Announcement

Collapse
No announcement yet.

ருண விமோசன நரசிம்ஹ ஸ்தோத்திரம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ருண விமோசன நரசிம்ஹ ஸ்தோத்திரம்


    'ருண முக்தயே' - 'கடன்கள் ஒழிய '-ருண விமோசன நருசிம்ஹா ஸ்தோத்திரம் !


    தேவதா கார்ய ஸித்யர்த்தம் ஸபா ஸ்தம்ப ஸமுத்பவம்
    ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

    தேவதைகளின் காரியத்தை ஸாதிப்பதற்காக ஹிரண்யகசிபுவின் சபையில் தூணிலிருந்து வெளிப்பட்டவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை
    கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

    லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வர தாயகம்
    ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே


    மகாலக்ஷ்மியை இடப்பாகத்தில் அணைத்துக் கொண்டு, தன்னை வழிபடும் பக்தர்களுக்கு விரும்பிய வரங்களைத் தருபவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

    ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம்
    ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

    ஹிரண்யகசிபுவின் குடலை மாலையாக அணிந்தவரும், சங்கம், சக்ரம், தாமரை, ஆயுதம் இவைகளை கைகளில் தாங்கியவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

    ஸ்மரணாத் ஸ்ர்வ பாபக்னம் கத்ரூஜ விஷ நாசநம்
    ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே


    நினைத்த உடனேயே அனைத்து பாபங்களையும் போக்கடிப்பவரும், கொடிய விஷத்தை முறியடிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

    ஸிம்ஹாநாதேந மஹதா திக்தந்தி பயநாசனம்
    ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே


    மிக பயங்கரமான சிம்ஹத்தின் கர்ஜனையால் எட்டுத் திசையிலும் உள்ள திக்கஜங்களுக்கும் பயத்தை போக்கடிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

    ப்ரஹ்லாதவரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரணம்
    ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே


    பக்தனான ப்ரஹலாதனுக்கு அனுக்ரஹம் செய்தவரும், மஹாலக்ஷ்மியுடன் கூடியவரும், அரக்கர் தலைவனான ஹிரண்யகசிபுவை சம்ஹரித்த மஹாவீரருமான,ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

    க்ரூரக்ரஹை பீடிதானாம் பக்தாநாம் பயப்ரதம்
    ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே



    உக்ரமும் கோரமும் உடைய கிரஹங்களால் பீடிக்கப்பட்ட பக்தர்களுக்கு அபயம் அளிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.


    வேத வேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதி வந்திதம்
    ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே


    வேதங்கள், உபநிஷதங்கள், யாகங்கள் முதலியவைகளுக்கு தலைவரும், ப்ரம்மா, ருத்ரன் முதலியவர்களால் வணங்கப்பட்டவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

    ய: இதம் படதே நித்யம் ருணமோச ந ஸம்ஜிதம்அந்ருணீ ஜாயதே ஸ்த்யோ தநம் சீக்ரமவாப் நுயாத்

    யார் இந்த ருணமோசனம் என்ற பெயருடைய ஸ்லோகத்தை தினம் படிக்கின்றாரோ அவர் விரைவிலேயே கடனிலிருந்து விடுபட்டவனாகி மேலும் சகல செல்வத்தையும் அடைவார்.

    பூமி நீளா சமேத ஸ்ரீல்க்ஷ்மி நரஸிம்ம ஸ்வாமினே நம:

    ரொம்ப சக்தி வாய்ந்த சுலோகம் இது. தினமும் சொல்லுவதால் தீராத கடன்கள் தீரும். ரொம்ப கஷ்டம் என்றால் ஒரே நாளில் 108 முறை ஜபித்து கைமேல் பலன் காணலாம்
    Last edited by bmbcAdmin; 21-05-15, 17:19.
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

  • #2
    Re: 'ருண முக்தயே' - 'கடன்கள் ஒழிய '- ஸ்ரீ லெக்ஷ்மி &

    இதுதான் அந்த சுலோகம். இது தமிழில் கிடைக்கவில்லை . ஆனால் இதைப்படிக்க கூட வேண்டாம் தினமும் கேட்டாலே போதும், கடன்கள் ஆச்சர்யப்படும் விதத்தில் மறையும். இது சத்தியம், நானே அனுபவித்து இருக்கேன் பலருக்கும் சொல்லி இருக்கேன். ரொம்ப அதிக கடன் கழுத்தை நெரிக்கிறது என்றால், ஒரே நாளில் சொல்ல நல்ல பலன் தெரியும். முயன்று பாருங்கள்.


    Last edited by krishnaamma; 19-05-15, 15:47.
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment


    • #3
      Re: 'ருண முக்தயே' - 'கடன்கள் ஒழிய '- ஸ்ரீ லெக்ஷ்மி &

      மேலே கொடுத்துள்ள ஸ்லோகத்தின் தமிழ் வடிவம்...இன்று ஏதோ தேடும்போது கிடைத்தது

      கடன் தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? கடன்கள் நீண்ட காலமாக தீர்க்கப்பட முடியாமல் உள்ளதா? கடன் கஷ்டங்களை நீக்கும் கீழ்க்கண்ட நரசிம்ம ஸ்தோத்திர பொருளை தினமும் சொல்லி வாருங்கள். நிச்சயமாக கடன் தொல்லை தீரும்.

      தேவகாரியங்கள் பூரணத்துவம் பெற சபா மண்டபத்தில் அவதரித்தவரே! மகாவீரரே! என் கடன்களிலிருந்து என்னை விடுவிக்கும்படி வேண்டிக்கொண்டு நமஸ்கரிக்கின்றேன். மகாலட்சுமியால் தழுவப் பெற்ற இடது பாகத்தை உடையவரே! பக்தர்கள் கேட்கும் வரத்தைத் தருபவரே!

