Announcement

Collapse
No announcement yet.

கோலம் போடுவதன் காரணம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கோலம் போடுவதன் காரணம்



    நம் மக்கள் ஒரு காரியத்தைக் காரணம் இல்லாமல் செய்யமாட்டார்கள், எனினும் நாம் ஒரு செயலைச் செய்தால், அதை நாம் யோசிப்பது இல்லை, ஏன் செய்கிறோம்?, எதற்காகச் செய்கிறோம்?, என்று சிந்தித்தால் அதற்கான விடை வெளிப்படும். நாம் அன்றாடம் செய்யும் பல விசயங்களிலேயே பல அரிய காரணங்கள் அடங்கி உள்ளன, ஆனால் நாம் அதைத் தெரிந்து கொள்ள முயல்வது இல்லை. இதனால் நம் நாகரிகம் பல மாறுதல்களைக் கண்டுள்ளது.
    Break Image


    நாம் கோலத்தைப் பார்த்திருப்போம், பெண்கள் அதைப் போட்டும் இருப்பார்கள் ஆனால் கோலம் போடுவதன் காரணத்தை பெரும்பாலர் அறிந்திலர். இப்போது கோலம் போடுவதன் காரணத்தை அறிவோம்.
    Break Image




    விடியற்காலையில் சூரியன் விழிப்பதற்கு முன்னதாகவே நம் வீட்டுப் பெண்கள் விழித்து வாசலைச் சுத்தப்படுத்தி மாட்டுச் சாணத்தைத் தெளித்துக் கோலம் போடுவார்கள், மாலையிலும் கோலம் போடுவார்கள் இது நம் பண்பாட்டிற்குரியது இன்றும் நாம் பின்பற்றி வருகின்றோம். பூக்களை நெருக்கமாக இணைத்துக் கட்டுவது போல, தெருக்களில் வீடுகள் இணைத்துக் கட்டப்பட்டு இருக்கும். அவ்வீடுகளின் வாசலில் போடப்பட்டு இருக்கும் கோலம் நடக்க வழி இல்லாமல் தெருவையே மறைத்து, பார்ப்பதற்கு ஒரு அழகான காட்சியை நமக்கு அளிக்கும்.
    Break Image


    ஆனால் அந்தக் கோலத்தை ஏன் போடுகிறோம்?, எதற்காகப் போடுகிறோம் என்று நமக்குத் தெரிந்திருக்க இயலாது. இனி அதைத் தெரிந்துக்கொள்வோம்.
    Break Image


    பெண்கள் போடும் கோலங்கள் பார்த்து ரசிக்கக் கூடிய கோடுகள் மட்டும் அல்ல, ஒவ்வொரு கோலத்திற்குள்ளும் பல அரிய அர்த்தங்கள் மறைந்து இருக்கின்றன. பெண்கள் பொதுவாகப் புள்ளி வைக்காமல் கோலத்தைப் போட விரும்புவது இல்லை, கோலம் என்பது கோடுகளால் போடும் ஒரு வரைபடம் தானே, கற்பனைக்குத் தகுந்தவாறு சுதந்திரமாகச் சித்திரங்களைத் தீட்டலாமே எதற்குப் புள்ளிகள் என்று நாம் சிந்திக்கலாம்.
    Break Image


    ஆனால் அந்தப் புள்ளிகள் சுதந்திரத்தைத் தடை செய்யும் முற்றுப் புள்ளிகள் அல்ல, நாம் நம் வாழ்க்கையை எப்படி வேண்டுமென்றாலும் வாழலாம், என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம், சந்தோசம் மட்டும் தான் முக்கியமென்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ஆனால் அது வாழ்க்கை அல்ல, அது மிருக வாழ்க்கையாகும். வாழ்க்கைக்கு ஒரு நெறிமுறை ஒழுக்கம் என்பது வேண்டும் அப்போதுதான் அது வாழ்க்கையாக இருக்கும்.
    Break Image


