Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री शरणागति दीपिका : 31 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री शरणागति दीपिका : 31 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீ

    ��



    श्री शरणागति दीपिका : 31 / 59


    ��




    ஸ்ரீ ஶரணாகதி தீபிகா




    ��






    யுஞ்ஜாந , சிந்த்ய ! ஶ்ரீ வைகுண்ட பதவிக்கான , பட்டாபிஷேகம் , இப்போதே , செய்து வைக்கிறாய் !













    ��




    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��




    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||



    ��


    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:








    ��



    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி |



    ��


    दिव्ये , पदे , नियत , किंकरता - (आ)धिराज्यम् ;

    दातुम् , त्वदीय , दयया , विहित - अभिषेका: ; ।

    आदेह , पादम् - अनघा: , परिचर्यया , ते ;

    युंजान , चिन्त्य ! युव , राज , पदम् , भजन्ति ! ॥


    ��



    திவ்யே , பதே , நியத , கிங்கரதா - (ஆ)திராஜ்யம் ;

    தாதும் , த்வதீய , தயயா , விஹித - அபிஷேகா: ; |

    ஆதேஹ , பாதம் - அநகா: , பரிசர்யயா , தே ;

    யுஞ்ஜாந , சிந்த்ய ! யுவ , ராஜ , பதம் , பஜந்தி ! ||


    ��



    युंजान ............. யோகிகளால் ,

    चिन्त्य ............. தியானிக்க உரியவனே !

    दिव्ये पदे .......... வைகுந்தம் எனும் , உயர்ந்த ஸ்தானத்தில் ,

    नियत किंकरता ... நித்ய கைங்கர்யம் செய்தல் ஆகிய ,

    आधिराज्यम् ...... பேர் அரசாட்சியை ,

    दातुम् .............. கொடுப்பதற்கு ;

    त्वदीय ............. உனது ,

    दयया .............. கருணையால் ;

    अभिषेका: ......... பட்டாபிஷேகம் ,

    विहित ............. செய்யப் பட்ட ;

    अनघा: ............ பாபம் அற்ற , ப்ரபந்நர்கள் ;

    आदेह पादम् ...... இந்த சரீரம் , விலகும் வரையிலும் ;

    ते ................... உனக்குக் ,

    परिचर्यया ......... கைங்கர்யம் செய்வதால் ,

    युव राज ........... இளவரசுப் ,

    पदम् ............... பட்டத்தைப் ,

    भजन्ति ............ பெறுகின்றனர் !



    ��


    ஶ்ரீ உப.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை:




    ��

    * யோகிகளின் , தியானத்திற்கு இலக்காகின்றன , விளக்கொளி எம்பெருமானே !


    * உன் திருவடியில் , பிரபத்தியைச் செய்தவர்கள் , இதற்கு , முன்பு செய்த , பாபங்களும் ; பின்பு , அறியாமல் , செய்ய நேர்ந்த , பாபங்கள் , ஒட்டாது இருக்கவும் , பெறுகின்றனர்.


    * அவர்கள் , பின்பு , ஸ்ரீவைகுண்டத்தில் செய்யப்போகும் , நித்ய கைங்கரியம் , ஒரு பெரிய ராஜ்யத்தை ஆள்வதுவே , ஆகும் .


    * அந்த அரசாட்சிக்காக , நீ , இப்பொழுதே , உன் கருணை எனும் , அமுத வெள்ளத்தால் , அவர்களுக்கு பட்டாபிஷேகம் செய்து விட்டாய் .


    * இந்த சரீரம் , கழியும் வரை , அவர்கள் , இவ்வுலகில் , உனக்குக் கைங்கர்யம் செய்து , வருகின்றனர் .


    * இச்செயல் , அவர்கள் , இனி ஸ்ரீவைகுண்டத்தில் , பெறப்போகும் , பேர் அரசாட்சிக்கு பூர்வாங்கமான , இளவரசாட்சியாக ஆகிறது .


    * உலகிலும் , ஓர் அரசிளங்குமரன் , பின்பு , தான் பெறப்போகும் , பேரரசுக்கு முன்பு , இளவரசாட்சியைப் பெறுவது , வழக்கில் உள்ளது தானே !



    ��



    Last edited by sridharv1946; 21-01-19, 15:48.
Working...
X