      மகாவீரரே! என் கடன்களிலிருந்து என்னை விடுவிக்கும்படி பிரார்த்தித்துக் கொண்டு நமஸ்கரிக்கின்றேன். நரம்புகளை மாலையாக அணிந்து கொண்டவரே! சங்கு, சக்கரம், தாமரை, ஆயுதம் இவைகளைத் தரித்துக் கொண்டவரே! மகாவீரரே! என்னைக் கடன் உபாதையிலிருந்து காத்தருள நமஸ்கரிக்கின்றேன்.

      நினைத்த மாத்திரத்திலேயே பாபங்களை நீக்குபவரே! கத்ரூபுத்திரர்களான நாக விஷங்களால் ஆபத்து ஏற்படாமல் காப்பவரே! மகாவீரரே! கடன் தொல்லையிலிருந்து விடுபட உம்மை நமஸ்கரிக்கின்றேன்.

      சிங்கத்தின் கர்ஜனையைக் கேட்டால் யானைகள் அஞ்சி ஓடும். அப்பேர்ப்பட்ட பெரிய பயங்களையே போக்கும் மகாவீரரே! என் கடன் தொல்லைகளிலிருந்து நான் விடுதலை பெற உம்மை நமஸ்கரிக்கின்றேன்.

      பிரகலாதனுக்கு வரம் அளித்தவரே! லட்சுமிபதியே அசுர வேந்தனான இரண்யகசிபுவின் நெஞ்சைக் கிழித்தவரே! மகாவீரரான நரசிம்மரே! என் கடன்களிலிருந்து விடுபட உம்மை நமஸ்கரிக்கின்றேன்.

      குரூரமான கிரக பார்வையால் கஷ்டத்திலிருக்கும் பக்தர்களுக்கு உபயம் தருபவரே! மகாவீரரான நரசிம்மரே! கடன் உபாதையிலிருந்து நிவாரணம் பெற உம்மை நமஸ்கரிக்கின்றேன்.

      வேதம், உபநிஷத் யக்ஞம் இவைகளின் ஈஸ்வரனே பிரம்மா, ருத்ரன் இவர்களால் நமஸ்கரிக்கப்பட்டவரே! மகாவீரரான நரசிம்மரே! கடன் தொல்லைகளிலிருந்து விடுபட உம்மை நமஸ்கரிக்கின்றேன்.

      ருணமோசனம் என்ற இந்த ஸ்தோத்திரத்தினை தினமும் மனமுருகிப் படிப்பவருக்கு எவ்வளவு பெரிய கடனும் விரைவில் சூரியனைக் கண்ட பனிமலையின் நிலையை அடையும். அதோடு மட்டுமல்லாமல் நியாயமான முறையில் சம்பத்தும் சேரும்.

      ஸ்ரீமத் வாதிராஜ சுவாமிகளால் நரசிம்ம புராணத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட இந்த ஸ்லோகம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரின் பூரண அனுக்கிரகத்தையும் தரக் கூடியது. ஒவ்வொரு ச்லோகத்துக்கும் சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்க வேண்டும்.

      தமிழ் பாடல்கள்
      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

      http://eegarai.org/apps/Kitchen4All.apk

      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

      Dont work hard, work smart

      Comment


      • #4
        Re: 'ருண முக்தயே' - 'கடன்கள் ஒழிய '- ஸ்ரீ லெக்ஷ்மி &

        தங்களுடைய தலைப்பு தவறு.இதன் தலைப்பு "ருண விமோசன நருசிம்ஹா ஸ்தோத்திரம் " என்பதாகும்

        Comment


        • #5
          Re: 'ருண முக்தயே' - 'கடன்கள் ஒழிய '- ஸ்ரீ லெக்ஷ்மி &

          ஸ்ரீ நரசிம்ஹருக்கு நாளை என்பதே கிடையாது. பக்த்தர்களுக்கு அவ்வப்பொழுதே அருள் பொழியும் பெருமாள்

          Comment


          • #6
            Re: 'ருண முக்தயே' - 'கடன்கள் ஒழிய '- ஸ்ரீ லெக்ஷ்மி &

            Yes Sir. You are right. Here in Hyderabad, at the famous Chilkur Balaji Temple publication,"VAK" this sloka is published in every issue to help Bhakthas study,learn and recite to get relief from debts.
            It is a powerful stotra.
            Varadarajan

            Comment


            • #7
              Re: 'ருண முக்தயே' - 'கடன்கள் ஒழிய '- ஸ்ரீ லெக்ஷ்மி &

              Originally posted by P.S.NARASIMHAN View Post
              தங்களுடைய தலைப்பு தவறு.இதன் தலைப்பு "ருண விமோசன நருசிம்ஹா ஸ்தோத்திரம் " என்பதாகும்

              நன்றி மாமா, தலைப்பை மாற்றிவிட்டேன்
              .
              .
              .
              மேலே உள்ளதை மாற்ற முடியலை, ஸ்லோகத்துக்கு மேலே உள்ளது மட்டும் மாறிவிட்டது
              Last edited by krishnaamma; 21-05-15, 09:54.
              என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

              http://eegarai.org/apps/Kitchen4All.apk

              http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

              Dont work hard, work smart

              Comment


              • #8
                Re: ருண விமோசன நரசிம்ஹ ஸ்தோத்திரம்

                Thanks mama, for helping me in changing the correct heading to this thread
                என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                http://eegarai.org/apps/Kitchen4All.apk

                http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                Dont work hard, work smart

                Comment

                Working...
                X