Announcement

Collapse
No announcement yet.

Utsavam-Oorvalam-Purappadu

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Utsavam-Oorvalam-Purappadu

    Utsavam-Oorvalam-Purappadu

    அறுவடைக் காலம் முடிந்து பொருள்களை விற்று ஓரளவு ஓய்வுடன் இருக்கும் காலம் மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மாதங்கள். சிறிது சிறிதாக பனி விலகி, குளிர் குறைந்து, வெயிற்காலம் தொடங்கும் மாதங்கள். இடையில் இரண்டு மாதங்கள் வசந்த காலம். மலர்கள் அனைத்தும் மலரும் காலம். ஊரெங்கும் சைவ வைணவக் கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறும் காலம்.

    திருவிழாக்களின் முக்கிய நிகழ்வு உற்சவ மூர்த்தியின் வீதி உலா எனப்படும் புறப்பாடு ஆகும். வைணவத் திருத்தலங்களில் புறப்பாட்டில் பகவானின் முன்பு தமிழ் மொழியில் அமைந்துள்ள திவ்வியப் பிரபந்தப்பாடல்கள் கோஷ்டி எனப்படும் வைணவர்களால் குழுவாகப் பாடப்பெறும். புறப்பாட்டின் பின்னால் வடமொழி வேதம் ஓதப்பட்டு வரும். புறப்பாட்டின் முன் நாதஸ்வரம், தவில் போன்ற பலவித வாத்திய முழக்கங்களும், எக்காளம், பேரி எனப்படும் தோற்கருவி இன்னும் பல வாத்தியங்கள் வாசிக்கப்படும். கிராமக் கோயில்களில் ஆலி எனப்படும் மிகப் பெரிய பொம்மை உருவங்கள் உள்ளே புகுந்துள்ள மனிதர்களால் இயக்கப்பட்டு ஆடி வரும். சுவாமிக்கு இரு புறமும் ஸ்ரீபாதம் தாங்கிகள் எனப்படும் பல்லக்கு சுமப்பவர்கள் பலவித வாகனங்களில் எழுந்தருளும் சுவாமியை எழுந்தருளப்பண்ணுவர். கொடிகள், சாமரம், குடை ஆகியவை அணிவகுத்து வரும்,. இரவு விழாக்களில் தீப்பந்தம் கொண்டு வெளிச்சம் ஏற்படுத்தப்பட்டிருக்கும். இந்த புறப்பாடு என்பது முதுமை போன்ற பல காரணங்களால் கோயிலுக்குள் செல்ல இயலாதவர்களும் பகவானை கண்டு களிக்கவும், அனைவரும் கூடி இருந்து அனுபவிக்கும் ஒரு மகிழ்ச்சியின் வெளிப்பாடாகவும் அமையும்.
    இவையனைத்தையும் திருக்குறுங்குடி நம்பிராயர் சன்னிதியின் கோபுரத்தின் உள்வலது புறத்தில் கல்லில் வடித்திருப்பதைக் காணலாம். இச்சிற்பத்தில் பகவான் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பல்லக்கில் எழுந்தருளுகிறார். ஸ்ரீபாதம் தாங்கிகள் எழுந்தருளப் பண்ணுகிறார்கள். முன்புறம் பலவித வாத்தியங்கள் இசைக்கப்படுகிறன. குடை, சாமரம் ஆகியவை சமர்பிக்கப்படுகின்றன. நடனமாது ஒருத்தி முன்புறம் ஆடி வருகிறாள். ஒருவர் வீணை வாசிக்கிறார். தீப்பந்தங்கள் ஏற்றப்பட்டிருகின்றன.
    இந்த சிற்பத்தின் கீழ் இருப்பது சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையத்தில் சுவற்றில் பதிக்கப்பட்டிருக்கும் கம்பி வேலைப்பாட்டினால் (grill work) ஆன சுவாமி ஊர்வலம். திருக்குறுங்குடி சிற்பத்தில் உள்ளது போன்றே விளக்கமாக உள்ள ஒரு அழகிய வேலைப்பாடு இது.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

  • #2
    Re: Utsavam-Oorvalam-Purappadu

    சிற்பங்கள் சித்திரங்கள் இவற்றையெல்லாம் ஏதோ பார்த்தோம் ரசித்தோம் என்றில்லாமல் அவற்றை உள்வாங்கி ஏதோஎழுதப்பட்ட ஒரு கதையைப்படிப்பதுபோல் விவரிக்கப்பட்டுள்ள பாங்கு மிக அருமை.இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை என்ற கவியின் கூற்றை மெய்ப்பித்து விட்டீர்

    Comment

    Working...
    X