மனிதநேய சிந்தனைகள் - 01
நேற்று, ஏதோ ஒரு காரணம்பற்றி பரோபஹாரம் குறித்து ஒரு பேச்சு வந்தது.
"மனிதனுக்கு கீழ்பட்ட பகுத்தறிவில்லாத எந்த உயிரினமும் தனக்காகவோ
தன் சந்ததிக்காகவோ எதையும் சேர்த்து வைத்துக்கொள்வதில்லை."
உடனே எறும்பு, தேனி போன்றவை சேமிக்கின்றனவே என்று சிலர் எண்ணக்கூடும்,
அவற்றின் சேமிப்பு, சந்யாஸிகளின் சாதுர்மாஸ்யம் போன்றது.
வெளியில் சென்று இறைதேட இயலாத காலத்திற்காக சிறிது சேமிக்கும்.
சரி விஷயத்துக்கு வருவோம்.
அனைத்து (மனிதன் தவிர) உயிரினங்களுமே, தன் வாழ்க்கை முழுவதையுமோ
அல்லது ஒரு பகுதியோவாவது பிறருக்கு உதவியாகத்தான் இருக்கின்றன.
இதற்கு உதாரணமாக சம்ஸ்க்ருதத்தில் கீழ்க்கண்ட ச்லோகத்தைச் சொல்வார்கள்.
छायां अन्यस्य कुर्वन्ति स्वयं तिष्टन्ति चातपे।
फलन्ति च परार्थोषु नात्महेतोहो: महद्रुमा:॥
அதாவது இதன் பொருள்,
மற்றவருக்கு நிழலைத் தந்துதவும் மரங்கள் தாங்கள் வெயிலில் நின்று தவம் செய்கின்றன.
மற்றவர்களுக்காகவே பழுக்கின்றன, தமக்கென வாழா மஹாத்மாக்களான மரங்கள்!!
இந்த ச்லோகம் நினைவுக்கு வந்தது,
அப்போது இல்லத்தில் ஒரு சர்ச்சையும் வந்தது,
அதாவது, அவைகள் படைக்கப்பட்டதே மனித வர்கத்துக்காகத்தான்,
அதனால் மனிதன் அவற்றை பெற்று வாழ்வதில் தவறில்லை என்பது போல விவாதங்கள் எழுந்தன.
மரங்கள் இருந்த இடத்தில் இருந்துகொண்டே மற்றவருக்கு பயனாக இருக்கின்றன
மனிதன் தான் பிறருக்கு உபஹாரமாக இல்லாவிடினும், அவற்றைத் தேடிச் சென்று அழிக்கிறான்.
என்று கூறியபோது, ஒரு சிந்தனை தோன்றியது.
மரங்களுக்கு இடம் பெயரும் சக்தி இன்மையால் இருந்த இடத்தில் இருந்தே
தன்னை நாடி வருவோருக்கு உபஹாரமாக இருக்கின்றன, மனிதனுக்கு கை, கால்
போன்ற அவயவங்கள் கடவுளால் படைக்கப்பட்டதே, யாருக்கெல்லாம் தன் உதவி தேவை என்பதை
தேடிச்சென்று உதவவேண்டும் என்பதற்காகவே. ஆனால், மனிதன் மாறாக,
தேடித் தேடிச் சென்று முடிந்ததையெல்லாம் மொட்டையடித்துக் (கொள்ளையடித்துக்)
கொண்டு வந்து தனக்காகச் சேர்த்துக்கொள்கிறான்!!
உங்களுக்கும் இதுபோன்ற சிந்தனைகள் வரும்போது
எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
NVS
Comment