sanskrit - story - Be deaf in the path of your goal
கதை ஸம்ஸ்க்ருத ஒலி வடிவம்
தமிழ் வடிவம்
ஓரிடத்தில் தவளைக்குலம் ஒன்றில் ஒரு போட்டி ஏற்பாடாயிற்று.
யாரொருவர் உயரமான கம்பத்தின் உச்சியை முதன்முதலில்
ஏறுகின்றாரோ அவரே வெற்றிபெற்றவர் என்று அனைத்துத்
தவளைகளும் முடிவுசெய்தன.
போட்டியில் பங்கேற்க நிறைய தவளைகள் முன் வந்தன.
போட்டியைக் காண்பதற்கு எண்ணிலடங்கா தவளைகள்
அங்கே ஸங்கமித்தன.
போட்டி ஆரம்பமாயிற்று.
தவளைகள் கம்பத்தில் ஏறத் தொடங்கின.
பார்வையிடும் தவளைகள், “அரே!, அஹோ!, ஹோ! ” என்று
பலவாறு சப்தமிட்டு, கைதட்டி போட்டியிடுவோரை
உற்சாகப்படுத்தின.
கம்பமோ மிகவும் உயரமாக இருந்தது.
நிறைய தவளைகள் சிறிது தூரம் ஏறுவதற்குள்ளேயே விழத்துவங்கின.
மநோபலம் நிறைந்த சில தவளைகள் மீண்டும் மீண்டும்
ஏற முயற்சித்தன.
ஆயினும் எந்தத் தவளையாலும் கம்பத்தின் கால் பாகத்தைக் கூட ஏற முடியவில்லை.
பார்வையாளரும், போட்டியாளரும் பரஸ்பரம் “நம் தவளைக் குடும்பத்தில்
யாராலும் கம்பத்தில் ஏற இயலாது போலிருக்கிறது” என்று சொல்லிக்கொண்டனர்.
இவ்வாறிருக்கையில் சில மீண்டும் முயற்சித்தன.
ஆயினும் மற்ற தவளைகளின் அவநம்பிக்கை நிறைந்த தாழ்ச்சியுரைகளைக் கேட்டு
பயந்தவைகளாக கீழே விழுந்தன.
ஆனால் ஒரு மெல்லிய தவளை மெது மெதுவாக கம்பத்தில் ஏற ஆரம்பித்தது.
“அந்த ஒல்லித்தவளை எப்படி கம்பத்தில் ஏறமுடியும்?” என அனைத்து தவளைகளும்
பரிகசித்தன. சிறிது நேரத்தில் அந்த ஒல்லித்தவளை கம்பத்தின் நடுப்பகுதியை அடைந்தது.
“ஓய் நீ விழுந்துவிடுவாய்!”, “ஓ! என்னே உந்தன் ஸாஹஸம்”!,
“அயே போ, உந்தன் முயற்சி வீணாகப் போகிறது!” என்ற கோஷங்கள்
மற்ற தவளைகளின் வாயிலிருந்து வெளிப்பட்டன.
இருந்தபோதிலும் அந்த ஒல்லித்தவளை தொடர்ந்து மேலே ஏறியது.
அனைத்துத் தவளைகளும் ஆச்சர்யத்துடன் பார்த்திருக்க
கம்பத்தின் உச்சிப்பாகத்தையும் அடைந்தது.
இதைக் கண்டு அனைத்தும் ஆச்சர்யத்தில் உறைந்தன.
“எப்படி அந்த ஒல்லித் தவளையால் கம்பதின் உயரே ஏற முடிந்தது?” என்று
அவை ஒன்றுக்கொன்று பேசிக்கொண்டன.
இவற்றைக் கேள்வியுற்ற அந்த ஒல்லித் தவளை கூறிற்று -
“நான் கொஞ்சம் செவிடு. லக்ஷியத்தை மனதில் வைத்துக்கொண்டு
நான் முன்னேறினேன். செவிடானகாரணத்தால் எந்த அவநம்பிக்கை ஏற்படுத்தும்
வார்த்தைகளையும் காதில் விழவில்லை. மற்றவை அப்படிப்பட்ட வார்த்தைகளைக்
கேட்டு தோல்வியடைந்தன.
லக்ஷியத்தை உறுதியாகப் பற்றி விடாமுயற்சி செய்ததால் நான் வெற்றிபெற்றேன்”
என்றது.
நாமும் நம் குறிக்கோளை அடையும் வழியில் அவநம்பிக்கை வார்த்தைகளை
செவிடராய் இருந்து பொருட்படுத்தாமல் உறுதியாய் இருக்கவேண்டும்.
கதை தமிழில் ஒலி வடிவம்