Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री शरणागति दीपिका : 30 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री शरणागति दीपिका : 30 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீ

    ��



    श्री शरणागति दीपिका : 30 / 59


    ��




    ஸ்ரீ ஶரணாகதி தீபிகா













    ��


    பிரபன்னர்கள் , கடைசி வரை , பாகவத கைங்கர்யம் செய்கிறார்கள் !








    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��




    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��






    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேஶிகாய , நம:

    ��


    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��





    दत्ता: , प्रजा , जनकवत् ; तव , देशिक - इन्द्रै: ;

    पत्या - (अ)भिनन्द्य , भवता , परिणीयमाना: ; |

    मध्ये , सताम् , महित , भोग , विशेष , सिद्धयै ;

    मांगल्य , सूत्रम् - इव , बिभ्रति ! किंकरत्वम् ; ||


    ��




    தத்தா: , ப்ரஜா , ஜநகவத் ; தவ , தேஶிக - இந்த்ரை: ;

    பத்யா - (அ)பிநந்த்ய , பவதா , பரிணீயமாநா: ; |

    மத்யே , ஸதாம் , மஹித , போக , விஶேஷ , ஸித்யை ;

    மாங்கள்ய , ஸூத்ரம் - இவ , பிப்ரதி ! கிங்கரத்வம் ; ||


    ��




    जनकवत् ......... தந்தை மார்கள் போல ,

    इन्द्रै: .............. சிறந்த ,

    देशिक ............ ஆசார்யர்களால் ;

    तव ................ உனக்கு ,

    दत्ता: .............. ஸமர்ப்பிக்கப் பெற்ற ,

    प्रजा: .............. சேதநர்கள் ( பெண்கள் ) ,

    पत्या ............... நாதனான (கணவனான) ,

    भवता .............. உன்னால் ;

    अभिनन्द्य .......... கொண்டாடி ,

    परिणीयमाना: .... ஏற்றுக் கொள்ளப்பட்டு ( மணந்து கொள்ளப் பட்டு) ;

    विशेष ............. உயர்ந்த ,

    महितभोग ......... போகங்களை ,

    सिद्धयै ............ அனுபவிப்பதற்காக ;

    मांगल्य ............ தாலிச் ,

    सूत्रम् इव .......... சரடைப் போல ;

    मध्ये ............... இடைக் காலத்தில் ;

    सताम् ............. பாகவதர்களுக்கு ,

    किंकरत्वम् ........ கைங்கர்யத்தை ,

    बिभ्रति ............. நடத்துகின்றனர் !

    ��






    ஶ்ரீ உப.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    ��






    * விளக்கொளி எம்பெருமானே !




    ��






    * உலகத்தில் , தந்தையாய் உள்ளவன் , தன் பெண்ணை , ஒருவனுக்கு கொடுத்தால் , மணம் புரிபவன் , மகிழ்ச்சியோடு , அப்பெண்ணை , ஏற்றுக்கொள்வான் .


    * அப்பெண் , அவன் அணிவிக்கும் , தாலிச் சரடை , தன் கணவனால் , பல நன்மைகள் , பெறுவதற்காக , தன் சரீரம் , உள்ளவரை , அணிந்து , போற்றிக் , காத்து வருவாள் .


    * அவ்வாறே , ஆச்சாரியர்கள் , ஜீவாத்மாக்களை , உன் திருவடிகளில் , ஸமர்ப்பிக்கின்றனர் . பிரபத்தி செய்யப்பெற்ற, ஜீவர்களை , நீ , மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறாய்.


    * அவர்கள் , உன்னைப் , பரிபூரணமாய் அனுபவித்து , இன்பம் பெறுவதை , நினைத்துக்கொண்டே , இங்கு , சரீரம் விடும் வரை , இடைக்காலத்தில் , பாகவத கைங்கர்யங்களைச் செய்துகொண்டு , நல்வாழ்வை நடத்தி வருகின்றனர்.


    * இது , பதிவிரதையான பெண் , தன் மங்களச் சரட்டை , சிரத்தையுடன் , போற்றிக் காப்பது , போன்றது ஆகும் !





    ��









  • #2
    Re: 🙏 श्री शरणागति दीपिका : 30 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி த&a

    புரியும் விதத்தில் ஆமைந்துள்ளது.

    Comment


    • #3
      Re: 🙏 श्री शरणागति दीपिका : 30 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி த&a

      பாராட்டுக்கு நன்றி !

      Comment

      Working...
      X