- "திருமழிசைப் பிரானின் திருச்சந்தவிருத்தம் - 001/120 : யார் நினைக்க வல்லரே ?
தனியன்கள் :
தருச்சந்தப் பொழில் தழுவு தாரணியின் துயர்தீர
திருச்சந்த விருத்தம் செய் திருமழிசைப்பரன் வருமூர்
சருச்சந்தும் காரகிலும் கமழ் கோங்கும் மணநாறும்
திருச்சந்தத்துடன் மருவு திருமழிசை வளம்பதியே.
உலகும் மழிசையும் உள்ளுணர்ந்து தம்மில்
புலவர் புகழ்க்கோலால் தூக்க - உலகு தன்னை
வைத்தெடுத்த பக்கத்தும் மாநீர் மழிசையே
வைத்தெடுத்த பக்கம் வலிது .
*****************************************************************
பூ நிலாய ஐந்துமாய்ப் புனற்கண் நின்ற நான்குமாய்
தீ நிலாய மூன்றுமாய்ச் சிறந்த காலிரண்டுமாய்
மீ நிலாயதொன்றுமாகி வேறு வேறு தன்மையாய்
நீ நிலாய வண்ணம் நின்னை யார் நினைக்க வல்லரே ?
பூ நிலாய ......................... பூமியில் உள்ள
ஐந்துமாய்ப் ..................... ஐந்து குணங்களுமாயும் ,
புனற்கண் நின்ற .............. நீரில் உள்ள
நான்குமாய் ..................... நான்கு குணங்களுமாயும் ,
தீ நிலாய ......................... நெருப்பில் உள்ள
மூன்றுமாய்ச் .................... மூன்று குணங்களுமாயும் ,
சிறந்த கால். .................... பலம் மிக்க காற்றில் உள்ள
இரண்டுமாய் .................... இரண்டு குணங்களுமாயும் ,
மீ நிலாயது ...................... ஆகாயத்தில் உள்ள
ஒன்றுமாகி ...................... ஒரு குணமாகவும் ,
வேறு வேறு தன்மையாய் .. வேறு வேறு வகையாகவும்
நீ நிலாய வண்ணம் .......... இருக்கின்ற தன்மை உள்ள
நின்னை .......................... உன்னை
யார் ................................ யார்
நினைக்க வல்லரே ? ....... நினைக்க முடியும் ?
--
V.Sridhar