Announcement
Collapse
No announcement yet.
दौरभाग्यकरं मुखम् – Sanskrit-Story
Collapse
X
-
Re: दौरभाग्यकरं मुखम् – Sanskrit-Story
கதையின் தமிழாக்கம்
வீரதேவன் என்பவர் தானசீலனான ராஜா.
ஜ்யோதிஷத்தில் மிகவும் விருப்பம் உள்ளவர்.
தினமும் காலை எழுந்தவுடன் அவர்
கண்ணாடியில் தன் முகத்தை முதலில் பார்த்துவிட்டு
உத்யானத்திற்கு உலவச் செல்வதை வழக்காமாகக் கொண்டிருந்தார்.
இப்படிச் செய்வதால் செளாபாக்யம் கிட்டும் என்பது அவர் நம்பிக்கை.
ஒருநாள் அவர் தன்முகத்தைப் பார்க்காமல் உத்யானம் சென்றுவிட்டார்.
அங்கே ஒரு இளைஞனின் முகத்தை முதலில் பார்க்க நேர்ந்தது.
அப்போது ராஜா “இன்று முதன்முதலாக இந்த இளைஞனின் முகத்தில் விழித்துள்ளோம்,
இதற்கு பலனாக என்ன நிகழுமோ தெரியவில்லை” என எண்ணினார்.
பிறகு அவர் அரண்மனையை அடையும் வரை அவருக்கு
முகக்ஷவரம் செய்வதற்காக நாபிதர் காத்திருந்தார்.
முகக்ஷவரம் ஆரம்பம் ஆயிற்று. நாபிதரின் கவனக் குறைவால்
ராஜாவின் முகத்தில் சிறிய காயம் ஏற்பட்டது.
ராஜா கோபித்துக்கொண்டு, அவனைத் திட்டி அனுப்பிவிட்டார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு ராஜா மனதில் இவ்வாறு தோன்றிற்று -
“இன்று காலை ஒரு இளைஞனின் முகத்தில் விழித்தோம்,
அதன் பலனாகத்தான் இந்தக் காயம் ஏற்பட்டுள்ளது போலும்” - என்று.
அதனால் அவர் ஸேவகர்களை ஏவி அந்த இளைஞனைத் தேடிக்
கொண்டுவரச் செய்தார். இளைஞன் ராஜாவை வணங்கி
வினயமாக நின்றான்.
ராஜா கோபமாகக் கூறினார் - “இன்று காலையில் உன்
முகத்தில் விழித்த காரணத்தால் எனக்கு காயம் ஏற்பட்டது.
மிகவும் துர்பாக்யமான முகத்தை உடையவன் நீ. எனவே
நீ தண்டிக்கத்தக்கவன்” - என்றார்.
உடனே இளைஞன் சொன்னான் - “மஹாராஜா! என்னை தண்டிக்கவோ,
அநுக்ரஹிக்கவோ அதிகாரம் உள்ளவர் தாங்கள். தங்கள் நிர்ணயம் எதுவானாலும்
அதைக் கேள்வி கேட்கும் அர்ஹதை எனக்கில்லை.
ஆயினும் அதற்கு முன்னால் தங்களிடம் சில வார்த்தைகளை
சொல்லிக்கொள்ள விழைகிறேன். இன்று காலை நானும்
முதன் முதலாகத் தங்கள் முகத்தில்தான் விழித்தேன்.
என் முகத்தில் விழித்ததால் தங்களுக்குச் சிறிய காயம் ஏற்பட்டது,
ஆனால் தங்கள் முகத்தில் விழித்த எனக்கோ மிகக்கொடூரமான
தண்டனை கிடைக்க உள்ளது. எனவே நம் இருவரில் யாருடைய
முகம் மிகவும் துர்பாக்யகரமானது என்பதை தாங்கள்தான் கூறவேண்டும்”
என்றான்.
இதைக் கேட்டதும் ராஜா சற்று அதிர்ந்து போனார்.
மேலும் அவனிடம் எதுவும் கேட்காமல் அவனை அனுப்பிவிட்டார்.
அதிலிருந்து ராஜா இதுபோன்ற மூடநம்பிக்கையை விட்டு
விலகி உறுதியாக இருந்தார்.
இந்தக்க கதையை தமிழ் ஒலிவடிவில் கேட்க கீழுள்ள பட்டனை உபயோகிக்கவும்.
Re: दौरभाग्यकरं मुखम् – Sanskrit-Story
கேள்விகள்:
1. ராஜாவுக்கு எதில் நம்பிக்கை அதிகம்?
2. தினமும் அதிகாலையில் ராஜா எதைப் பார்ப்பார்?
3. நாபிதரின் கவனக் குறைவால் நடந்தது என்ன?
4. இளைஞன் ராஜாவிடம் என்ன கூறினான்?
5. இந்தக் கதையினால் நீவிர் அறியும் நீதி என்ன?
Comment
copyright 2020- 2025 brahminsnet.com
Powered by vBulletin® Version 5.6.5
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
All times are GMT+5. This page was generated at 12:03.
Working...
X
Comment