. நிஜம். மிக மிக நன்றி. தொடரட்டும் உங்கள்
        கதை. ஜி ஜி மூர்த்தி அய்யர்

        மிக்க நன்றி மாமா..............உங்களின் பின்னூட்டம் மனதுக்கு ரொம்ப சந்தோஷமாய் இருக்கு...... தொடர்ந்து எழுதுகிறேன் !
        என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

        http://eegarai.org/apps/Kitchen4All.apk

        http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

        Dont work hard, work smart

        Comment


        • #5
          Re: 'மனிதாபிமானம்'...by Krishnaamma

          Originally posted by soundararajan50 View Post
          Sabahash such posts are the need of the hour

          மிக்க நன்றி மாமா!
          என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

          http://eegarai.org/apps/Kitchen4All.apk

          http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

          Dont work hard, work smart

          Comment


          • #6
            Re: 'மனிதாபிமானம்'...by Krishnaamma

            நன்றாக எழுத வருகிறது . தொடருங்கள் .

            Comment


            • #7
              Re: 'மனிதாபிமானம்'...by Krishnaamma

              Originally posted by ggmoorthyiyer View Post
              நன்றாக எழுத வருகிறது . தொடருங்கள் .
              நன்றி !.........தொடருகிறேன், ஊக்கத்துக்கு நன்றி மாமா
              என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

              http://eegarai.org/apps/Kitchen4All.apk

              http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

              Dont work hard, work smart

              Comment

              Working...
              X