Information
मुकुन्दमाला 01/40
Information
உன்னை எப்பொழுதும் துதிக்கும்படிஅருள்வாய் !
श्री-वल्लभेति वरदेति दयापरेति
भक्त-प्रियेति भवलुण्टन-कोविदेति |
नाथेति नाग-शयनेति जगन्निवासेति
आलापिनम् प्रतिपदम् कुरु मे मुकुन्द ||
ஸ்ரீ வல்லபேதி வரதேதி தயாபரேதி
பக்த-ப்ரியேதி பவ-லுண்டன-கோவிதேதி
நாகேதி நாக-சயனேதி ஜகன்-நிவாசேதி
ஆலாபினம் பிரதிபதம் குரு மே முகுந்த !
मुकुन्द முகுந்தா ! உன்னை
श्री-वल्लभ इति ஸ்ரீ வல்லபன் (மகா லக்ஷ்மியின் பிரியன்)என்றும் ,
वरद इतिவரதன் (வரத்தைக் கொடுப்பவன் )என்றும் ,
दयापर इति தயா பரன் (தயை உடையவன்) என்றும் ,
भक्त-प्रिय इति பக்த பிரியன் (பக்தர்களிடம் பிரியமானவன்) என்றும் ,
भवलुण्टन-कोविद इतिபவ லுண்டன கோவித ( வினை அழிக்கும் வித்தகன் ) என்றும்
नाथ इति நாதன் (தலைவன் ) என்றும்
नाग-शयन इति நாக சயனன் (ஆதி சேஷனில் பள்ளி கொள்பவன்) என்றும்
जगन्निवास इति ஜகன் நிவாஸன் (உலகம் முழுதும் இருப்பவன்) என்றும்
प्रतिपदम् எப்பொழுதும்
आलापिनम् துதிக்கும்படி
कुरु मे எனக்கு அருள்வாய் !
V.Sridhar
Comment