    ஒழுக்கம் என்பது எப்படி ஒரு மனிதனின் வாழ்க்கையை நிர்ணயிக்கிறதோ அதே போலத்தான் புள்ளிகளும், கோலத்தை அர்த்தமுடையதாக வைத்திருக்கின்றன. புள்ளிகள் கோலத்தின் கோடுகளைத் தாறுமாறாக வளரவிடாது நெறிப்படுத்தி ஒரு முழுமையான வடிவமாக்கி ஒரு உருவம் தருகின்றன. புள்ளிகளை மீறிய கோடுகள் அலங்கோலங்கலாகும். புள்ளிகள் என்பது ஒழுக்கத்தின் மறுவடிவம் நம் மக்கள் எதைச் சொல்ல வந்தாலும் ஒழுக்கத்தை மையப்படுத்திச் சொல்வார்களே தவிர அதற்கு மாறாக எதையும் சொல்ல மாட்டார்கள், காரணம் இந்தப் பிரபஞ்சமானது ஒரு வித ஒழுக்கத்தில் தான் அதாவது ஒரு கட்டுப்பாட்டில் தான் கால காலமாக நெறி தவறாமல் இயங்கி வருகிறது. வானத்தில் இருக்கின்ற எதோ ஒரு கிரகம் தனக்கென்று உள்ள நெறியை அதாவது சுற்றுப் பாதையை விட்டுத் தாறுமாறாக இயங்குகிறது என்று வைத்துக் கொள்வோம் அது மற்ற கிரகத்தின் மீது மோதி அந்தக் கிரகத்தை அழிப்பதோடு மட்டுமல்ல தன்னையும் அழித்துக் கொள்ளும் எனவே ஒழுக்கம் மற்றும் நெறி என்பது இயற்கை வகுத்த விதி அந்த விதியை மீறுகின்ற போது அழிவு தான் நேரிடும் என்ற உண்மையை நாம் அறிய வேண்டும்.
    Break Image




    எனவே தான் நெறிப்பட்ட வாழ்க்கையை வலியுறுத்திச் சொல்ல வந்த தங்களது புறச்செயலில் கூட ஒழுங்கு படுத்தப்பட்ட நெறிமுறைகளை வலியுறுத்தினார்கள் நம் மக்கள் அதன் அடையாளம் தான் புள்ளிகளுக்குள் கட்டுப்பட்ட கோலம் என்பது. இன்று வீடுகளின் முன்னால் கோலங்களை பார்ப்பது அரிதாகி விட்டது அதனால் தான் மனிதனின் வாழ்க்கையில் ஒழுக்கம் என்பதும் அரிதாகிச் சிறிது சிறிதாகக் குறைந்து கொண்டே வருகிறது.
    Break Image


    கோலத்தில் வைக்கின்ற புள்ளிகளுக்கே இத்தனை காரணம் என்றால், கோலம் போடப் பயன்படுத்தும் பொருட்களில் எத்தனை காரணங்கள் மறைந்திருக்கக் கூடும். அரிசி மாவில் போடுகின்ற கோலம் சம்பிரதாய பழக்கம் மட்டுமல்ல சகல உயிர்களையும் தன்னுயிர் போல் பாவித்து அவைகளுக்கும் உணவளிக்கும் உயர்ந்த தானமாக கருதப்பட்டு வருகின்றது. உணவுக்கே அரிசி இல்லாத மனிதன் கோலம் போட அரிசிக்கு எங்கே போவான் அதனால் மாக்கோலத்தை வலியுறுத்தி, மண்ணால் கோலத்தை போடுகின்றனர்.
    Break Image


    அரிசியைத் தவிர்த்து மண்ணால் போடுகின்ற கோலத்திற்குக் கூட காரணம் இருக்கிறது. பால், பழம், மாமிசம் போன்ற உணவுகளை உண்டு வளருகின்ற இந்த உடம்பு ஒரு நாள் மண்ணோடு மண்ணாக போகப்போகிறது அதனால் தினசரி காலை நேரம் கோலம் போட அந்த மண்ணைத் தொடுகின்ற பெண் நானும் ஒரு நாள் இப்படித் தான் ஆவேன் என்று வாழ்வின் நிலையாமையை யோசித்தாள் என்றால் அவளுக்குப் பேராசை என்பது எப்படி வரும்? என்ற கருத்து சொல்லப்படுகின்றது.
    Break Image


    வண்ணங்களைத் தவிர்த்து மாவாலும் மண்ணாலும் கோலங்களைப் போடுவோம். வண்ணக்கோலம் மட்டுமே அழகானவை என்பது இல்லை. மாவாலும், மண்ணாலும் போடப்படும் கோலங்கள் தான் உண்மையான அழகை வெளிப்படுத்துகின்றன.

    வந்தாரை வாழவைக்கும் தமிழ்க்குலம்
    வரவேற்க வாசல் வருவதில்
    கோலமும் ஓர் அங்கம்
Working...
X